ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என அறிவிப்பு...
வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய தேதிகள் அறிவிப்பு...
ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என அறிவிப்பு...
வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், புதிய தேதிகள் அறிவிப்பு...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:442
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பொருள்: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனி்த் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மை யுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
பழமொழி :
போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது
Christmas comes but once a year
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.
*என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.
பொன்மொழி :
யாரையும் வெற்றுக் காகிதம் என எண்ணாதே. ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்.நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.----மகாகவி பாரதியார்
பொது அறிவு :
1. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?
விடை: திருநெல்வேலி
2. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு சதவீதம் எத்தனை?
விடை: 23 சதவீதம்
English words & meanings :
scrutinize-ஆராய்வு,
survey-கணக்கெடுப்பு
வேளாண்மையும் வாழ்வும் :
மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும். வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது
ஆகஸ்ட் 02
ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் பிறந்தநாள்
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.
பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் பிறந்தநாள்
பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray - ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.
பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்
பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.
நீதிக்கதை
தவளைகளின் சரியான முடிவு
ஒரு காட்டில் இரு தவளைகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.
அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும்” என்றது.
மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள்.
செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.
அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.
அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.
அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.
சில நாட்களுக்கு பிறகு ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது. “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன. அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.
இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம் என்றன.
நீத: ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்ய வேண்டும்.
இன்றைய செய்திகள்
02.08.2024
☘️தமிழகத்தில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விநியோகிக்கும் திட்டம் - சோதனை அடிப்படையில் தொடக்கம்.
☘️மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்.
☘️இந்தியில் பெயரிடப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
☘️தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பு தொடர்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தல்.
☘️பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
☘️வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது போல் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
☘️ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் பொறுப்பேற்றுள்ளார்.
☘️பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே.
☘️பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.
☘️ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஜோ ரூட் முதலிடம். ரோகித் சர்மா 6 வது இடத்திற்கு முன்னேற்றம்.
Today's Headlines
☘️Scheme for distribution of ration items in packets in Tamil Nadu - started on trial basis.
☘️ ``Tamil Puthalavan'' scheme to give Rs.1,000 to students every month will start on August 9: Chief Minister Stalin informed.
☘️The Madras High Court has ordered the central government to respond within 4 weeks in the case where 3 criminal laws in Hindi to be translated in English.
☘️University Grants Commission instructs higher education institutions to take up innovative measures related to water conservation and safety.
☘️ No bar to grant internal quota to Scheduled Tribes: Supreme Court verdict
☘️In the landslide areas in Wayanad, the army is engaged in rescue operations by constructing temporary bridges called 'Bailey' as used during World War 2.
☘️Lt Gen Sadhana Saxena Nair has taken charge as the first woman Director General of Army Medical Services.
☘️ Paris Olympics: Indian shooter Swapnil Kusale won bronze in shooting event.
☘️ Paris Olympics Tennis: Djokovic advances to quarter-finals
☘️ICC Test batsmen rankings: Joe Root tops. Rohit Sharma advances to 6th position.
Prepared by
Covai women ICT_போதிமரம்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு SMC Reconstitution விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான காணொளிகள், அரசாணைகள், செயல்முறைகள் & படிவங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்ய...
🏠🦹🏻 *பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026*
▪️ உறுப்பினர் சான்றிதழ்
▪️ உறுதிமொழி
▪️ கூட்ட அழைப்பிதழ்
▪️ படிவங்கள்
▪️ அட்டவணைகள்
▪️ நிகழ்ச்சி நிரல்
▪️ பார்வையாளர் படிவம்
▪️ வழிகாட்டி அரசாணைகள்
▪️ சுவரொட்டிகள்
▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்
📌 *தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.*
🖇️ https://drive.google.com/drive/folders/1F3UTNkcubZEog10uCa794mB_ER3DFTbf?usp=drive_link
அன்புடன்,
பெ. அலெக்ஸ் பாண்டியன்,
BRTE, BRC - சேடபட்டி
9943311042
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.. இன்று (02.08.2024) நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையை கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..
இன்று (02.08.2024) நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு SMC Reconstitution பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வழிமுறை...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
தொழில் வரி அதிகபட்சமாக ₹1,250 மட்டுமே வசூலிக்க முடியும். இத்தொகையை மத்திய அரசின் விதிமுறைகளின் படி மேலும் அதிகரிக்க முடியாது....
Source: TIMES OF INDIA NEWS PAPER 31.07.2024 EDITION PG-2...
போராடச் சென்ற ஆசிரியர்கள் மீது வழக்கு - ஆசிரியர் கூட்டணி கண்டனம்...
போராடப் புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்...
அனைவருக்கும் வணக்கம். 02.08.2024 அன்று நடைபெறும் " SMC பெற்றோர் விழிப்புணர்வு"* கூட்டத்தில் பங்குபெறும் பெற்றோர்களின் வருகை விவரத்தினை TNSED Parents Appல் HM login ல் சென்று மாலை 6 மணிக்குள் அனைத்துப் பள்ளிகளும் பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது...
For parents of students from Tamil Nadu for information and school management
Parent App is an app created by the Tamil Nadu State Education Department with a goal of engaging parents and the larger community towards the development of schools.
Parents can access information about their children’s attendance, scholastic and co-scholastic performance. Feedback can be provided on the management of the school and welfare schemes and scholarships offered.
Parents can view all data about the school - student enrollment, teacher details and infrastructure.
Members of the School Management Committee can collect data of the school and surrounding habitation to plan for the development of the school. All parents of the school can access the resolutions passed by this committee.
Parents can offer feedback across various categories like infrastructure, safety, learning and welfare schemes.
Parents can access resources on child development, education schemes and career options to support their children.
TNSED Parents App தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...