கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...


பணி நிரவல் - TRB மூலம் இடைநிலை ஆசிரியர் நியமனம் - பின்பற்ற வேண்டிய கால அட்டவணை குறித்த அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 வெளியீடு...



G.O. Ms. No. 48, Dated: 21-02-2024 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் -31.05.2024க்குள் பணி நிரவல் செய்தல் வேண்டும் - ஆசிரியர் கலந்தாய்வு ஜூன் -30 க்குள் நடத்தி முடித்தல் வேண்டும் - அரசாணை வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...

 

 இன்று (28.02.2024) பிற்பகல் 04.00 மணிக்கு NMMS Results தேர்வு முடிவுகள்  2023-2024 வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...

 

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்...


💥 2024-2025 ஆம்  கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை - 01.03.2024 முதல் தொடக்கம்...


💥 தொடக்கக் கல்வி பதிவேடு...


💥 பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்...


💥 விழிப்புணர்வுடன் பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்...


💥 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்...


💥 பேரணியில் இடம்பெறத்தக்க வாசகங்கள்...


💥 பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்...


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள் ந.க.எண்: 079119/ எம்/ இ1 / 2023, நாள்: 27-02-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 74:


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:


அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்..



பழமொழி : 


The mills of God grind slow but sure.


அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்



பொன்மொழி:


 “This too shall pass.” 


இது கூட கடந்துபோகும்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Extend - நீட்டித்தல் 

Faint - மயக்கம்

Faith - விசுவாசம்

Famous - பிரபலமான 

Fast - வேகமான 


ஆரோக்கியம்


கற்றாழை: சிறிய புண்கள், வெட்டுக் காயங்கள், தோல் எரிச்சல் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 28


1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.


2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)

கலேவலா நாள், (பின்லாந்து)

தேசிய அறிவியல் நாள்

ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)



நீதிக்கதை


பேசும் குகை 


வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.


உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது. 



மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.


“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.


நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.


“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.


அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


28-02-2024 


சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்...


ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்...


ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி...


கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி...


பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


4 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் மகிழ்ச்சி...



Today's Headlines:

28-02-2024


School Education Minister Anbil Mahesh Poiyamozhi appealed to the teachers who have been protesting continuously for a week demanding equal pay for equal work... 


Chief Minister M.K.Stalin praised the Tenkasi couple who prevented the train accident.. announced a reward of Rs.5 lakh... 


Prime Minister Modi introduced 4 astronauts who will go to space under Gaganyaan project...


Being denied a job because of pregnancy is unconstitutional: High Court takes action... 


Family heirs of government doctors who died during service will now be given government jobs: Tamilnadu government notification... 


Passenger rail ticket fares lowest after 4 years: Passengers happy...

இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...

 


 இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...


தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

.

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக்கூட்டங்களை நடத்தியுள்ளது.மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. 


அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...



>>> செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பள்ளிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்...


NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...



 NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...



NMMS FEBRUARY - 2024 Examination Results - Website Address Published...



Click Here to Know Results...


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்...


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!

 _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


வழக்கமாக தனக்கான வருமான வரியை ஊழியரே தோராயமாக முடிவு செய்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரிடம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாது டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்குமேல் வரி வரும் சூழலில் தனியாக Online / வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர்.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வருமான வரியை வசூலித்துக் கட்டவும், இறுதி நேரத்தில் ஊழியர் தனியாக Online / வங்கி செலான் மூலம் கட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென கண்டிப்பான முறையில் வருமானவரித்துறை கருவூலகங்களை அறிவுறுத்தி வருகிறது. இதைப் பின்பற்றாத ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.


இதன்படி, வரும் ஆண்டிற்கான ஆண்டு மொத்த ஊதியத்தை வைத்து ஊழியருக்கான வருமான வரி எவ்வளவு என்பதைத் தோராயமாக IFHRMS (களஞ்சியம்) மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திரத் தவணையை மதிப்பிட்டு மாதந்தோறும் தானாகவே பிடித்தம் செய்துவிடும். ஊதிய உயர்வு & அகவிலைப்படி உயர்வின் போதும் அதற்கேற்ப வரியில் மாற்றம் ஏற்படும்.


அதன் முதல்படியாக, ஊழியர்கள் தாங்கள் எம்முறையில் (OLD / NEW) வரிக் கணக்கீடு செய்ய உள்ளனர் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குத் தெரியப்படுத்தி உரிய தரவுகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் பதிவேற்ற வேண்டும் என்று கருவூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும்.


டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதும், இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.


வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.


இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.


நினைவில் கொள்க.

Form 16Aல் மாதந்தோறும் & காலாண்டு வாரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தொடர்பான விபரங்கள் இருக்கும்.

Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.


நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.



>>> வருமான வரியினை தானாக பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பு...