கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-08-2024...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23-08-2024  - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம் : காலம் அறிதல்

குறள் எண்489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.


பழமொழி :


Better an open enemy than a false friend

போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்


இரண்டொழுக்க பண்புகள் : 

*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .    

*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.


பொன்மொழி :

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். –ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்


பொது அறிவு :

1. முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை

விடை: ஒரு ஹேப்பிளாய்டு செல்( one haploid cell)

2. தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்

விடை: டெல்லி


English words & meanings :

bang-இடி,

tinkle-மணியின் ஒலி



வேளாண்மையும் வாழ்வும் :

சைமன்ஸ் மழைமானி (Symon's Rain Gauge)

அமைப்பு

ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு சைமன்ஸ் மழைமானி பயன்படுகின்றது. திறந்த வெளியில் நிலமட்டத்திற்கு மேலே 30 செ.மீ., உயரத்தில், நீளம், அகலம், உயரம் முதலியவை 60 செ.மீ. இருக்குமாறு கான்கிரிட் தளம் அமைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட் தளத்தின் மையத்தில் கண்ணாடி ஜாடியும் அதனுள் ஒரு புனலும் ஒரு சிலிண்டர் அமைப்பினுள் வைக்கப்பட்டிருக்கும். புனலின் அகன்ற பகுதி சிலிண்டரின் மேல் பகுதியில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த புனலின் அகன்ற வாய்ப்பகுதியின் பரப்பளவு 200 ச.செ.மீ ஆகும்.


செயல்படும் விதம்

மழை பெய்யும் பொழுது புனலில் விழுகின்ற நீர் மழைமானியில் உள்ள ஜாடியில் சேமிக்கப்படுகின்றது. அதாவது 200 ச.செ.மீ பரப்பளவில் விழுகின்ற மழைநீர் ஜாடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அளவு ஜாடியைப் பயன்படுத்தி இதன் கன அளவு கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து மழையின் மூலம் நிலம் பெற்ற நீரின் அளவையும் கண்டறியலாம்.



ஆகஸ்ட் 23

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



நீதிக்கதை

சக்கரம் தாங்கி

ஒருநாள் நான்கு சீடர்கள் காட்டு வழியாக ஒன்றாக பயணம் செய்து  ஆசிரமத்திற்கு சென்றார்கள். சுவாமி பைரவா நந்தா அந்த நான்கு சீடர்களிடம் கேட்டார், “நீங்கள் யார் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?”.  அதற்கு அந்த சீடர்கள் சொன்னார்கள், “சுவாமி, உங்களுடைய அதிசய சக்தி பற்றி நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். உங்களை பார்த்த நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறோம்”.

“நாங்கள், உங்களுடைய சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை” என்றனர். அதைக்கேட்ட சுவாமி பைரவா நந்தா அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று நான்கு மண் வாரி எடுத்துக் கொண்டு வந்தார்.

அந்த நான்கு மண்  வாரியை சீடர்களுக்குக் கொடுத்து சொன்னார், “கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது, அந்த குளத்தின் கரையில் ஒரு பெரிய மரம் உள்ளது அந்த மரத்தின்  அருகே உள்ள செம்மண்ணை இந்த மண்வாரி வைத்து தோண்டுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று பார்க்கலாம்“ என்றார்.

அந்த நான்கு சீடர்களும் மண் வாரியை எடுத்துக்கொண்டு குளத்திற்கு அருகில் உள்ள செம்மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சீடர் அங்கே  தோண்டிய இடத்தில்செம்பு இருப்பதை பார்த்து ஆச்சரியம் உற்றார். அவர் மற்ற சீடர்களிடம் சொன்னார் “நமக்கு நிறைய செம்பு கிடைத்துள்ளது. நாம் இதை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக்கொள்ளலாம்”

என்றார். ஆனால்,  மற்றொரு சீடர் சொன்னார், “நாம் இங்கே தங்கத்தை தேடி தான் வந்துள்ளோம். அதனால் நீ வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொண்டு செல் “.

