கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை - 5.5 இலட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு - தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 003845/ ஜெ2/ 2024, நாள்: 01-04-2024...

 

 

2024-2025 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை - 5.5 இலட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு - தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை மற்றும் துரிதப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 003845/ ஜெ2/ 2024, நாள்: 01-04-2024...



>>> தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 003845/ ஜெ2/ 2024, நாள்: 01-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் - மதிப்பெண் வழங்க கோரிக்கை...



 பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் - மதிப்பெண் வழங்க கோரிக்கை...



“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்” - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்காணல்...



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:



டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து...


ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.




கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?


மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகார சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம். எதேச்சதிகார செயல்கள் அனைத்தையும் மிக கடுமையாக அம்பலப்படுத்தி உள்ளோம்.


மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம். ஒற்றை சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம். இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி போராடி இருக்கிறோம். திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் இண்டியா கூட்டணியே கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.




தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?


வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.





தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?


ஆளுநர் என்பது நியமன பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்கள் மூலமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும், போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறும் செயலாகும். அதனால்தான், ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் காலத்திலும் தற்போதும் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.





நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?


நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம். பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இதுதான் உண்மை. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.




பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா?


சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள். அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டுவருகிறது என்பதை அறிவார்கள்.


மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல, நிதி நெருக்கடி இன்னும் சீராகும்போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மத்திய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் காலம் கனியும்.




இந்த முறை மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?


அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதுபோல அனைத்து சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.




‘உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்’ என்று துரை வைகோ பேசியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று திமுக சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்பட்டதா?


தனி சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'தீப்பெட்டி' சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார். எனவே, திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


ஏப்ரல் 2024 - பள்ளி நாள்காட்டி...



ஏப்ரல் 2024 - பள்ளி நாட்காட்டி...


April 2024 - School Calendar...

 

👉 *ஏப்ரல் 1 -- திங்கள்-- வங்கி விடுமுறை


👉 *ஏப்ரல் 2  -- செவ்வாய் -- பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் (1- 9 வகுப்பு )


👉 *ஏப்ரல் 7 --  ஞாயிறு -- தேர்தல் பயிற்சி வகுப்பு (2)


👉 *ஏப்ரல் 9 -- செவ்வாய்-- தெலுங்கு வருடப் பிறப்பு


👉 *ஏப்ரல் 11 -- வியாழன்--  ரம்ஜான் பண்டிகை


👉 *ஏப்ரல் 13 -- சனி -- 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை  விடுமுறை தொடக்கம்


👉 *ஏப்ரல் 18 -- வியாழன் --  தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்


👉 *ஏப்ரல் 19 -- வெள்ளி -- தேர்தல் பணி


👉 *ஏப்ரல் 22, -- திங்கள்--  அறிவியல் தேர்வு.


👉 *ஏப்ரல் 23, -- செவ்வாய் --  சமூக  அறிவியல் தேர்வு.


👉 *(ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.)


👉 *ஏப்ரல் 23 -- செவ்வாய் -- கள்ளழகர் வைகை எழுந்தருளல்.


👉 *ஏப்ரல் - 6 - சனி - தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது. ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01-04-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:


இனியவைகூறல்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.


குறள் 96:


அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.


விளக்கம்:


தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.




பழமொழி : 


As you sow, so you reap


 வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்...



பொன்மொழி:


ஒவ்வொருவரும் அசலாக பிறந்து, பிறருடைய நகலாக இறக்கிறோம்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  


விடை: வேளாண்மை     


 மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்


ஈராக் நாட்டின் தலைநகரம்


விடை: பாக்தாத்


இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம்?


விடை: பெங்களூர்


 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?


விடை: 1919




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Marriage - திருமணம் 

Match Box - தீப்பெட்டி 

Measure - அளந்து 

Meat - மாமிசம் 

Medicine - மருந்து 

Meet - சந்திப்பு



ஆரோக்கியம்


  மருத்துவப் பரிசோதனைகள்


உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்றவை உங்கள் இதய, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை மருத்துவப் பரிசோதனை செய்யாமல் உங்களால் கண்டறிய முடியாது. அதனால், 40 வயதுக்கு மேலானவர்கள் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகள், நீரிழிவு போன்ற மருத்துவச் சோதனைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது செய்துகொள்வது அவசியம்.



இன்றைய சிறப்புகள்


ஏப்ரல் 1


1973 – புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.


1976 – ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்டு வைன் ஆகியோரால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.


1981 – சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.


1997 – ஏல்-பாப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது


2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.


பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

ஏப்ரல் முட்டாள்கள் நாள்

மர நாள் (தன்சானியா)

தேசிய நாள் (சைப்பிரசு)

ஒடிசா நாள் (ஒடிசா)



நீதிக்கதை 


எதிரியால் ஏற்பட்ட விளைவு 


ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு பெரிய கருநாகம் அவற்றை உண்டு சென்றது. கொக்கும் அதன் மனைவியும் மிகவும் துயருற்று இருந்தன. கொக்குக்கு ஒரு நண்டு நண்பனாக இருந்தது. 


ஒரு நாள் கொக்கு நண்பனிடம் சென்று தன் பிரச்சினையைத் துயரத்துடன் கூறியது. 


