கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 3 - ஜனவரி ஐந்தாவது வாரம் & பிப்ரவரி முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 3 - January 5th Week & February 1st Week - Tamil and English Medium)...

 

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 3 - ஜனவரி ஐந்தாவது வாரம் & பிப்ரவரி முதல் வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 3 - January 5th Week & February 1st Week - Tamil and English Medium)...



மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-03-2024...

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-03-2024...


 பிப்ரவரி 9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...


உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலியிடங்கள் இருப்பதால் tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.



உலக ஈர நில தினம் போட்டிகள்...



 உலக ஈர நில தினம் போட்டிகள் - World Wetlands Day Competitions...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களில் 3 பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசு - அமைச்சர் சிவசங்கர்...

 


அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களில் 3 பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசு - அமைச்சர் சிவசங்கர்...


 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (01.02.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தளமான https://www.tnstc.in, & etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அது போன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2024 மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனை நடைமுறை படுத்தும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான மூன்று (3) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (01.02.2024) தேர்வு செய்தார், அதன் விவரங்கள் கீழ்வருமாறு, ஜனவரி-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- விரைவில் வழங்கப்படும்.

1. பயண சீட்டு எண்: T50959052, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: ESSAKKI MURUGAN.S, ரொக்கப்பரிசு: ரூ. 10,000

2. பயண சீட்டு எண்: T51210787, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: SEETHA.K, ரொக்கப்பரிசு: ரூ. 10,000

3. பயண சீட்டு எண்: T51655633, தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர்: IMTEYAZ ARIF, ரொக்கப்பரிசு: ரூ. 10,000.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2024...

 

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 417:


பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.


விளக்கம்:

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.



பழமொழி : 


Faults are thick when love is thin


வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம்


பொன்மொழி:


Never discourage anyone who makes continual progress,no matter how slow. 


ஒருவர் எவ்வளவு மெதுவாக தொடர்ந்து முன்னேறினாலும் அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள்..


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்

ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை

துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு

ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.

திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்

வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Clove - கிராம்பு

Clump - படலம் 

Cockroach - கரப்பான் பூச்சி 

Coconut - தேங்காய் 

Comfort - வசதியாக


ஆரோக்கியம்


கொழுப்புச் சத்து பிரச்சனையை தீர்ப்பதில் பயறு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பச்சைப் பயறு, தட்டைப் பயறு, சோயா பயறு என பயறு வகைகள் அனைத்துமே சைவ உணவு உண்பவர்களின் வரப்பிரசாதம். புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகள் 'ஏழைகளின் இறைச்சி' என்றும் கூறப்படுகிறது.


முதிராத பயறுகளில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்தும் உள்ளன.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 02


1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.


1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.




பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)




சிறப்பு நாட்கள்


ஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாள் (உருசியா)

கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து)

உலக சதுப்பு நில நாள்



நீதிக்கதை



ஆணவம் வேண்டாம் 


மாவீரர் அலெக்ஸாண்டர் உலகப் புகழ்பெற்றவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சி ‘ஆணவம் வேண்டாம்’ என்பதை  காட்டுகிறது.


அலெக்சாண்டர் கிரேக்க நாட்டை விட்டு புறப்பட்டபோது அவருடைய நண்பர்கள் அவரை பார்த்து, “நீங்கள் ஒருவேளை இந்தியாவுக்கு போனால் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு துறவியை கிரேக்கத்துக்கு கூட்டி வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தியாவுக்கு வந்த அலெக்சாண்டரும் அதை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நாள் துறவி ஒருவரை தேடிக்கொண்டு புறப்பட்டார்.


ஒரு கிராமத்தின் வழியாக அலெக்சாண்டர் செல்லும்போது நதிக்கரை ஓரமாக ஒரு துறவி இருப்பதாக அந்த கிராமத்து மக்கள் கூறினார்கள். “நீங்களே சென்று அந்த துறவியை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார் அலெக்சாண்டர். கிராமத்து மக்கள் அவரை பார்த்து சிரித்தார்கள். 


அலெக்சாண்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் கூறினார்கள், “கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் வரமாட்டார்கள்” இதை கேட்டு கோபமடைந்த அலெக்சாண்டர் தன் உடைவாளை உருவிக்கொண்டு துறவி தியானம் செய்து கொண்டிருக்கும் ஆற்றங்கரையை நோக்கி புறப்பட்டான்.



துறவி அலெக்சாண்டர் வந்திருப்பதை கவனிக்காமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அலெக்சாண்டர் அந்த துறவியை பார்த்து, “நான் தான் உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டர். என்னை கண்டு மரியாதை கொடுக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்றான். 


