கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hospital Securities and Public Captured the man who stabbing a doctor at the Chennai Guindy Government Hospital - Video



சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை மருத்துவமனை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்த வீடியோ...



Video captures a man who tried to escape after stabbing a doctor at the Chennai Government Hospital, surrounded by hospital guards and members of the public




It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election - A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Secretariat Staff Association report



தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு அறிக்கை மட்டும் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அது குறித்த கொள்கை முடிவினை, தெளிவான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டும் - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிக்கை


It is not appropriate for the DMK government to issue a statement only repeating the promises it made during the election. A policy decision on it, a clear stand should be taken immediately - Tamil Nadu Chief Secretariat Staff Association report



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Short film - Emotional Well-being

 


Short film - Emotional Well-being...


உணர்ச்சி நல்வாழ்வு - குறும்படம்...


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - பள்ளி மாணவர்களின் மன உறுதி காக்கும் "மனநல நல்லாதரவு மன்றம்" - தொலைபேசி வழி மனநல ஆலோசனைக்கான "நட்புடன் உங்களோடு - மனநல சேவை"


 14416 


மாவட்ட மனநலத் திட்டம், தமிழ்நாடு





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024

 


மருத்துவ பணிகள் தேர்வாணையம் MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 1200 செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் ஈர்த்தல் - இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13-11-2024 & செவிலியர்கள் பட்டியல்


Recruitment of Nurses appointed on contract basis by MRB - Absorbing 1200 Nurses into Regular Time Scale – Director's Proceedings, Dated : 13-11-2024 & List of 1200 Nurses


Tamil Nadu Medical Subordinate Services - Nursing Establishment - W.P.No.31213/2017 filed before the Hon'ble High Court of Madras- Nurses appointed on Contract Basis through MRB - Absorbing them into regular time scale - orders Issued - Regarding.


தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் - நர்சிங் நிறுவனம் - W.P.No.31213/2017 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது - MRB மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் - வழக்கமான கால முறை ஊதியத்தில் அவர்களை உள்வாங்குதல் - உத்தரவுகள் - வெளியிடப்பட்டது - குறித்து 


Annexure-I

 Ref.No.15885/N1/2/2018, Dated:13.11.2024

 1200 Contract Basis Nurses who are eligible and absorbed into regular time scale pay


Annexure-II - 182 Contract Basis Nurses who are not considered due to Service Particulars not received


Annexure-III - 142 Contract Basis Nurses who are not eligible and not absorbed into regular time scale pay



>>> செயல்முறைகள் & செவிலியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Career Guidance - One day refreshment training to Teachers & Administrative Instructors / Lab Assistants - DSE JD Proceedings


உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் - இரண்டாம் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 வட்டாரங்களில் (14 மாவட்டங்கள்) விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப (Administrative Instructors / Lab Assistants) - அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 14.11.2024 அன்று நடைபெறுதல் - மூன்றாம் கட்டமாக முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் 21.11.2024 அன்று சார்ந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் பயிற்சி முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் - சார்ந்து - பள்ளிக்கல்வி இனிய இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 11-11-2014


Career Guidance - One day refreshment training to Teachers & Administrative Instructors / Lab Assistants - DSE JD Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Doctors call off strike



மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: மருத்துவர்கள் நடத்திவந்த போராட்டம் வாபஸ்.


தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.


கத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்


தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.


சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றவர் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன். இவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து, டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.



இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.



இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



சென்னையில் அரசு மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. இதன்படி அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர, பிற பிரிவுகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.


இதுபற்றி அமைச்சர் கூறும்போது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன. டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். வீடியோ காலில் அவருடைய உடல்நிலையை பற்றி கேட்டறிந்தேன். உயிர் காக்கும் அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என ஆவேசத்துடன் கூறினார்.


அவர் தொடர்ந்து கூறும்போது, மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை மருத்துவ சங்கம் முன்வைத்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அரசு மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. நோயாளிகளுடன் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.


அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, ரோந்து பணி, பாதுகாப்பு குழு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் - தமிழ்நாடு அரசு அறிக்கை - நாளிதழ் செய்தி 


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement 


சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார்.


ஆனால், இன்று ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்..


ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீ்ணடும் நடைமுறைப்படுத்தினார்.


அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம், "டெஸ்மா" சட்டம் ரத்து செய்யப்பட்டன. 1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது.


அதேவழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் என்பது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


கடும் நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார். அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும்.

 

பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.


சமக்ர சிக்சா அபியான் திட்டத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையிலும் 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது திமுக அரசு. பழனிசாமியின் நாடகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்படடுள்ளது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...