கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...


 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல்

இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது:

அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்!


தமிழ்நாட்டில் அரசு  பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,  தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள்  மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஆசிரியர்களை  கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.


ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால்,  2021-ஆம்  ஆண்டில்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய  நடைமுறையை புகுத்தியிருக்கிறது.


கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில்  அவர்களுக்கு விருப்பமான  இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில்  குழப்பங்களைத் தடுக்கும்.  


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால்,  அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.  அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும்  இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அதுமட்டுமின்றி,  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால்,  அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்காமல்,  பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு  பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை  புறந்தள்ளி விட முடியாது.


2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த  நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு,  அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்.


வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...



வல்லவனுக்கு வல்லவன் - இன்றைய சிறுகதை...


 ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்:


"இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேரேஜ் லைட் அணைக்கவில்லைன்னு நினைக்கிறேன். நீங்க போய் கேரேஜ் லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க".


முதியவர் மிகவும் சிரமப்பட்டு படுக்கையில் இருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து பார்த்தார், ஐந்தாறு திருடர்கள் தனது கேரேஜ் கதவை உடைக்க முயற்சிப்பதைக் கண்டார்.


பெரியவர் அங்கிருந்து அருகில் உள்ள காவல் நிலையத்தை ஃபோனில் அழைத்தார்: "ஹலோ...... எனது முகவரியை எழுதிக் கொள்ளுங்கள். வீட்டில் நாங்கள் இரண்டு வயதான கணவன் மனைவி மட்டுமே இருக்கிறோம். இப்போது ஐந்து அல்லது ஆறு திருடர்கள் எங்கள் கேரேஜ் கதவை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போலீஸ் குழுவை சீக்கிரம் அனுப்புங்கள்."


மறுபக்கத்திலிருந்து காவல் அதிகாரியின் குரல் வந்தது: "உங்கள் முகவரியை குறித்துக் கொண்டோம். எங்களிடம் தற்போது காவலர்கள் யாரும் இல்லை. நாங்கள் ஒரு போலீஸ் டீமுடன் தொடர்பு கொண்டவுடன், அவர்களை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்."


இதைக் கேட்டு, பெரியவர் ஏமாற்றம் அடைந்தார், ஆனால் மறுபுறம், கேரேஜின் பூட்டை உடைக்கும் பணியில் திருடர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, பெரியவர் மீண்டும் காவல் நிலையத்தை அழைத்தார்: "அய்யா..... இப்போது யாரையும் அனுப்ப வேண்டியதில்லை. ஐந்து திருடர்களையும் சுட்டு விட்டேன்" என்று நிதானமாகக் கூறினார்.


போலீஸ் ஸ்டேஷனில் ஒரே பரபரப்பு. ஐந்து நிமிடங்களில், ஒரு போலீஸ் குழு, ஒரு ஹெலிகாப்டர், ஒரு சிறப்பு மருத்துவர், மூன்று மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்களுடன், முதியவரின் வீட்டை அடைந்தது.


ஐந்து திருடர்களும் கைது செய்யப்பட்டனர்.


பின்னர் போலீஸ் குழுவின் தலைவர் பெரியவரை அணுகி கேட்டார், "நீங்கள் அந்த ஐந்து திருடர்களையும் சுட்டுக் கொன்றதாகச் சொன்னீர்கள், ஆனால் நாங்கள் அவர்களை உயிருடன் பிடித்துள்ளோமே?"


முதியவர் பதிலளித்தார்: "நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் போலீஸ் டீம் எதுவும் இல்லை என்று".


மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்...


ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...


 ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...



அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...

 

கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தானாக வருமான வரி கணக்கிடும் முறையில் மே மாதமும் வரி பிடித்தம் செய்யப்படும், பழைய முறைப்படி வருமான வரி செலுத்துபவர்கள் 15 ம் தேதிக்குள் சேமிப்பை காட்டலாம்,  மேலும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட Regime ஐ மாற்ற இயலாது எனவும் அறிவிப்பு...


அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...

 கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பதிவு கட்டணம் ரூ.150: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான (லேட்ரல் என்ட்ரி முறை).ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். tnpoly.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி..

மே மாதம் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது - DSE செயல்முறைகள்...

 

 ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...