அந்த செம்பை கண்டுபிடித்த முதல் நபர் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். மற்ற மூன்று பேரும் திரும்ப தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது மற்றொரு சீடருக்கு வெள்ளி கிடைத்தது. அவர் சந்தோஷத்தில், “ஐயோ கடவுளே! நான் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவன் எனக்கு  வெள்ளி கிடைத்துள்ளது, என்று சொல்லிக்கொண்டு மற்ற இரண்டு பேரிடம் நாம் இந்த வெள்ளியை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம் வாங்க” என்றார்.

ஆனால் மற்ற இருவரும் தங்கம் qகிடைக்கும் வரை  தோண்டி பார்க்கலாம், நீ வேண்டும்  என்றால் அந்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு செல் என்றனர். அந்த இரண்டாவது சீடரும் கிடைத்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றார். மற்ற இரண்டு சீடர்களும் மீண்டும் மண் வாரி எடுத்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

அப்போது மூன்றாவது சீடர் அங்கே தங்கம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவர் மற்ற சீடரிடம் நாம் இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லலாம் என்றார். ஆனால் அவரோ, “இல்லை இங்கே  செம்பு, வெள்ளி, மற்றும் தங்கம் கிடைத்துள்ளது, எனவே இன்னும் தோண்டினால் வைரம் கிடைக்கும்” என்று சொன்னார்.

தங்கம் கிடைத்த சீடர் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். அந்த நான்காவது சீடர் மண்வாரி எடுத்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது ஒரு பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு அந்த ஓட்டைக்குள் அவர் கீழே போய் விழுந்தார். அந்த நான்காவது சீடர் எழும்பி பார்த்தபோது அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு  சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது. அதை பார்த்த இந்த சீடர் கேட்டார், “நீங்கள் யார்? அந்த சக்கரம் ஏன் உங்கள் தலையில் சுற்றிக் கொண்டு உள்ளது?” என்றார்.

அப்படி கேட்டவுடனே அந்த சக்கரம் இந்த சீடர் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. பேராசை பிடித்த அனைவரும் கடைசியில் இங்கே தான் வருவார்கள். பேராசையால், வைரத்திற்கு ஆசைப்பட்டு, இந்த குழியில் வந்து விழுந்தேன். அந்த சக்கரம் என் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. இனி ஏதாவது ஒரு பேராசை பிடித்தவன் வந்து  இங்கே விழும்போது போது அந்த சக்கரம் உன்னை விட்டு அகன்று விடும்”, என்று கூறிக்கொண்டு அந்த சீடர் வந்த ஓட்டை வழியாக  இந்த மனிதன் மேலே சென்றார்.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்.



இன்றைய செய்திகள்

23.08.2024

* 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு: தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு.

* ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை இனி காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும்: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்.

* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களையும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது.

* பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா.

* சென்னையில்  டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகள் தொடங்கியது.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு.

* இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ.


Today's Headlines

* Exemption from re-writing departmental exam for differently abled government employees those who have crossed 50 years : Tamil Nadu Govt issued order.

* The payment should be paid only by cheque or DD if the Electricity bill exceeds more  than 5000/-


Tamil Nadu Electricity Board Informed.

*Tamil Nadu Chief Minister M. K. Stalin ordered to nationalize all the books of the late former Chief Minister Karunanidhi without any royalty.

* The 2nd indigenously built 700 MW nuclear reactor started production at full capacity yesterday.

* The Union Home Ministry announced that applications for the Padma Awards 2025 can be submitted till September 15.

* Russia shoots down 11 drones sent by Ukraine to attack Moscow

* Table Tennis League starts in Chennai.

* The Odisha State Government felicitated the Indian hockey team who won the bronze medal in the Paris Olympics.

* BCCI released the schedule for 5 Test matches against England.