“அந்தப் பொல்லாத திருடன் அடிக்கடி எங்கள் முட்டைகளைத் தின்று விடுகிறான். இதைத் தடுப்பதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லையே” என்று வருத்தத்துடன் நண்டிடம் முறையிட்டது. கவலைப்படாதே, என்று நண்டு அதைச் ஆறுதல்படுத்தி, பிறகு கூறியது: “என்னைப் போல் ஒரு நண்பன் இருக்கும்போது வருந்த வேண்டாம். யோசித்து நாம் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்போம்.” 


கொக்கின் அருகில் உட்கார்ந்து நண்டு யோசனை செய்தது. திடீரென்று துள்ளிக் குதித்து, “நண்பனே ! ஓர் அருமையான திட்டம் தோன்றி இருக்கிறது,” என்ற நண்டு கொக்கின் காதில் தன் திட்டத்தைக் கூறியது.



அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்கு உடனே தன் கூட்டிற்குப் பறந்து சென்றது. தன் மனைவியிடம் நண்டின் திட்டத்தை விவரித்தது. 


அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அது மிகவும் துடிப்பாக இருந்தது. “நீ கூறுவதைப் போல் இதை நிறைவேற்ற முடியுமா?” என்று அதன் மனைவி கேட்டது. 


“நாம் செய்வதில் ஏதாவது தவறாக நிகழ்ந்து விடுமோ ? மீண்டும் நன்றாக யோசித்துப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்து,” என்று எச்சரித்த மனைவியின் சொற்களை அலட்சியப்படுத்தியது அந்தக் கொக்கு. திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதில் அது ஆவலாக இருந்தது. 


கொக்கு ஆற்றங்கரைக்குச் சென்றது. மீன் பிடிக்கத் தொடங்கியது. நிறைய சிறிய மீன்களைப் பிடித்தது. ஒரு கீரி வசித்து வந்த ஒரு பொந்துக்கருகில் சென்று ஒரு மீனைப் போட்டது. சிறிது தொலைவு சென்று மற்றொரு மீனைக் கீழே போட்டது. இவ்வாறு வரிசையாக மீன்களைப் போட்டவாறு தான் கூடு கட்டியிருக்கும் மரத்தருகில் வந்து முடித்தது. 



மீன் வாசனையை முகர்ந்தவாறு பொந்திலிருந்து வெளியே வந்தது கீரி. “ஆ, இதோ ஒரு மீன் !” என்று கத்தியவாறே மகிழ்ச்சியுடன் உடனே அந்த மீனை எடுத்துத் தின்றது. 


அடுத்தது, அடுத்தது என்று வரிசையாகக் கீழே கிடந்த மீன்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தின்றவாறே கொக்குகளும் பாம்பும் இருந்த மரத்தினடியில் வந்து நின்றது. 


அதற்குப் பிறகு அங்கு மீன் இல்லாததால் அங்கே நின்று சுற்று முற்றும் பார்த்தது கீரி. மரத்தினடியில் இருந்த கருநாகம் திடீரென்று அதன் கண்களில் தென்பட்டது. கீரியைப் பார்த்த நாகமும் சண்டைக்குத் தயாரானது. இரண்டிற்கு மிடையே பயங்கர சண்டை நீண்ட நேரம் நடைபெற்றது. 


இறுதியில் கீரி பாம்பைக் கொன்றது. இந்தச் சண்டையைக் கூட்டிலிருந்து பார்த்த கொக்குகள் பாம்பு இறந்தவுடன் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டன.


 மறுநாள் அந்தக் கீரி அதே போல் உண்ணுவதற்கு மீன்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு அதே வழியாக வந்தது. உணவு ஏதும் கிடைக்காமல் மரத்தடியை அடைந்தது. மரத்தின் மீது ஏறி ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா என்று பார்த்தது. ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த இரு கொக்குகளும் அந்த நேரம் திரும்பி வந்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து கீழே இறங்கும் கீரியைப் பார்த்தன. 


பறந்து சென்று கூட்டை அடைந்தன. இந்த முறை கீரி கொக்கின் முட்டைகளைத் தின்றிருந்தது ! 


“ஐயோ ! ஓர் எதிரியைப் பெறுவதற்காகத் தான் முதல் எதிரியை ஒழித்தோமா ? பாம்பை ஒழித்தோம். இப்போது கீரி நம் முட்டைகளை அழிக்கிறதே ! ” என்று கொக்கு வருத்தத்துடன் தன் மனைவியிடம் கூறியது. 


நீதி : எண்ணித் துணிக கருமம்




இன்றைய முக்கிய செய்திகள் 


01-04-2024 


 வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்...


 அத்வானிக்கு பாரத ரத்னா விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர்...


தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு...


கொடைக்கானலில் டால்பின் நோஸ் மீது நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு...




Today's Headlines:

01-04-2024


 Bharat Ratna award to four including Agricultural Scientist M.S.Swaminathan: President Draupati Murmu presented... 


President awarded Bharat Ratna to Advani at his residence... 


Change in examination dates of school students in Tamil Nadu: School Education Department orders... 


Consultation on 'AI' technology: Bill Gates - Modi meeting... 


Rescued a youth who fell into a 100 feet ditch while walking on Dolphin Nose in Kodaikanal...


4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 19528 / எம் / இ1 / 2023, நாள் : 29.03.2024...

 

 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகளில் மாற்றம் - 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 19528 / எம் / இ1 / 2023, நாள் : 29.03.2024...


Change in Science, Social Science Examination Dates for Classes 4 to 9 - Joint Proceedings of Director of School Education and Director of Elementary Education Rc. No. : 19528 / M / E1 / 2023, Date : 29.03. 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...

 

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தைக்கு அமைச்சர் பாராட்டு

 Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு    ...