கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சனம்...



பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் விமர்சித்துள்ளார்.


திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மடிக்கணினி திட்டம், அம்மா ஸ்கூட்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டினார். 


அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணை திறந்து பார்த்தால் அதிமுக ஆட்சிக்காலம் வெளிச்சமான ஆட்சிக்காலம் என்பது தெரியும் என்று கூறினார். 


நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை நிறைவேற்றாமல் மக்களுக்கு நாமத்தை போட்டு விட்டு 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக பொய் கூறி வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை அளித்து அரசு ஊழியர்களை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று தேர்தலில் பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...


 “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...

 

“இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!.


கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு உயர்த்துகிற அகவிலைப்படி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது திமுக அரசு. அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.


கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித் துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம்.


பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு  வந்திருக்கிறோம்.


ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது திராவிட மாடல் அரசு.


ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் திராவிட மாடல் அரசு.


ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும், அதிமுகவின் வரலாறும் எப்படிப்பட்டது? ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, அசிங்கப்படுத்தி, எள்ளி நகையாடி, அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?


தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!


அதிமுக என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அதிமுகவால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும், துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே!. அரசு ஊழியர்களுக்குத் திமுக ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அதிமுக. எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும்தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!


இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும், துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை.


பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து, கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து, நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.


மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும், ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும், தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.


அதனால்தான், இன்றைக்கு

திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.


அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கிவிட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான். “உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்” என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.


எனவே, திமுகவின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம், பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்… நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.


எனவே, “

திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி ஆதரவு கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...


2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் தொடக்கம் - வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு...



>>> வருமானவரித்துறை ஆணையர் செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் ஆரம்பம். ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நன்று...



இந்திய அரசின் நிதி அமைச்சகம் 

வருவாய் துறை 

மத்திய நேரடி வரிகள் வாரியம் 

புது தில்லி, ஏப்ரல் 4, 2024 

பத்திரிக்கை செய்தி 

ஏப்ரல் 1, 2024 அன்று CBDT ஆல் இயக்கப்பட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் ITRகளை தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள் 

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி செலுத்துவோர் 2024-25 ஆம் ஆண்டிற்கான (நிதியாண்டு 2023-24 க்கு தொடர்புடையது) 1 ஏப்ரல், 2024 முதல் வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. பொதுவாக வரி செலுத்துவோர் பயன்படுத்தும் ஐடிஆர்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4 ஆகியவை வரி செலுத்துவோர் தங்கள் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்ய ஏப்ரல் 1, 2024 முதல் இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கும். நிறுவனங்கள் தங்கள் ஐடிஆர்களை ஐடிஆர்-6 மூலம் ஏப்ரல் 1 முதல் தாக்கல் செய்ய முடியும். 

இதற்கு முன்னோடியாக, CBDT ITR படிவங்களை முன்கூட்டியே அறிவித்தது, ITR கள் 1 மற்றும் 4 இல் தொடங்கி டிசம்பர் 22, 2023 அன்று அறிவிக்கப்பட்டது, ITR-6 ஜனவரி 24, 2024 அன்று அறிவிக்கப்பட்டது மற்றும் ITR-2 ஜனவரி 31, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. 

e-Return Intermediaries (ERI) வசதிக்காக, ITR-1,ITR-2, ITR-4 மற்றும் ITR-6க்கான JSON ஸ்கீமா மற்றும் வரித் தணிக்கை அறிக்கைகளின் திட்டமும் A.Y.க்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024-25. இ-ஃபைலிங் போர்ட்டலின் பதிவிறக்கங்கள் பிரிவின் கீழ் இதை அணுகலாம். 

இதனால், வரி செலுத்துவோர் ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-4 மற்றும் ஐடிஆர்-6 ஐ ஏ.ஒய். 2024-2025 இ-ஃபைலிங் போர்ட்டலில் 01.04.2024 முதல். உண்மையில், ஏ.ஒய்க்கு சுமார் 23,000 ஐ.டி.ஆர். 2024-25 ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐடிஆர் 3, 5 மற்றும் 7ஐ தாக்கல் செய்வதற்கான வசதி விரைவில் கிடைக்கும். 

புதிய நிதியாண்டின் முதல் நாளில் வருமான வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும். இது இணக்கம் மற்றும் தடையற்ற வரி செலுத்துவோர் சேவைகளை எளிதாக்குவதற்கான மற்றொரு மாபெரும் படியாகும். 

(சுரபி அலுவாலியா)

Pr. வருமான வரி ஆணையர் 

(ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை) & 

அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், CBDT



Government of India Ministry of Finance Department of Revenue

Central Board of Direct Taxes

New Delhi, 4th April, 2024

Press Release

Functionalities to file commonly used ITRs enabled by CBDT on 1t April, 2024


Central Board of Direct Taxes (CBDT) has facilitated taxpayers to file their Income Tax Returns (ITRs) for the Assessment Year 2024-25 (relevant to Financial Year 2023-24) from 1st April, 2024 onwards. The ITRs i.e. ITR-1, ITR-2 and ITR-4,commonly used by taxpayers are available on the e-filing portal from 1st April, 2024 onwards for taxpayers to file their Returns. Companies will also be able to file their ITRs through ITR-6 from April 1 onwards.


