கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - விடைகள்...

 

 இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - விடைகள் (Term 2 - 4th Standard - Social Science - Answers)...


1) அ

2)ஈ

3)அ

4)இ

5) ஈ

6)ஈ

7) ஈ

8) ஆ

9) ஆ

10) ஈ


11) ஆந்திர பிரதேசம் (5 ல் உள்ளது) 

12) மலை

13) தோட்டிமலை

14) தாமிரபரணி

15) தாம்பரம்

 

16)சரி

17) தவறு

18) சரி

19) தவறு

20)சரி


21) 3

22) 4 

23)2

24) 5

25) 1


26) நள்ளி 

27) வைகை

28)இலையுதிர் காடுகள்

29) படகு

30) காவல்நிலையம்


முதலமைச்சரின் பரிந்துரையில் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் - ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு...



பிற்படுத்தப்பட்டோர் நலன் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு...


ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு- முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்


ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு...




TNSED Schools App New Version: 0.0.93 - Updated on 20-12-2023 - Ennum Ezhuthum Co-Scholastic module added & Bug Fixes & Performance Improvements...

 

TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum Co-Scholastic module added...


*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  20 DECEMBER 2023


*_Version: Now 0.0.93


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis




வளரறி மதிப்பீடு (அ) , (ஆ) சார்ந்த சிக்கல்கள் - TNSED App version 0.0.93 க்கு புதுப்பிக்கவும் - TN EE MISSION...

 

வளரறி மதிப்பீடு (அ) , (ஆ) FA (a) & FA (b) சார்ந்த சிக்கல்கள் - TNSED App version 0.0.93 க்கு புதுப்பித்து Logout செய்து Login செய்து கொள்ளவும்.


1. வளரறி மதிப்பீடு (அ) , (ஆ) சார்ந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளது.


2. முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல், மாணவர் தரநிலை அறிக்கையை பதிவிறக்கம் செய்யாமல் இருந்தால் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி.


TN EE MISSION.



சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - அரசு மருத்துவமனையில் அனுமதி...

 லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரசின் காலை உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் - பள்ளி குழந்தைகள் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி...


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை உணவு அருந்தி உள்ளனர். இதில் ஒரு மாணவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனை பள்ளி ஆசிரியரிடம் மாணவர் கூறியுள்ளார் இதனை அடுத்து அடுத்தடுத்து 19 மாணவர்கள் தமக்கும் வயிறு வலிப்பதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமை ஆசிரியை, வயிற்று வலி என கூறிய 19 மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனைவரும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளனர்.


இந்த சம்பவம் அறிந்து வந்த மருத்துவ மற்றும் ஊரக இணை இயக்குநர் இணை இயக்குனர் லட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். தற்பொழுது லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், மேலும் காலை உணவு அருந்திய 20 மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என இணை இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் மோகன் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.




நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...



 ராமநாதபுரத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்...



சென்னையைச் சேர்ந்த நீதிமணி, அவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் `புல்லியன் பின்டெக்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர். இவர்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் 9 சதவீத வட்டி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற்றனர்.



இந்நிலையில், 2020 மார்ச் முதல் முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகைக்கு வட்டித் தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து, ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன், காரைக்குடி ஆசிரியை கற்பகலில்லி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.



அதன்பேரில், ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நீதிமணி, ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த வழக்கில் தலைமை முகவர்களாகச் செயல்பட்டு, பணமோசடியில் ஈடுபட்டதாக கும்பரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார் (45), ராமநாதபுரம் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் சி.முருகவேல் (42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும், மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டு கைதான ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார், ஆசிரியப் பயிற்றுநர் முருகவேல் ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார


பள்ளி மாணவனை கோவை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

 17 வயது பள்ளி மாணவனை கோவை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது...



சென்னை அருகே பள்ளி மாணவனுடன் தங்கியிருந்த ஆசிரியை, போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.


இகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு இருந்ததும், அந்த ஆசிரியை ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்று கோயம்புத்தூர் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஆசிரியையின் அலைபேசி எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.


பின்னர், கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு அந்த ஆசிரியை தங்கி இருந்த இடத்தை சோதனை செய்தபோது அவருடன் காணாமல் போன மாணவனும் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து வந்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை எப்சிபா (28). இவர், கடந்த 2018ல் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது. மேலும், மதுராந்தகம் அருகே ஒரத்தி பகுதியில் வேலை செய்தவர் ராஜினாமா செய்து பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார்.


அப்போது, பள்ளியில் படிக்கும் மாணவனுடன் சகஜமாக பழகியதும், தனக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது வாங்கி வரச் சொல்லியும், தான் தங்கியிருந்த அறைக்கு மாணவனை அழைத்து சென்றபோது, அவன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறிய ஆசிரியை, இந்த பிரச்னை வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்று நினைத்து வேலையை ராஜினாமா செய்து விட்டு கோயம்புத்தூர் சென்று விட்டதாகவும், ஆனால், மாணவன் விடாமல் தன்னை தேடி வந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் வேறு வழியின்றி அவனுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். 

இருப்பினும், ஆசிரியையுடன் இருந்த மாணவன் மைனர் என்பதால், இவ்வழக்கு தாம்பரம் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை எப்சிபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* சிக்கியது எப்படி?

ஆசிரியை எப்சிபா, மாணவனை கோவைக்கு அழைத்து வந்த பின்னர் சுமார் ஒரு வார காலம் தனது செல்போனை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். சமீபத்தில்தான் செல்போனை பயன்படுத்தி, தோழிகளிடம் தகவல் கூறியுள்ளார். அப்போது, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையில் தனியாக வீடு எடுத்து, மாணவனுடன் தங்கியுள்ளேன், இதை வெளியில் சொல்ல வேண்டாம் எனக்கூறியுள்ளார். இதன்பிறகு போலீசார், அந்த ஆசிரியையின் செல்போன் டவரை கண்காணித்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...