கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :அறிவு உடைமை

குறள் எண்:423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.


பழமொழி :
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

Great engines turn on small pivots


இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.

*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும் ------விவேகானந்தர்


பொது அறிவு :

1. ISI என்பதன் விரிவாக்கம்?

விடை: Indian Standard Institute

2. யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன?

விடை: 40 ஆயிரம்


English words & meanings :

Utter- பூரணமான,

Complete- நிறைவான


வேளாண்மையும் வாழ்வும் :

கருப்பு கவுனியில் உள்ளநார்சத்து(Fiber) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ஸ் (anti – oxidants) புற்று நோய், சர்க்கரை குறைபாடு நோய்களின் தாக்கத்தைக் குறைக்கின்றது, மேலும் கல்லீரலில் உள்ள பாதிப்புகளை குறைக்கின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.


ஜூலை 22

டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள்

முத்துலட்சுமி  (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.


நீதிக்கதை

ஆண்டவனிடம் பெற்ற அறிவு

பீர்பாலின் மீது அரசர் அளவு கடந்த  அன்பும், மரியாதையும் வைத்திருப்பதை அறிந்த அவையில் இருந்த சில அமைச்சர்களுக்கு பொறாமையாக இருந்தது.

அறிவுமிக்க பீர்பாலை மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர் அவரின் மாநிறமான தோற்றத்தை கொண்டு மட்டம் தட்ட நினைத்தார். அதனால் அரசவையில் அமர்ந்திருந்த பீர்பாலை பார்த்து அந்த அமைச்சர் ஏளனமாக சிரித்தார்.

இதனை கவனித்துவிட்ட அரசர் அக்பருக்கு கோபம் ஏற்பட்டு "அமைச்சரே! பீர்பாலை பார்த்து எதற்காக ஏளனமாக சிரித்தீர்கள்?" என்று கேட்டார்.

"மதிப்பிற்குரிய மன்னர் பெருமானே!  கோபப்பட வேண்டாம். எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சிரித்தேன்" என்றார் அமைச்சர்.

"என்ன சந்தேகம்?" என்று வினவினார் மன்னர்.

"மன்னர் பெருமானே! தாங்கள் ஜொலிக்கும் தங்கம் போன்ற மேனியை பெற்றுள்ளீர்கள்.

அமைச்சர்களாக உள்ள நாங்களும் நல்ல சிவந்த மேனியுடன் உள்ளோம். ஆனால் நமது பீர்பால் மட்டும் நிறத்தில் சற்று கருத்து காணப்படுகின்றார்.

ஆகையினால், நம்மோடு அமர்ந்திருப்பதினால்,மன்னரின் நிறம் பிரகாசமாகவும், பீர்பாலின் நிறம் கருத்தும் இருப்பதினால் நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல் உள்ளதோ என்று சந்தேகமாக இருந்தது. அதனால் சிரித்தேன்" என்றார்.

அமைச்சர் இது போன்று கூறியதும் மன்னருக்கு அமைச்சரின் மதிகெட்ட பேச்சு புரிந்தது. அதனை வெளிக்காட்டு கொள்ளாமல் "பீர்பால் அவர்களே! அமைச்சர் கூறியதற்கு  சரியான விளக்கம் அளியுங்கள். மேலும் இது போன்ற கேள்வி எப்போதும்  கேட்க இயலாத அளவுக்கு பதில் இருக்க வேண்டும்"என்றார் அக்பர்.

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, " "மாமன்னர் அவர்களே! வணக்கம். இறைவன் அன்பானவன் எல்லோரையும் சமமாக பாவித்து அருள் பாலிப்பவன். ஒவ்வொருவரையும் படைக்கும் போது அவரவர் விருப்பப்படி அவரவருக்கு என்ன தேவையோ அதன்படி படைத்துவிட்டார்.அதன்படி

அமைச்சர்கள் விருப்பப்படி அவர்களுக்கு நல்ல நிறத்தையும், எனது விருப்பப்படி எனக்கு நல்ல அறிவையும் கொண்டு கடவுள் படைத்துவிட்டார்"என்றார் பீர்பால்.

பீர்பாலின் பதிலைக் கேட்டு, அமைச்சர்  வெட்கி தலை குனிந்தார்.


இன்றைய செய்திகள்

22.07.2024

¶ அரசுப் பள்ளிகளில் உள்ள 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

¶ தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்ட அறிக்கை மீது இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

¶ இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

¶ புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

¶ இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பில் அதி நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.

¶ மண்டல பள்ளி ஹாக்கி லீக் போட்டி: சென்னை அணி சாம்பியன்.

¶ தமிழக வீராங்கனை இந்துமதிக்கு இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

¶ ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரபேல் நடால்.


Today's Headlines

🌸The School Education Department has issued an order to make 5,146 temporary teaching posts in government schools permanent.

🌸A consultation meeting is being held today on the new draft plan report regarding the operation of private mini buses in Tamil Nadu.

🌸The Tamil Nadu government has said that the Niti Aayog report has proved that Tamil Nadu is the top leading state in India in poverty alleviation.

🌸Copper nails have been found in the 2nd phase of excavation in Polpanaikottai, Pudukottai district.

🌸The Ministry of Defense is soon going to give its approval to the Indian Navy's Rs.70,000-crore domestic production of state-of-the-art warships.

🌸Zone School Hockey League Tournament: Chennai Team Champion.

🌸Tamil Nadu player Indumati has been awarded the best female footballer of India award.

🌸Swedish Open Tennis: Rafael Nadal advanced to the final.

Prepared by

Covai women ICT_போதிமரம்


தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்து கொள்ள வேண்டியர்கள் முன்னுரிமை எண்...