As a precursor to this, CBDT had notified the ITR forms early, beginning with ITRs 1 and 4 which were notified on December 22nd, 2023, ITR-6 was notified on 24th January, 2024 and ITR-2 was notified on January 31st, 2024.


To facilitate the e-Return Intermediaries (ERI), the JSON Schema for ITR-1,ITR-2, ITR-4 and ITR-6 and Schema of Tax Audit Reports have also been made available for A.Y. 2024-25. The same can be accessed under downloads section of the e-filing portal.


Thus, taxpayers have been enabled to file ITR-1, ITR-2, ITR-4 and ITR-6 for A.Y. 2024-2025 on the e-filing portal from 01.04.2024. In fact, about 23,000 ITRs for A.Y. 2024-25 have already been filed till date. Facility to file ITRs 3, 5 and 7 will be made available shortly.


This is for the first time in recent times, that the Income Tax department has enabled taxpayers to file their Returns on the first day of the new financial year. This is another giant step towards ease of compliance and seamless taxpayer services.


(Surabhi Ahluwalia)

Pr. Commissioner of Income Tax

(Media & Technical Policy) &

Official Spokesperson, CBDT



பள்ளி வேலை நேரத்தில்‌ மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு...



 பள்ளி வேலை நேரத்தில்‌ மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு (Removed from Service)...



>>> செ.வெ.எண்‌.15/ ஏப்ரல்‌, நாள்‌: 05.04.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Dismissal of Headmaster for being under the influence of alcohol during school hours...


செய்தி வெளியீடு எண்‌.15/ ஏப்ரல்‌,            நாள்‌: 05.04.2024


தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி ஒன்றியம்‌, மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பள்ளி வேலை நேரத்தில்‌ மதுபோதையில்‌ இருந்தது, விசாரணையில்‌ உண்மை என தெரிய வர தலைமையாசிரியர்‌ தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால்‌ (தொடக்கக்‌ கல்வி) பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்‌.


தருமபுரி மாவட்டம்‌, தருமபுரி ஒன்றியம்‌, மாரவாடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும்‌ திரு.எம்‌.குணசேகரன்‌ என்பவர்‌ பள்ளி வேலை நேரத்தில்‌ மதுபோதையில்‌ இருந்தது மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌(தொடக்க கல்வி) அவர்களின்‌ பள்ளிபார்வையின்‌ போது கண்டறியப்பட்டது. இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது. இவர்‌ மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின்‌ விசாரணை அறிக்கை மற்றும்‌ மருத்துவரின்‌ சான்றுப்படியும்‌ இவர்‌ மது அருந்தி இருந்தது நிரூபணமானது. தொடர்ந்து இது போன்ற செயல்களில்‌ ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனால்‌ மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால்‌ (தொடக்கக்‌ கல்வி) இன்று (05.04.2024) பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டது.


வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, தருமபுரி மாவட்டம்‌.



Press Release No.15/ April,          Date: 05.04.2024 


Dharmapuri District, Dharmapuri Union, Marawadi, Panchayat Union Middle School Headmaster was under the influence of alcohol during school work hours, the headmaster was dismissed by the Dharmapuri District Education Officer (Elementary Education) after investigation.


Mr. M. Gunasekaran, who is working as a Head Master in Panchayat Union Middle School, Dharmapuri District, Dharmapuri Union, Maravadi, was found to be under the influence of alcohol during the school working hours by the District Education Officer (Primary Education). He underwent a medical examination and a medical certificate was obtained. Departmental disciplinary action was taken against him and according to the investigation report of the investigating officer and the testimony of the doctor, it was proved that he had consumed alcohol. It was found that he was engaged in such activities continuously. As a result, the said principal was dismissed from the job today (05.04.2024) by the District Education Officer (Elementary Education), Dharmapuri. 


Publication: News Public Relations Office, Dharmapuri District.


பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...

 

பள்ளி வேலைநாள் தொடர்பாக கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் - வாக்குச்சாவடியில் பயன்படும் படிவங்கள்...


 தேர்தல் - வாக்குச்சாவடியில் பயன்படும் படிவங்கள் - Election Booth Formats...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி...

 


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், இணையதள இணைப்பு, திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்தலில் தலைமை ஆசிரியர்களின் பணிகள் - இயக்குநர் அவர்களின் செய்தி... 


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,


    ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.


       நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ,ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு, ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு  மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.


      அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.


     மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


              ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.


    தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி ,  promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.


         மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


         இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் (school grant) தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


        one time connectivity charge இந்த நிதியில் இருந்து  மேற்கொள்ளலாம். அதோடு  ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


      பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron  நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் , கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...