கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ப்ளூ ஆதார் அட்டை என்பது என்ன? இதை எப்படி பெறுவது? இது ஏன் முக்கியம் ?



 ப்ளூ ஆதார் அட்டை என்பது என்ன? இதை எப்படி பெறுவது? இது ஏன் முக்கியம் ?


அது என்ன ப்ளூ ஆதார் கார்டு? இதை எப்படி பெறுவது? ஏன் முக்கியம் ?



நீல நிற ஆதார் அட்டை என்பது பால ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது, 


இது இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக குறிப்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை ஆகும். 


பெரியவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இது நீல நிறத்தில் உள்ளது.


பயோமெட்ரிக் தரவு (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) சேகரிக்கப்படும் வழக்கமான ஆதார் அட்டையைப் போலல்லாமல், நீல ஆதார் அட்டைக்கு குழந்தையிடமிருந்து எந்த பயோமெட்ரிக் தகவலும் தேவையில்லை.


ஏனெனில் சிறு குழந்தைகளிடமிருந்து பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது சவாலானது மற்றும் நம்பமுடியாதது. அதற்குப் பதிலாக, குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படத்தின் அடிப்படையில் இந்த கார்டு உருவாக்கப்படுகிறது.


இதற்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். ஆதார் பதிவு மையத்தைப் பார்வையிடவும், உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறியவும். 


UIDAI இணையதளத்தில் (https://uidai.gov.in/) மையங்களின் பட்டியலைக் காணலாம்.


இணையத்திலேயே இதற்கான புக்கிங் செய்யலாம். அல்லது அதிலேயே பார்ம் டவுன் லோடு செய்து அதை நிரப்பி ஆதார் அலுவலகத்தில் கொடுக்கலாம். 


இல்லையென்றால் பதிவு மையத்தில், நீங்கள் ஆதார் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டும். யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து படிவத்தை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அதன்பின் குழந்தையின் UID (தனித்துவ அடையாள எண்) அவர்களின் பிறப்பு அடையாள விவரம், மக்கள்தொகைத் தகவல் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரின் UID உடன் இணைக்கப்பட்ட முகப் புகைப்படம் ஆகியவற்றை கொடுக்கலாம்.


அதன்பின் 5 வயது தாண்டியதும் ப்ளூ ஆதார் அட்டைக்கு பதிலாக சாதாரண ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.



நாளை (27-02-2024) முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்...



 நாளை (27-02-2024) முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்...


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவிப்பு.


பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம்.


315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தம்.


வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்.



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-02-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 72:


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


விளக்கம்:


அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.




பழமொழி : 


The face is index of the mind


அகத்தின் அழகு முகத்திலே



பொன்மொழி:


“If you judge people, you have no time to love them.”


 நீங்கள் மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால் அவர்களிடம் அன்புகாட்ட உங்களுக்கு நேரம் இருக்காது.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - ஏடிஸ் 

தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்

பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.

தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.

பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Error - தவறு 

Especially - சிறப்பாக

Estimate - மதிப்பிடு 

Evening - மாலை 

Evict - காலி செய்


ஆரோக்கியம்


கற்பூரவல்லி: இதற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மையும், நச்சுமுறிவுத் தன்மையும் உள்ளதால், இதை துளசி மற்றும் மிளகுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, சளி மற்றும் இருமல் குணமாகிறது. பல வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 26


1935 – இராபர்ட் வாட்சன்-வாட் என்பவர் இங்கிலாந்தில் நடத்திய பரிசோதனை ஐக்கிய இராச்சியத்தில் ரேடாரை உருவாக்க வழிசமைத்தது.


1971 – ஐநா பொதுச் செயலர் ஊ தாண்ட் இளவேனிற் புள்ளியை புவி நாளாக அறிவித்தார்.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (குவைத்)



நீதிக்கதை


ஒரு காளையின் அறிவுரை 


ஒரு விவசாயிக்கு விசுவாசமான காளைமாடு ஒன்னு இருந்தது. அது எல்லா விதத்திலும் அவருக்கு உதவியாய் இருந்தது. ஒரு நாள் அது பக்கத்துல கொசு ஒன்னு வந்துச்சு. அந்த கொசு காளை கிட்ட சொல்லிச்சாம், “நீ தினமும் அந்த விவசாயிக்கு நிறைய உதவி பண்ணுற, நீ தினமும் அந்த விவசாயியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போற. அதுக்கு பதில் உனக்கு என்ன தான் கிடைக்குது வெறும் புல் மட்டும்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள்”.


