கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு (Minister Anbil Mahesh Poyyamozhi's sudden inspection of government schools)...



 அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு (Minister Anbil Mahesh Poyyamozhi's sudden inspection of government schools)...


பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென அரசு பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அதன்படி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.


அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது:-


நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும்.


ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.


பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...



 பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (Minister of School Education visited Perundurai East Panchayat Union Middle School)...


இன்று 21/11/23 காலை 8:15 மணியளவில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் உயர்திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருந்துறை கிழக்கு பள்ளிக்கு முன்னறிவிப்பின்றி பார்வையிட்டார்.


பள்ளி வளாகம் மற்றும் கழிவறை மற்றும் காலை உணவு திட்டம் மிகச் சிறப்பாக உள்ளது என்றும் 


பள்ளி வளாகம் சுத்தமாக உள்ளது என்றும் 


காலை உணவுத் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும் பொதுவில் பள்ளிப் பார்வையில் திருப்தியாக உள்ளது என்றும் பாராட்டு தெரிவித்து வாழ்த்திச் சென்றார்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2023 - School Morning Prayer Activities...

    


திருக்குறள் : 



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:304


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.


விளக்கம்:


முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.



பழமொழி :

Good beginning makes a good ending


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


வாழ்வில் நீ

வெற்றி பெறும் போதெல்லாம்

உன் முதல் தோல்வி

நினைவுக்கு வந்தால்

உன்னை யாராலும்

வெல்ல முடியாது.


பொது அறிவு :


1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?


விடை: சென்னை


2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?


விடை:  மும்பை


English words & meanings :


 vehement –showing strong feeling.உணர்ச்சி வேகமுள்ள

versatile –Able to do different functions or activities, பல துறைகளிலும் திறமையுடைய


ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.


நவம்பர் 21


சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்



சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


உலகத் தொலைக்காட்சி நாள் 


உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.



நீதிக்கதை


 ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.


அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.


இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை களைப்படைந்துவிட்டது. பின் கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது. பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.


அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.


மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுங்குவதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.


சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.


கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது.  அந்த குரல் அது கழுதையினுடையது என்று நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதையை நரி மதிக்கவே இல்லை.


அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.


அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.


கழுத்தையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில் இருந்தது


இந்த கதையின் நீதி:


நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம்.



இன்றைய செய்திகள்


21.11.2023


*9 மாவட்டங்களில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


* தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.


* தமிழக முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 25ஆம் தேதி முதல் நிறுத்தம்.


* உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து 41 தொழிலாளர்களை மீட்பதற்கு மலையில் மூன்று இடங்களில் துளையிட முடிவு.


*முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி ரோஸ்லின் கார்ட்டர் காலமானார்.


Today's Headlines


* CM Stalin inaugurated 4272 flats in 9 districts.


 * Chance of very heavy rain in Tamil Nadu for the next three days.


 * Aavin's green milk packet will be stopped from 25th onwards all across Tamil Nadu.


 * Uttarakhand tunnel accident decided to drill three places in hill to rescue 41 workers.


 *Former US, First Lady Roslyn Carter has passed away.

 

மன்ற செயல்பாடுகள் 2023-2024 - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2023, நாள்: 20-11-2023 (Forum Activities 2023-2024 - Conduct of Competitions for School Students - November 2023 - Topics for Competitions - Director of School Education Proceedings Rc.No: 019528/ M/ E1/ 2023, Dated: 20-11-2023)...


 மன்ற செயல்பாடுகள் (Club Activities) 2023-2024 - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் -  பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2023, நாள்: 20-11-2023 (Forum Activities 2023-2024 - Conduct of Competitions for School Students - November 2023 - Topics for Competitions - Director of School Education Proceedings Rc.No: 019528/ M/ E1/ 2023, Dated: 20-11-2023)...



>>> நவம்பர் 2023 - போட்டிகளுக்கான தலைப்புகள் -  பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2023, நாள்: 20-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET)  Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 


அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 



TET பதவி உயர்வு வழக்கு 


இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது 


வழக்கு dismiss செய்யப்படவில்லை 


இடைக்கால தடை வழங்கப்படவில்லை 


1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது 


இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.





*AIFETO..20.11.2023*


*உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TETவழக்கின் விசாரணைத் தொகுப்பு...*


🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*நாம் புலனப் பதிவில் ஏற்கனவே தெரிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET  சம்பந்தமான வழக்கு இன்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு வழக்கறிஞர்களும் அவர்களுடன்  கூடுதல் வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இவ்வழக்கினை இரு அமர்வு நீதியரசர்கள் ஹரிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் விசாரித்தார்கள்.*


 *அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்  கவிதா ராமேஸ்வர்  வாதாடினார்கள்.*


*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள்  உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும்  வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை  வழங்குவதாக  விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*


 *தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*


 *இந்த வழக்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள்  (டிட்டோஜாக்) சார்பில்  உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள  திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய  திடமிட்டு இருக்கிறோம்.*


 *எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*


 *மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வழக்கிற்கு வலு சேர்க்கும்!.. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*


*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.*



 *மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு  தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுள்ள தகவல் தொகுப்பாகும்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*


*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*


ஆன்லைன் பண மோசடிகளும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளும் - வாடிக்கையாளர் விழிப்புணர்வு வழிகாட்டி - பாரத ஸ்டேட் வங்கி (SBI) தகவல் பாதுகாப்புத் துறை வெளியீடு (Online Money Frauds and Ways to Protect Against Them - Customer Awareness Guide - State Bank of India Information Security Department Publication)...



 ஆன்லைன் பண மோசடிகளும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளும் - வாடிக்கையாளர் விழிப்புணர்வு வழிகாட்டி - பாரத ஸ்டேட் வங்கி (SBI) தகவல் பாதுகாப்புத் துறை வெளியீடு (Online Money Frauds and Ways to Protect Against Them - Customer Awareness Guide - State Bank of India Information Security Department Publication)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன? (A 10th standard student of Kadalady Government Higher Secondary School committed suicide in the classroom.. What happened in Ramanathapuram?)...



 கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன? (A 10th standard student of Kadalady Government Higher Secondary School committed suicide in the classroom.. What happened in Ramanathapuram?)


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவன் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தீபக் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கடலாடி அரசுப் பள்ளியில் வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், A.புனவாசல் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், இன்று(நவ.20) காலை பள்ளிக்கு சென்ற தீபக் வகுப்பறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு சென்ற கடலாடி போலீசார் மாணவர் தீபக் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவர் தீபக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...