கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...

  


Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...


PMS_GELS 2024 App Download Link...



>>> Click Here to Download PMS_GELS 2024 App...



PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் உங்கள் Mobile எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்தலாம்..




தீர்க்கப்படுமா தேர்தல் பணி ஊழியர்களின் பிரச்சினைகள்?


தீர்க்கப்படுமா தேர்தல் பணி ஊழியர்களின் பிரச்சினைகள்?


ஜனநாயகத்தின் அடையாளம், தேர்தல்கள். இந்தத் தேர்தல்களை நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.                  


🌻அப்போதிலிருந்து தேர்தல் ஆணையம் கூறும் எந்தப் பணியையும் எந்தக் காரணம் கொண்டும் அவர்களால் மறுக்க முடியாது.        


🌻ஆணைகளை மீற முயன்றால், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ பாயும். எனவே, தேர்தலை நடத்த வருவாய்த் துறை ஊழியர்களின் தொடர் பணியும், அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியும் இன்றியமையாதவை ஆகின்றன.      


🌻அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எந்த வகையிலும் தேர்தல் பணியை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள்தான் அவர்களை அவ்வாறு எண்ண வைக்கின்றன.    


🌻வீடு வீடாக பூத் ஸ்லிப் (வாக்காளர் விவரச் சீட்டு) விநியோகித்தல், தேர்தல் பயிற்சி வகுப்புகள், அதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்குச் சென்று, தேர்தல் முடிந்து அனைத்தையும் ஒப்படைக்கும்வரை அங்கேயே இருப்பது எனத் தொடர்ந்து பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் .        


🌻ஆனால், எந்தப் பணியிலும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. வாக்குச்சாவடி அலுவலர் பணியில் பட்டதாரி ஆசிரியர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.               


🌻 *நடைமுறைச் சிக்கல்கள்:* தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் காலையிலேயே வந்துவிட வேண்டும்.       


🌻அப்போதுதான் அவர்கள் எங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும். அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட வேண்டும்.        

🌻அந்த இடத்தில்தான் தேர்தல் நடத்துவதற்கான கருவிகளும், பிற ஆவணங்களும் வழங்கப்படும். தேர்தல் நடத்தும் பி.ஆர்.ஓ.தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். எனவே, அவர்களும் பெரும்பாலான பிற ஊழியர்களும் அங்குதான் இரவு தங்க வேண்டும்.         


🌻முந்தைய நாளே பணிக்கு வந்துவிடுவதால் அவர்களால் தேர்தல் அன்று உணவைக் கொண்டுவர முடியாது. தேர்தல் ஆணையம் அதற்குப் பொறுப்பேற்காது. காலை 5.30 மணிக்குத் தொடங்கும் பணி மாலையில் இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை நிறைவடையாது.                  


🌻அதிகாலையில் கருவிகளைச் சரியான இடத்தில் பொருத்தி, தேர்தல் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு இயக்கிக் காட்ட வேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்த பிறகுதான், தேர்தல் தொடங்கும்.      


🌻 *உணவு இடைவேளை கிடையாது.* தேர்தல் தொடங்குவதற்கு முன் இரண்டு மணி நேரம் தயாரிப்பு, தேர்தல் பன்னிரண்டு மணி நேரம், பிறகு ஒப்படைக்கக் குறைந்தது இரண்டு மணி நேரம். உணவு இடைவேளை இன்றிப் பணிபுரியச் சொல்வது இந்திய நாட்டின் நடப்புச் சட்டங்களுக்கே எதிரானது.          


🌻உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற மனஅழுத்தம் எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில், பட்டினியுடன் அவர்கள் போராட வேண்டிய நிலை தொடர்கிறது.      


🌻அவ்வப்போது கட்சி முகவர்கள் உணவு வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றால் அவர்களின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்க வேண்டி வரலாம் என்ற அச்சத்தில், பெரும்பாலான ஊழியர்கள் அவர்களிடமிருந்து எதையும் *பெறுவதைத் தவிர்த்துவிடுவர்* .                   


🌻மாலையில் தேர்தல் முடிந்த பிறகு பெட்டிகளை சீல் வைத்து, ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். பெட்டியை எடுத்துச் செல்லும் அதிகாரி முன்னதாக வந்துவிட்டால்கூடச் சமாளித்துவிடலாம்.                


🌻சில வேளை *நள்ளிரவையும் தாண்டித்தான் பெட்டியை எடுப்பார்கள்.* 

அதன் பிறகு தேர்தல் ஊழியர்களை *அப்படியே விட்டுவிட்டுச்* சென்றுவிடுவார்கள்.            


