கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Apply till 18.12.2024 for Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE)

 தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) 18.12.2024 வரை விண்ணப்பிக்கலாம்


Apply till 18.12.2024 for Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE)


அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றலாம்



Vacancies to be filled in Tamilnadu Electricity Board - Minister

 சட்டப்பேரவை நிகழ்வுகள்:


மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்  - அமைச்சர் செந்தில்பாலாஜி


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நிதித்துறையின் அனுமதியை கோரி உள்ளோம். அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என உறுதியளித்துள்ளார்.



19th February will be celebrated as Tamil Literature Revival Day - Chief Minister M.K.Stalin's announcement

 


பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


19th February will be celebrated as Tamil Literature Revival Day - Chief Minister M.K.Stalin's announcement


தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


 பிப்ரவரி 19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


“தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்"


சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.



பிப்ரவரி 19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி; தமிழ் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப். 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கே.பி.முனுசாமி கோரிக்கையை ஏற்று தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் “தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி” நாளாக கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


உ.வே.சாமிநாதர் பற்றிய அரிய தகவல்கள்

கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (1855). தந்தை ஒரு இசைக் கலைஞர். அதே ஊரில் தொடக்கக் கல்வியும், இசையும் கற்றார்.


* இவருக்கு தமிழில் இருந்த பேரார்வத்தைக் கண்டு, எங்கெல்லாம் தமிழ்ப் பாடம் கற்றுத் தருபவர்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் சென்று குடியேறி மகனுக்கு கல்வி கற்பிக்கச் செய்தார், தந்தை! புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.


* 1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார்.


* பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ல் சிந்தாமணியை வெளியிட்டார்.


* அன்று முதல் இறுதி மூச்சு வரையில், ஆங்காங்கே மறைந்து கிடந்த தமிழ்த் தாயின் ஒவ்வொரு அணிகலனாகத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து தமிழன்னையை அலங்கரித்தார். இவரது காலத்துக்கு முன்பு பெரும் புலவர்களின் படைப்புகள், சங்க நூல்கள், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை ஆகியவை வெறும் பெயரளவிலேயே இருந்தன.



* அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன் மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து பிரதிகளையும் அரும்பாடுபட்டு சேகரித்தார்.


* சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பி யங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளையும் தேடித் தேடி , அவற்றை பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.


* பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தாழமும், நகைச்சுவையும் கலந்து இழையோடப் பேசும் திறன் கொண்டவர்.


* தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.


* இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்

.

G.O. (Ms) No: 104, Dated : 05-12-2024 - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for 3 years

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 முழு நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு பணிநீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 104, நாள் : 05-12-2024 வெளியீடு 


Adi Dravidar and Tribal Welfare - 98 full-time sanitation workers working in Adi Dravidar welfare hostels have been extended for three years by Ordinance G.O (Ms) No: 104, Dated : 05-12-2024 Issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


All leaves like CL, RL, EL, ML should be taken with the permission of the Corporation Commissioner - Coimbatore Corporation Education Officer Circular


CL, RL, EL, ML என அனைத்து விடுப்புகளையும் மாநகராட்சி ஆணையர் அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும் - கோயம்புத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலர் சுற்றறிக்கை 


All leaves like CL, RL, EL, ML should be taken with the permission of the Corporation Commissioner - Coimbatore Corporation Education Officer Circular


தற்செயல்‌ விடுப்பு மற்றும்‌ வரையறுக்கப்பட்ட விடுப்பு Casual Leave & Restricted Leave மருத்துவ விடுப்பு மற்றும்‌ ஈட்டிய விடுப்பு Earn Leave & Medical Leave மாநகராட்சி ஆணையர் அனுமதி பெற்று தான் எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மாநகராட்சி அலுவலகம்‌,

கோயம்புத்தூர்‌.

ந.க.எண்‌. 3914/2024/கே-9 நாள்‌. 12,2024

சுற்றறிக்கை

பொருள்‌ - நாவாகம்‌ - கல்வி -' கோயம்புத்தூர்‌ மாநகராட்சி - மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை, உயாறநிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ - தலைமை ஆசிரியா்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ விடுப்பு துய்பபது - ஆணையர்‌ அவர்களது முன்‌ அனுமதி பெற அறிவித்தல்‌ - சார்பு.


பார்வை- ஆணையர் அவாகளின்‌ 05.12.2024 நாளது நேரடி உத்தரவு.


பார்வையில்‌ காண்‌ ஆணையர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, அனைத்துப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ மற்றும்‌ ஆசிரியாகள்‌ (பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்கள்‌ தவிர) விடுப்புக்‌ கோருதலுக்கான “CCMC ALL SCHOOL TEACHERS வாட்ஸ்‌ ஆப்‌” (Whatsapp) குழுவில்‌ சிறுவிடுப்புகள்‌ (தற்செயல்‌ விடுப்பு மற்றும்‌ வரையறுக்கப்பட்ட விடுப்பு) ஆகியவற்றை முன்னதாக தெரிவித்து, ஆணையா்‌ அவர்களால்‌ விடுப்பு அனுமதிக்கப்பட்ட பின்னரே விடுப்பு மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌, இதர விடுப்புகள்‌ (மருத்துவ விடுப்பு மற்றும்‌ ஈட்டிய விடுப்பு) ஆணையா்‌ அவர்களிடம்‌ சம்பந்தப்பட்ட ஆசிரியாகளே நேரடியாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட வாட்ஸ்‌ ஆப்‌ (Whatsapp) குழுவில்‌ தமது பள்ளி ஆசிரியாகள்‌ அனைவரும்‌ (பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியாகள்‌ தவிர) இணைக்கப்பட்டுள்ளதை பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ உறுதி செய்திட வேண்டும்‌. இந்த சுற்றறிக்கையினை பள்ளியின்‌ அனைத்து ஆசிரியாகளுக்கும்‌ சுற்றுக்கு விட்டு கோப்பில்‌ பராமரிக்க தெரிவிக்கப்படுகிறது. 


மாநகராட்சி கல்வி அலுவலா்‌

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி.

பெறுநர்‌ : மாநகராட்சி அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியாகள்‌ 

நகல்‌ : பள்ளி மேற்பார்வையாளாகள்‌

(நடுநிலைப்‌ பள்ளிகள்‌ / ஆரம்பப்‌ பள்ளிகள்‌),


Withdrawn of order requiring teachers to obtain permission before taking leave - Education Officer circular

 


கோவை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முன் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்


Withdrawn of order requiring teachers to obtain permission before taking leave - Coimbatore Corporation Education Officer circular issued


தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு துய்ப்பது சார்ந்து பிறப்பிக்கப்பட்ட கோவை மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை திரும்ப பெறப்படுவதாக கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


All India Civil Services Exam Training Centre, Civil Services 2024 Main Exam Result and Model Personality Test Notification - Press Release No : 2181, Date : 10-12-2024



அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், குடிமைப் பணிகள் 2024 முதன்மைத் தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி ஆளுமைத் தேர்வு அறிவிப்பு - செய்தி வெளியீடு எண் : 2181, நாள் : 10-12-2024



All India Civil Services Exam Training Centre, Civil Services 2024 Main Exam Result and Model Personality Test Notification - Press Release No : 2181, Date : 10-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...