Prepared by

Covai women ICT_போதிமரம்


நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிருவாக திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்: 14257 / கே2/ 2023, நாள்: 19-08-2024 ( 42-53 தொகுதிகளுக்கு) - இணைப்பு : ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்...


 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்: 14257 / கே2/ 2023, நாள்: 19-08-2024 ( 42-53 தொகுதிகளுக்கு) - இணைப்பு : ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல்...



தொடக்கக் கல்வி - 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண் .8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மதுரை மாவட்டம் , நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில் 42-53 தொகுதிகளுக்கு நடைபெறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



HMs Training DEE Proceedings -

  >>> Click Here to Download...




Participants HMs List -

  >>> Click Here to Download...



கலைத் திருவிழா Kalai Thiruvizha போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/ கலைத்திருவிழா/ ஒபக/ 2024, நாள்: 22.08.2024...

 

1 - 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைத் திருவிழா Kalai Thiruvizha போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின்  செயல்முறைகள் SPD Proceedings ந.க.எண்.2183/ ஆ8/ கலைத்திருவிழா/ ஒபக/ 2024, நாள்: 22.08.2024...


Sir/Madam,

As the competitions for grades 1 to 5 are planned to be conducted at cluster level, it has been informed to assign in-charge BRTEs for the vacant positions. It is Kindly requested to take this work as priority so that the cluster level competitions happen smoothly through the EMIS platform as scheduled.



>>> மாநிலத் திட்ட இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்.2183/ ஆ8/ கலைத்திருவிழா/ ஒபக/ 2024, நாள்: 22.08.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கலைத்திருவிழா


பள்ளி அளவிலான போட்டிகள் Video எடுத்து Google drive -ல் பதிவேற்றம் செய்து அதன் link ஐ Emis -ல் Submit கொடுத்தல்


*கடந்த ஆண்டு போலவே


ஒன்றிய அளவில் , / மாவட்ட அளவில் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை


*மேற்கண்ட 13 பக்க செயல்முறைகளை முழுமையாக படிக்கவும்☝️

இருசக்கர வாகனங்களில் பணம், நகை, விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வைத்து விட்டு செல்லாதீர்கள் - இடம்: ICICI வங்கி அருகில், கரூர்...

 


🛵 நீங்க ஸ்கூட்டர் வச்சிருக்கீங்களா....


🔹பணம்

🔹நகை

🔹விலையுயர்ந்த பொருட்கள்.


போன்றவற்றை உங்கள் வண்டியில் வைத்து விட்டு செல்லாதீர்கள்...


சம்பவ இடம்: *ICICI* வங்கி அருகில், கரூர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இலக்கிய மன்றச் செயல்பாடுகள் - போட்டிகளுக்கான கால அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 19528/ எம்/ இ1/ 2024, நாள்: 20-08-2024...

 

 

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான இலக்கிய மன்றச் செயல்பாடுகள் - போட்டிகளுக்கான கால அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 19528/ எம்/ இ1/ 2024, நாள்: 20-08-2024...


Literary Club Activities for Academic Year 2024-2025 - Time Table for Competitions - Proceedings of Director of School Education No. : 19528/ M/ E1/ 2024, Date: 20-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

 

பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது.


இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களை படிப்படியாக வளர்த்தெடுக்கும் சூழல் உள்ளது. மனதளவில் பாதிப்பு உள்ள மாணவர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 800 மருத்துவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க முடியாது.


மனநலம் சார்ந்து தான் திருத்த முடியும் அதுதான் எங்களது கடமை. மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் இல்லாமல் அனைத்து மாவட்டத்தையும் முன்னேற்ற முயற்சிகள் செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனுக்காக 67 பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதையும் தாண்டி ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது இதனை கண்டறிந்து நம் வீட்டுப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ அவ்வாறு நல்வழிப்படுத்துவோம்” என்றார்.


அரசுப்பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்று ரூ.30000 பரிசுகளை வெல்ல போக்குவரத்துக் கழகம் அழைப்பு...