 

தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்து கொள்ள வேண்டியர்கள் முன்னுரிமை எண்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போக்குவரத்து கழகம் வெளியீடு...


 மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு போக்குவரத்து கழகம் உத்தரவு - மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக இருக்க வேண்டும்...



>>> மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - போக்குவரத்து கழகம் வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அதிகரிக்கும் நிபா வைரஸ் தொற்றுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 அதிகரிக்கும் நிபா வைரஸ் தொற்றுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...




சென்னை,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அங்கு மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

* காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை ஆகியவை நிபா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.


* அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.

* அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக உரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

* பரிசோதனை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத் துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.

* ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

* நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

* காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

* கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழ்ந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளா கோழிக்கோடு பகுதியை 14 வயதான சிறுவன் நிபா வைரஸ் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனாவை விட மிகவும் கொடியதாக அறியப்படும் இந்த நிபா வைரஸ் எப்படிப் பரவுகிறது. இதன் அறிகுறிகள் என்ன.. இதற்கான சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.



கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசால் உயிரிழந்தான். இந்த நிபா வைரஸ் ஏன் ஆபத்தானது.. இதன் அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.



நிபா வைரஸ்: இப்போது பரவும் நிபா வைரஸ் என்பதும் கொரோனாவை போலவே ஜூனோடிக் வைரஸ் வகையைச் சேர்ந்தது. அதாவது இதுவும் கொரோனாவை போலவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான வைரஸாகும்.. அசுத்தமான உணவு அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருப்போருக்கு இந்த நிபா வைரஸ் பரவும்..


கடந்த 1998-1999 காலகட்டத்தில் மலேசியாவில் இந்த வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வௌவால்கள், பன்றிகளில் இருந்து இது மனிதர்களுக்குப் பரவும். அதேபோல ஏற்கனவே நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்தும் கூட மற்றவர்களுக்கு இது எளிதாகப் பரவும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


ஆபத்து அதிகம்: காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி ஆகியவை இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஆகும். இது மூளையழற்சி போன்ற கடுமையான சுவாச மற்றும் நரம்பியல் பிரச்சினைகளையும் கூட ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. நிபா வைரசுக்கு உயிரிழப்பு விகிதம் அதிகம். அதாவது நிபா வைர்ஸ பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.



இதற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை அல்லது தடுப்பூசியும் இல்லை என்பதும் இதை ஆபத்தானதாக மாற்றுகிறது. எனவே, முடிந்தவரை இந்த பாதிப்பு ஏற்பட்டோரைத் தனிமைப்படுத்துவதே பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறந்த வழியாகும். இந்த நிபா வைரஸ் என்றால் என்ன.. இது எப்படிப் பரவும்.. இதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.


3 வகை பாதிப்பு: நிபா வைரஸ் பாதிப்பை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் அறிகுறிகளை ஏற்படுத்தாத தொற்றுகள், அடுத்து கடுமையான சுவாச தொற்றை ஏற்படுத்தும் பாதிப்பு, அடுத்து கொடிய மூளையழற்சி இந்த மூன்றும் தான் முக்கிய பாதிப்புகளாகும்.


வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட உடன் முதலில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டைப் புண் ஆகியவை ஏற்படும். அதன் பின்னரே மயக்கம், தூக்கச் சிக்கல், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மாற்றப்பட்ட உணர்வு போன்ற தீவிரமான அறிகுறிகள் ஏற்படும்.


சுவாச பிரச்சனைகள்: சிலர் நேரங்களில் கடுமையான சுவாச பிரச்சனைகள், நிமோனியா கூட ஏற்படும். அவ்வளவு ஏன் வலிப்பு, கோமா கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது. நிபா வைரஸ் நமது உடலில் பரவி 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படும். சில அரிய நேரங்களில் 45 நாட்கள் கழித்துக் கூட அறிகுறிகள் தோன்றும். எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.


தற்போதைய சூழலில் நிபா வைரஸை தடுக்க எந்தவொரு தடுப்பூசியும் இல்லை. அதேபோல பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை என்றும் தனியாக இல்லை. இதுவும் வைரஸ் பாதிப்பை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது.


என்ன செய்ய வேண்டும்: நிபா வைரஸ் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும் போது சில முக்கிய வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் நோய்வாய்ப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களிடம் இருந்து தள்ளி இருக்கவும். அடுத்து சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளைக் கழுவவும்.. அசுத்தமாக இருக்கும் உணவுகள் மற்றும் பானங்களைக் குடிக்கக் கூடாது.


பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கக் கூடாது. பாதிக்குப்பட்ட நபரின் ரத்தம் உள்ளிட்ட எந்தவொரு திரவங்களையும் கையாளக் கூடாது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையென்றால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.



தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை (நிலை) எண்: 175, நாள் : 16-07-2024 வெளியீடு...


G.O. (Ms) No: 175, Dated : 16-07-2024...


 தொடக்கக் கல்வித் துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை (நிலை) எண்: 175, நாள் : 16-07-2024 வெளியீடு...


தொடக்கக் கல்வித் துறையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்டுள்ள கூடுதல் இடைநிலை ஆசிரியர் மற்றும் பாடவாரியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் மாவட்ட வாரியான எண்ணிக்கை மற்றும் ஊதிய விகிதம்...



>>> அரசாணை (நிலை) எண்: 175, நாள் : 16-07-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC தொடர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

 

 TETOJAC தொடர் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...


 டிட்டோஜாக் மாநில அமைப்பிற்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் வருகிற ஜூலை 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி உள்ளார்..



>>> அழைப்புக் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...