கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

 TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு (TNPSC Group 2 Exam Results will be released on 12 January 2024 - TNPSC Notification)...





ஜனவரி 12-இல் குரூப் 2 தேர்வு முடிவுகள்...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்துப் பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.கடந்த டிச.15, 2022ஆம் ஆண்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023ஆம் ஆண்டில் கடந்த மார்ச்.15, 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.


தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடுச் செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல், வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய சவால்கள் இருந்த போதிலும், தொகுதி-II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி-II தேர்வு தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும்" -அமைச்சர் தங்கம் தென்னரசு...

 2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும்" -அமைச்சர் தங்கம் தென்னரசு (After January 2024 fresh application for women's entitlement amount will be given" -Minister Thenarasu)...


2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், 'இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். இதனை உதவித்தொகையாக கொடுக்கவில்லை. உரிமைத்தொகையாக கொடுக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.



காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளுக்கான தேர்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அனுமதி அட்டை வெளியீடு...



553 காலியிடங்கள் - காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளுக்கான தேர்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அனுமதி அட்டை வெளியீடு (முதற்கட்டத் தேர்வு 21 டிசம்பர் 2023 அன்று நடைபெறும்): விண்ணப்பதாரர்கள் தங்களின் அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் ( Release of Admit Card for the Recruitment for the Post of Examiner of Patents and Designs against 553 vacancies (Preliminary Exam to be held on 21 December 2023): The candidates are advised to download their Admit Card from the website exams.nta.ac.in/DPIIT/)



>>>> Click Here to Download...


வாட்ஸ்அப் புதிய அப்டேட்ஸ் - இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin' செய்து வைக்கலாம்...

 வாட்ஸ்அப் புதிய அப்டேட்ஸ் - இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin' செய்து வைக்கலாம் (WhatsApp New Updates - Now you can 'Pin' important WhatsApp messages)...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் - துறை வாரியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள் - கிருஷ்ணகிரி மாவட்டம்...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் - துறை வாரியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் நடைபெறும் இடங்கள் -  கிருஷ்ணகிரி மாவட்டம் (Hon'ble Tamil Nadu Chief Minister's "Chief Minister with People" Program Camp - Department wise Services Offered and Venues - Krishnagiri District)...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனவு ஆசிரியர் விருது 2023 - விருது பெறும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - DSE செயல்முறைகள்...


கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா (Kanavu Aasiriyar Award Ceremony) 19.12.2023 அன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுதல் - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - DSE செயல்முறைகள் (Dream Teacher Award 2023 – Instructions and Guidelines for Awardee Teachers – DSE Proceedings)...



>>> கனவு ஆசிரியர் விருது 2023 - விருது பெறும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - DSE செயல்முறைகள்...


ஆதார் சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் ரூ.50,000 அபராதம்...


ஆதார் சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் ரூ.50,000 அபராதம்...


ஆதார் பதிவு செய்வது மற்றும் அதில் திருத்தங்கள் மேற்கொள்வது போன்ற சேவைகளுக்கு ஆதார் மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால், அவை சஸ்பெண்ட் செய்யப்படுவதோடு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழிநுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் லோக்சபாவில் தெரிவித்தார்.


இது தொடர்பாக லோக்சபாவில் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வ பதிலில் அவர் கூறியதாவது:


ஆதார் எண்ணை பதிவு செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவை பொது சேவை மையங்கள், இ-- - சேவை மையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட வங்கிகள் போன்ற துறைகளில் பதிவு செய்துள்ள ஏஜன்சிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஏஜன்சிகள், மிகவும் கவனத்துடன், கண்டிப்பான அளவுகோல்களை வைத்து தேர்வு செய்யப்படுகின்றன.


இவர்கள் கைரேகை, கருவிழி பதிவு, முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் விசாரிக்கப்படும்.


அவை உறுதிப்படுத்தப்பட்டால், அந்த ஏஜன்சியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சஸ்பெண்ட் செய்வதோடு, 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கும். 


அதிக கட்டணம் தொடர்பான புகார்களை யு.ஐ.டி.ஏ.ஐ., இணையதளத்தில் தெரிவிக்கலாம் அல்லது 1947 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...