பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
"பால் பொருட்பால் அதிகாரம்:
புல்லறிவாண்மை
குறள் எண்:843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்
துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."
பழமொழி :
சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.
Form friendships after due deliberation, having done so do not give place to doubt.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்
பொது அறிவு :
1. மீன்கள் இல்லாத ஆறு எது?
விடை: ஜோர்டான் ஆறு.
2. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை : தமிழ்நாடு
English words & meanings :
Hungry - பசி
Interest. - விருப்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்
நீதிக்கதை
எறும்பு
ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக கூறி புரிய வைக்க நினைத்தார்.
"ஒரு நாள் ஓர் எறும்பு சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.
மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்.
இன்றைய செய்திகள்
28.11.2024
* “ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது”
* ‘விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது’ - மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்.
* நாகை 3-வது நாளாக கனமழையால் தத்தளிப்பு; டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதம்.
* எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
* நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்.
* உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் டிரா.
* டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பும்ரா.
Today's Headlines
* “Tamil Nadu has been leading in solid waste management for the last 3 years using the Swachh Bharat 2.0 program”
* ‘Tamil Nadu government will not implement the Vishwakarma program’ - Chief Minister Stalin's firm response to the Central government.
* Nagai reels under heavy rain for the 3rd day; crops damaged in delta districts.
* Opposition parties continue to create chaos: Both houses of Parliament adjourned for the 2nd day.
* Earth's axis has tilted by 31.5 inches due to excessive groundwater absorption: information from Geophysical survey data.
* World Chess Championship: Indian player Kukesh draws in the 2nd round.
* Test rankings: Bumrah once again tops the bowlers' list.
Prepared by
Covai women ICT_போதிமரம்