அதுக்கு அந்த காளைமாடு சொல்லிச்சாம், “இங்க பாரு நண்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மனிதர்களுக்கு உதவி பண்றது எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க என்ன ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்க”. அதுக்கு அந்த கொசு சொல்லுச்சாம், “இந்த மனிதர்கள் அவர்களோட தேவைக்காக தான் உன்னை பயன்படுத்துறாங்க அதனால தான் நான் இந்த மனிதர்களுக்கு உதவி பண்றது இல்லை.



அதுக்கு பதில் அவர்களோட ரத்தத்தை நான் உரிந்து விடுவேன், ஆனால் நீ ரொம்ப பெரிய உருவமாக இருந்தும், இந்த மனிதர்களுக்கு நீ அடிமையாய் இருக்கிறாய். ஆனா என்ன பாரு நான் ரொம்ப சின்னதா இருக்கேன் ஆனாலும் அவர்களுடைய ரத்தத்தை  உரிந்து கொண்டு இருக்கிறேன்”.


அந்த காளை மாடு சொல்லுச்சு, “நான் மனிதர்களுக்கு ஏன் உதவி பண்ணுவேன் தெரியுமா, அவங்க எனக்கு சாப்பாடு கொடுக்குறாங்க, தங்க இடம் கொடுத்து இருக்காங்க, உடம்பு சரி இல்லனா ரொம்ப நல்லா கவனிக்கிறார்கள், நான் வேலை செய்தால் பாசத்தோட தட்டிக் கொடுக்கிறார்கள்.  அதனால தான் நான் அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கிறேன்” என்றது.



அதற்கு கொசு சொல்லுச்சு “ஆனா நீ பண்ற வேலைக்கு இது ரொம்ப கம்மியா தெரியலையா? நீ ராத்திரியும் பகலும் வேலை செய்தால் உனக்கு அன்பு மட்டும்தான் கொடுக்குறாங்க. ஆனால் நான் உன்னை விட ரொம்பவும் பரவாயில்லை, பார்க்க ரொம்ப குட்டியா இருந்தாலும் ஒருநாளும் அவர்களுக்கு நான் அடிமையாக இருந்ததில்லை” என்றது கொசு.



அதற்கு காளை மாடு சொல்லுச்சு, “நீ ரொம்பவே முட்டாளா இருக்க,  இதுக்கெல்லாம் நீ பெருமை படவே கூடாது. மனுஷங்களுக்கு ஏன் உன்னை பிடிக்கலைன்னா நீ அவங்களோட ரத்தத்தை உரியுறதுனால, அவங்களுக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேங்குற, நீ ஒரு பூச்சியாக மட்டும்தான் அவங்களுக்கு தெரியுற” என்றது.


“அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றது கொசு. மாடு சொன்னதை கேட்காமல் அந்த கொசு அங்கிருந்து பறந்து போனது. எப்பவும் போல ஒரு நாள் அந்த விவசாயி மேல் போய் உட்கார்ந்து கொசு அவரோட இரத்தத்தை உரிய தொடங்கியது. விவசாயி அந்த கொசுவை ஒரே அடி அடித்து விட்டார், அதுவும் செத்துப் போச்சு. கெட்டது செய்தால் கெட்டதே விளையும்.


நீதி : எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய நேரிடும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


26-02-2024 


மக்களவை தேர்தல் வருவதால் அடுத்த 3 மாதங்களுக்கு வானொலி உரை இருக்காது: பிரதமர் மோடி பேச்சு...


வேலையில்லா திண்டாட்டத்தால் தினமும் 12 மணி நேரத்தை வீணாக்கும் இளைஞர்கள்: செல்போன் பயன்பாடு குறித்து ராகுல் கவலை...


ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை...


சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...


அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் கூகுள் பே செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு...


பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமனத்தில் சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு உயர்வு...




Today's Headlines:

26-02-2024


There will be no radio speech for the next 3 months due to Lok Sabha elections: PM Modi speech... 


Youth wasting 12 hours a day due to unemployment: Rahul worries about cell phone usage...


3 new criminal laws to come into effect from July 1...


Rs 3 lakh financial assistance to the family of the person who died in the firecracker factory explosion at Sindapalli near Chatur: Chief Minister M.K.Stal's order... 


Google has announced that the service of Google Pay App will be stopped from June 4th in the United States... 


Upper age limit fixed in special rules for direct appointment of teachers in schools increased...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளிகளில் சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...


 அரசுப் பள்ளிகளில் சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...



பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...


 பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...