கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024...



 புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகள்  மாநகராட்சிகளாக தரம் உயர்வு...


தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சி...


தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு...


🛑புதுக்கோட்டை

🛑நாமக்கல்

🛑திருவண்ணாமலை

🛑காரைக்குடி


4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு



>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.



இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.


இதன்படி, இவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.


இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது.


இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 வெளியீடு...



மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 வெளியீடு...


நிதி உதவி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் மூவாமிர்தம் அம்மையார் நினைவு நிதி உதவித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது...


Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme - Pudhumai Penn Scheme - Extending to girl students studying in government aided schools, G.O. Ms. No. 16, Dated: 11-03-2024 Released...



>>> Click Here to Download G.O. Ms. No. 16, Dated: 11-03-2024...


வாரம் நான்கு மணி நேரம் பணி - மாதம் ரூ.7000 ஊதியத்தில் 100 கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 15-03-2024...

 

25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் வாரம் நான்கு மணி நேரம் பணி - மாதம் ரூ.7000 ஊதியத்தில் 100 கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது....


வாரம் நான்கு மணி நேரம் பணி - மாதம் ரூ.7000 ஊதியத்தில் 100 கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 15-03-2024...



>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 வெளியீடு...


அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 வெளியீடு...


 G.O. (Ms) No: 80, Dated: 14-03-2024 for Surplus the posts of Laboratory Assistants in Government Higher Secondary / Secondary Schools and allowing distribution of vacant posts.



>>> அரசாணை (நிலை) எண்: 80, நாள்: 14-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 15-03-2024 வெளியீடு...

 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்  - அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 15-03-2024 வெளியீடு...



Guidelines for Admission of Students in Government Schools - Ordinance G.O.(Ms) No: 81, Dated: 15-03-2024...



>>> அரசாணை (நிலை) எண்: 81, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை (16-03-2024) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை (16-03-2024) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...



18-03-2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 13-03-2024...

 

 18-03-2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 13-03-2024 (Skill Development Training for Primary and Middle School HeadMasters - List of HeadMasters to attend Madurai Pillar Center Training (District & Block wise) - Director of Elementary Education Proceedings Rc.No: 14257/ K2/2023, Dated: 13-03-2024)...















இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...