🌻அவர்களது பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் / துணை ராணுவப் படையினர் அப்படியே புறப்பட்டுவிடுவார்கள். ஊழியர்கள் பத்திரமாக வீடு திரும்பினார்களா என்பதை உறுதிசெய்வதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாக இல்லை.            


🌻சில தேர்தல் ஊழியர்கள் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டு, *வீடு திரும்பும் தருணங்களில் விபத்தில் சிக்கி மரணமடைந்ததெல்லாம்* உண்டு.                


🌻அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி குறித்து அச்சப்படுவதற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. பெருமையுடன் செய்யவேண்டிய ஒரு பணி, இப்படியான அலைக்கழிப்புகளால் அச்சம் கலந்த பணியாக மாறுகிறது.        


🌻 *தற்காலிகத் தீர்வுகள்:* வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் குறைந்தபட்சம் கழிப்பறை, குளியலறை வசதிகள் சுத்தமாகக் கிடைக்கும் வகையிலாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.       


🌻தேர்தல் ஆணையம் நேரடியாகவோ யாரையாவது நியமித்தோ முந்தைய நாள் இரவிலிருந்து வாக்குப்பதிவு நாள் இரவு வரை தேநீர், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.         


🌻உண்மையில், இவ்விஷயத்தில் பல நீண்ட காலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. எனினும், தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த அடிப்படை வசதிகளையாவது தேர்தல் ஆணையம் நிறைவேற்றித் தர வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.



தபால் வாக்குகளை பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு - தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்...

 

 அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது...


எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகி தபால் வாக்குகளை செலுத்தலாம்.



>>> தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு Show cause notice வழங்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர்...

 


முதன்மைக் கல்வி அலுவலகம், செங்கல்பட்டு


நாடாளுமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி ஆணை இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இது வரை தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இவர்கள் மீது தேர்தல் கமிஷன் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதை தவிர்க்கும் பொருட்டு உரிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நாளை துரைப்பாக்கம் D B JAIN கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் Show cause notice வழங்கப்படும்


முதன்மைக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு



>>> ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பெயர் பட்டியல்...


Teachers Transfer - New Module in EMIS Website...



 ஆசிரியர்கள் / அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி / அலுவலகத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாறுதலில் செல்லும்போது EMIS ல் பெயரை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலிருந்து புதிதாக சென்ற பள்ளி / அலுவலகத்திற்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சார்ந்த ஆசிரியர்/அலுவலர் emis.tnschools.gov.in என்ற websiteல் சென்று தங்களுடைய username மற்றும் password கொடுத்து login செய்து request கொடுக்க வேண்டும். தாங்கள் கொடுத்த request ஆனது மாவட்ட EMIS DC login ற்கு வரும். மாவட்ட அளவில் அதனை சரிபார்த்த பிறகு  ஆசிரியரின் / அலுவலரின் பெயரை புதியதாக சென்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான வழிமுறைகள் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Teachers Transfer - New Module in EMIS👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...


தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O. 1D. No. 167, Dated: 16-04-2024...

 

நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல் ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...

 


நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...


வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்கள் காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டும் மையங்களும் நாளை17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.


72,    எல்எப்சி மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம் பாராளுமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடுகளை முன்னிட்டு நாளை(17.04.2024) விலக்களிக்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை 22.4.2024 முதல் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


*முகாம் அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(த.ப), இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம்*


வணக்கம். நாகப்பட்டினம் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து ஒரு முக்கியச்செய்தி

நாளை 17.04.2024 புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையம் விடுமுறை. இனி திங்களன்றுதான் விடைத்தாள் திருத்தும் பணி.


முகாம் அலுவலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வத்தகவல்🙏


நாகப்பட்டினம்  கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு   மற்றும் அரசு உதவி பெரும் மற்றும் மெட்ரிக்   உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் முக்கிய கவனத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வியிலிருந்து ஒரு முக்கிய தகவல்  நாகப்பட்டினம்  நடராஜன் தமயந்தி  மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி நாளை 17 4 2024 அன்று கிடையாது   நாளைய தினம்  அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அயல் பணியாக கருதப்படும் எனவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும்  அறிவிக்கப்படுகிறது மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வி நாகப்பட்டினம்  .


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Fengal Cyclone Damage: Rs 2000 for Ration Card - Relief announced by Tamilnadu Govt - Full Details

பெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணம் - முழு விவரம் Fengal Cyclone Damage: Rs 2000 for Rat...