கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களின் பணி - இணைப்பு: மாவட்ட வாரியாக பணிநியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை...

 

உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களின் பணி - இணைப்பு: மாவட்ட வாரியாக பணிநியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை...


Duties of Hi-Tech Laboratory Administrator and Instructors – Link: District wise number of recruits...






ஐஐடி மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...


ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...




சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...


பள்ளிக் கல்வித் துறை - ஐம்பெரும் விழா அழைப்பிதழ்...

 பள்ளிக் கல்வித் துறை - ஐம்பெரும் விழா அழைப்பிதழ்...




நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...


 நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23 ஆம் தேதி மறு தேர்வு; ஜூன் 30ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது - அறிவிக்கை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை NTA...


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...



தற்போது நீட் தரவு முடிவுகளை ரத்து செய்ய இயலாது;


கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது, கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம்"


- உச்சநீதிமன்ற நீதிபதிகள் 



1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு; NEET தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்”


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், கருணை மதிப்பெண்ணுகக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பு...




இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3029, Dated: 14-06-2024) வெளியீடு...

 

இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.3029, Dated: 14-06-2024) வெளியீடு - Transfer of I.A.S.Officers including District Collectors    - Ordinance (G.O.Rt.No.3029, Dated: 14-06-2024) issued...



>>> Click Here to Download G.O.Rt.No.3029, Dated: 14-06-2024...




ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம்:


ரீட்டா ஹரீஷ் தாக்கர்-மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர்


நந்தகுமார்- மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்


நாகராஜன்-நிதித்துறை [செலவினம்] அரசு செயலாளர்


சிஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை


சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத்துறை ஆணையர்


அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர்


பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித்துறை முதன்மை செயலாளர்


சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர்


சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்]


பூஜா குல்கர்னி-உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி, நிதித்துறை சிறப்பு செயலாளர்


அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குனர்


லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)


விஜயராஜ்குமார்-பிற்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர்


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.06.2024...

   

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.06.2024 - School Morning Prayer Activities...

  

திருக்குறள்:

பால் :பொருட் பால்

அதிகாரம்: கல்வி

குறள் எண்:395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.

பொருள் :செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.


பழமொழி :


Call a spade a spade.

உள்ளதை உள்ளவாறு சொல்.



இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.



பொன்மொழி :

ஆயிரம் முறை தோற்றாலும்
லட்சியத்தை கைவிடாதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி கிடைக்கும்.

- சுவாமி விவேகானந்தர்



பொது அறிவு :

1. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?


விடை: நீலகிரி

2. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

விடை: மறைமுகத்தேர்தல்



English words & meanings :

Abhor- வெறுப்புக் கொள்,

Loathe- வெறுப்பு


வேளாண்மையும் வாழ்வும்:

விவசாயம் ஒரு நாட்டின் முதுகெலும்பு". "விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்" எனும் பொன் மொழிகள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.



ஜூன் - 14

சே குவேரா அவர்களின் பிறந்தநாள்

        சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர்         1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

June 14 - World Blood donor day

ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்

உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.



நீதிக்கதை

வாழ்க்கை என்னும் வீடு...

பல வருடங்களாக தச்சர் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு, தன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எஜமானனிடம் தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க போவதாக கூறினார். இதைக் கேட்ட எஜமானனுக்கு அவரை விட மனமில்லை. இறுதியாக ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தச்சர், வீடு கட்ட களத்தில் இறங்கினார். ஆனால் அவருக்கு வேலையில் ஈடுபாடு இல்லை. ஏனோ தானோ என்று மனம் போன போக்கில் வீட்டைக் கட்டத் தொடங்கினார். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடித்தார் அந்த தச்சர். கட்டப்பட்ட வீட்டை பார்வையிடுவதற்காக எஜமானன் அங்கு வந்தார். வீட்டை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு சாவியை தச்சரிடம் நீட்டினார். நீங்கள் என்னுடன் வேலை செய்ததற்கான பரிசாக இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றுவிட்டார். ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் மறு பக்கம் துக்கமும் இருந்தது. தனக்கு தான் இந்த வீடு என்று தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகாக கட்டியிருப்பேனே என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தான். தான் மோசமாக கட்டிய வீட்டில் தானே வாழ வேண்டியதாக இருக்கிறதே என்று நொந்து போனான். சில மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ என்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் கடினப்பட்டு வாழ்கிறார்கள். திறமையைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த வாழ்க்கையும் நமக்காகத்தான் அளிக்கப்பட்டு உள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் வாழ்ந்தாலும் அமைதியோடு, நிம்மதியோடு வாழ வேண்டும். அதுவே நம் வாழ்க்கைக்கு நாம் கட்டிக்கொள்ளும் வீடு ஆகும்.

நீதி :  கடமையும் கண்ணியமும் கொண்டு பணிகளைத்  திருந்தச் செய்தல் வேண்டும்



இன்றைய செய்திகள்

14.06.2024

* வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

* T 20 உலக கோப்பை போட்டியில் நியூஸிலாந்துக்கு 2-வது தோல்வி: 13 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி.

* உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி.



Today's Headlines

* soil can be taken  free from ponds and lakes with permission from Thasildhar: Chief Minister M.K.Stalin ordered.

* The Madras High Court has directed the Tamil Nadu government to treat the third gender as a special category in education and employment.

* The National Examinations Department informed that 1,563 candidates who were given mercy marks in the NEET examination will be re-examined.  The Supreme Court has accepted it.

*  2nd defeat for New Zealand in T20 World Cup: West Indies won by 13 runs.

* World Cup Football Qualifiers' round : Indian Team Defeated


Prepared by

Covai women ICT_போதிமரம்


அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு...


பல்வகை பிரிவு - ஊக்கத் தொகை - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவது குறித்து வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுத்தங்கள் வெளியிடுதல் - தொடர்பாக...


அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Incentive - Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை) எண்: 95ஐப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை அரசுச் செயலாளர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...