 


சென்னை: பேருந்தில் பயணித்து புதிருக்கு விடை கண்டுபிடிக்கும் போட்டியில் பங்கேற்க மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது...



இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாதத்தையொட்டி, பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக சென்னை பஸ் டிரெஷர் ஹண்ட் (Chennai bus treasure hunt) என்ற போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளோம்.



இதில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயதுக்கு மேற்பட்டோர் குழுவாக பங்கேற்கலாம். ஒரு குழுவில் 2-3 நபர்கள் இருக்கலாம். அதில் ஒருவர் குழுவின் தலைவராக இருக்க வேண்டும்.



மொத்தம் 60 குழுக்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். எனவே, விரைவாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த 60 குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஆகஸ்ட் 25ஆம் தேதி போட்டி நடைபெறும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பல்லவன் போக்குவரத்து இல்லத்துக்கு வர வேண்டும்.



அவர்களிடத்தில் ஒரு துப்பு கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு மாநகரப் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அவ்வாறு முதலில் செல்வோர், அங்குள்ள தன்னார்வலரிடம் இருந்து அடுத்த துப்பு பெற்றுக் கொண்டு அடுத்து செல்ல வேண்டிய இடம் என அடுத்தடுத்து பேருந்துகளில் பயணிக்க வேண்டியிருக்கும்.



இறுதியாக செல்ல வேண்டிய இடத்துக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அக்குழுவுக்கு ரூ.15 ஆயிரமும், அடுத்தடுத்து வருவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்படும்.



முன்பதிவுக்கு https://t.co/EQT4hGEZKl என்ற இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் மற்றும் போட்டிக்கான நிபந்தனைகளை அறிய, 99439 97373 என்ற எண்ணை வாட்ஸ் ஆப்-ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.


MTC Chennai Bus

Treasure Hunt - Guidelines and Rules


Date: 25 Aug 2024 - Sunday

Time: 3 PM (Report at 02:45 PM)

Starting Point: Pallavan Illam (Pallavan Salai, Chennai)


Please read the following instructions carefully before registering:


Team Composition:

Each team must consist of 2-3 members.

One member must be designated as the Team Leader who will act as the primary point of contact and ensure team coordination.

This hunt is open to participants aged 16 and above.

Registration and Expenses:

No registration fee is required to participate in the hunt.

However, team members should carry sufficient cash as change - at least ₹100 per

head - to purchase bus tickets as needed during the event.

Event Duration and Travel:

The hunt will last approximately 3 hours.

Teams should be prepared to travel around the city using to solve and crack clues sequentially.

Teams are required to travel by MTC buses only. The use of personal vehicles is strictly prohibited. 

Tasks and Challenges:

Teams will be required to perform specific tasks as part of the hunt.

These tasks may vary in nature, requiring problem-solving, creativity, and teamwork.

Essential Items: 

Teams are encouraged to carry the following items:

Pens for writing down clues and solving puzzles.

Small bag to store papers and tickets

     collected along the way

Water bottles to stay hydrated.

Caps/umbrellas for weather protection.

Safety and Conduct:

The Team Leader is responsible for the safety and well-being of all team members throughout the event.

Teams must adhere to all traffic rules and behave respectfully towards the public.

Participants are advised to stay together as a team at all times.

Communication:

Use of mobile phones is allowed. Movement of teams maybe tracked via a designated WhatsApp group.

We may contact you during the hunt. Ensure that the Team Leader’s phone number is active and reachable always.

Health Precautions:

Participants are advised to wear comfortable clothing and footwear suitable for walking and physical activity.

If any team member has health concerns, please inform the organizers beforehand.

Disqualification:

Any team found cheating, breaking the rules, or engaging in unsafe behavior will be disqualified immediately.

The decision of the organizers will be final in all matters.

Registration Confirmation:

By registering, you agree to adhere to the rules and participate at your own risk.

In case you need clarity on any of the above points, please contact the organizers.

For Queries:

Please contact us via WhatsApp at +91 99439 97373 for any questions or further information.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...