துறவி மெதுவாக கண்களை திறந்து அலெக்சாண்டரை பார்த்து, “பெரிய மனிதர்கள் எவருமே தங்களுடைய பெரிய மனிதத் தன்மையை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. அப்படி அவர்கள் முயற்சி செய்தால் அவர்கள் சிறியவர்கள் என்பதற்கு தான் அடையாளம்” என்றார். 



அலெக்சாண்டர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான். அவன் துறவியைப் பார்த்து என் பின்னால் வரும்படி உனக்கு ஆணையிடுகிறேன் என்றான். துறவி சிறிதும் கோபப்படாமல், “யாருக்கு நீ ஆணை இடுக்கிறாய்? எங்களைப் போன்ற துறவிகள் எவருடைய உத்தரவுக்கும் கட்டுப்படுவதில்லை. இறைவனுக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்படுவோம். இறைவனைத் தவிர வேறு யாருக்குமே, எங்களுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை” என்றார். 


உடனே அலெக்சாண்டர் கோபத்துடன் துறவியை பார்த்து, “நீ என்னுடன் வர மறுத்தால் உன் தலையை வெட்டி சாய்ப்பேன்” என்றான். 



உடனே துறவி, “முட்டாளே, நான்  என்ற ஆணவத்துடன் நீ ஆடுகின்றாய். நீ ஏதோ என்னுடைய உடல் எனக்கு சொந்தமானது என்று எண்ணி என்னை மிரட்டுகிறாய், நான் என்னும் உன் ஆணவமே உன்னை அழிக்கும். எனவே அதை விட்டுவிடு என் போன்ற துறவிகள் எதற்குமே அஞ்ச மாட்டார்கள். அதனால் தான் பெரியோர், “ஆண்டிக்கு அரசனும்  துரும்பு” என்றார்கள்.


அதனால் “நான்” என்று ஆணவத்தை விட்டு ஆகவேண்டிய நல்ல செயல்களைப் பார்”என்றார்.


உடனே அலெக்சாண்டர் ஆணவம் நீங்க பெற்றவனாய் தன் வாளை அந்த துறவியின் பாதங்களில் வைத்து வணங்கி விட்டு சென்றான்.


நீதி : மனிதனுக்கு நான் என்ற ஆணவம் கூடாது. அது அவனையே அழித்துவிடும். எனவே ஆணவத்தை விட்டு நல்ல வழியில் நடக்க வேண்டும்.





இன்றைய முக்கிய செய்திகள் 


02-02-2024 


அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களில் 3 பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசு - அமைச்சர் சிவசங்கர்...


உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு; செல்போன் விலை 5% குறைய வாய்ப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்...


இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூ.4,157.70 கோடி மதிப்பீட்டிலான 18,788 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு...


எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு...


தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு.. உ.பி.க்கு ரூ.19,575 கோடி: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்...


புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு ஒரு மாதத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...


10 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருவாய் அதிகரிப்பு… வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை : மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு...


Today's Headlines:

02-02-2024 


Rs.10 thousand cash prize for 3 passengers who booked in government buses - Minister Sivashankar...


 Reduction of import duty on components; Cell phone prices likely to fall by 5%: Union Finance Ministry informs... 


18,788 works valued at Rs 4,157.70 crore are being carried out, which is unprecedented in the history of Hindu Religious Charities: Minister Shekhar Babu... 


Kilambakkam bus terminal with all facilities in mind for the future: High Court commends Govt...


Rs 6,331 crore allocation for Tamil Nadu railway projects.. Rs 19,575 crore for UP: Union Minister Ashwini Vaishnav informs... 


New voter ID card for 18 lakh people including newly enrolled voters in a month: Chief Electoral Officer of Tamil Nadu informed...


 Increase in average income of people in 10 years… No change in income tax rate: Central Budget announced…

மருத்துவ அலுவலர் பணியிடங்கள் கலந்தாய்வுக்கான செய்தி குறிப்பு...



Press Release : MRB Counselling Intimation...

மருத்துவ அலுவலர் பணியிடங்கள் கலந்தாய்வுக்கான செய்தி குறிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஹரிதாஸ் - திரைப்படம் - தரவிறக்கம் செய்ய வலைதள இணைப்பு...



ஹரிதாஸ் - திரைப்படம் - தரவிறக்கம் செய்ய வலைதள இணைப்பு...



 >>> Click Here to Download...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...