கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court

 


பெண்ணின் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே - கேரள உயர்நீதிமன்றம்


Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court


பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.


2013 முதல் தன்னை தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17 ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதையடுத்து அவர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


"ஒரு பெண்ணின் உடலமைப்பு 'நன்றாக இருக்கிறது' என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். 


எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே" என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவையும் ரத்து செய்தார்.


IFHRMS - Pongal Bonus Bill Preparation Guidelines 2025 - Solution for Confusions


IFHRMS - 2025ஆம் ஆண்டு Pongal Bonus Bill தயாரிக்கும் வழிமுறைகள் - குழப்பங்களுக்கான தீர்வு


Pongal Bonus Bill Preparation Guidelines 2025 - Solution for Confusions



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

 

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு


சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புப் படியை, ₹600-ல் இருந்து₹1000ஆக ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு. இதற்காக ₹6.68 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers


எம்ஜிஆர் சத்துணவு திட்டம் 


சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி 600 இல் இருந்து 1000 ஆக உயர்வு 


தினசரி 20 ரூபாய் என்பதை தினசரி 33 ரூபாய் ஆக உயர்த்தி அரசாணை 


6.68 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு



>>> அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


January 26 - Conducting Grama Sabha Meeting on Republic Day - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, dated : 06-01-2025

 

 

ஜனவரி 26 - குடியரசு தினம் அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கடிதம், நாள் : 06-01-2025



January 26 - Conducting Gram Sabha Meeting on Republic Day - Meeting Agenda - Rural Development and Panchayat Director's letter, dated : 06-01-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


08-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண்:946

இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.

பொருள்: செரிக்கும் அளவு அறிந்து உண்பவனிடம் உடல் நலம் இருப்பது போல் அளவில்லாமல் உண்பவனிடம் நோய் இருக்கும்.


பழமொழி :
செய்வதை திருந்தச் செய்.

Whatever you do, do it properly.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.    

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :

மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி - மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. ஜம்மு காஷ்மீரின் ஆட்சி மொழி எது?

விடை :உருது.

2. உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது?

விடை: ஜப்பான்


English words & meanings :

High jumping      -       உயரம் தாண்டுதல்

Horse riding         -       குதிரை சவாரி


வேளாண்மையும் வாழ்வும் :

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்கள் தொகை பெருகி மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும் விவசாயத்திற்கும் தேவையான நீரை நிலத்தடியில் இருந்து எடுக்க ஆரம்பித்தனர்.


ஜனவரி 08

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் அவர்களின் பிறந்த நாள்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.


நீதிக்கதை

தெனாலிராமன் பூனை வளர்த்தது

விஜய நகரத்திலுள்ள பெருச்சாளிகள், எலிகள் முதலியவற்றின் தொல்லைகளை நீக்குவதற்காக பெர்ஷிய நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கில் பூனைக் குட்டிகளை இராயர் தருவித்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பூனையைக் கொடுத்து, அதற்குப் பசும்பால் கொடுத்து வளர்ப்பதற்காக ஒரு பசுவும் கொடுத்தார்.

தெனாலிராமனோ தான் வாங்கி வந்த பசுவின் பாலையெல்லாம் கறந்து பூனைக் குட்டிக்கு வைக்காமல், தானும் தன் மனைவி மக்களுமாகக் குடித்துவிட்டு பூனையை வெறுமனே விட்டு வைத்தான்.

குறிப்பிட்ட ஒரு தினத்தில் பூனைகளைப் பார்வையிடுவதற்காக இராயர் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்தார். எலும்பும் தோலுமான பிரஜைகள் தாங்கள் வளர்த்த கொழு கொழுவென்ற பூனைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.

கொழுகொழுவென்று வளர்ந்திருந்த தெனாலிராமனோ பட்டினியால் மெலிந்து போன பூனையை தான் காட்டினான். அதைக்கண்டு ஆத்திரமுற்ற இராயர் “ராமா உன் பூனைக்குப் பால் வைக்காமல் ஏன் பட்டினி போட்டாய்?” என்று கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன், “அரசே! என் பூனை பாலைக் கண்டாலே சாப்பிடாமல் ஓட்டமெடுக்கிறது. நான் என்ன செய்வேன்?” என்றான்.

அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அரசர் “ராமா! இதென்ன பால் குடிக்காத பூனையும் பூலோகத்தில் இருப்பது உண்டோ? நீ கூறுவது உண்மையானால் உனக்கு நூறுபொன் பரிசளிப்பேன்!” என்று கூறிவிட்டு அந்தப் பூனையின் முன்னால் பாலை வைக்கும்படிச் செய்தார்.

பாலைக் கண்டதுமே அந்தப் பூனை பயத்துடன் ஓட்டமெடுத்தது.

தெனாலிராமன் துணிவாக ஆனால் பணிவுடன், “அரசே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பூனைக்குப் பாலூற்றிப் போற்றி வளர்ப்பதைவிட குடிமக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும்படி பராமரிப்பதே மன்னனின் முதற் கடமையென்று கருதுகிறேன்!” என்றான்.

இராயர் அவனுடைய புத்தி நுட்பத்தைப் பாராட்டி நூறு பொன் பரிசளித்தார்.


இன்றைய செய்திகள்

08.01.2025

* தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்பிவி வைரஸ் (HMPV) தானாகவே சரியாக கூடியது, எனவே பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை,” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* சுற்றுலாத் துறை சார்பில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது.

* வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம், மிகவும் பழமையான ஜாரவா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 19 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.

* இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி இணை 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* As far as Tamil Nadu is concerned, the HMPV virus and its effect can be (HMPV)  recovered by itself, so there is no need to panic,” said M. Subramanian, Minister of Health and Public Welfare.

* On behalf of the tourism department, the 10th International Balloon Festival will begin on January 10th in Chennai, Madurai, and Pollachi.

* The Andaman Nicobar Island administration department has recorded a special historical activity by adding the names of 19 people in the electoral roll who belong to the very ancient Jarawa tribal community and issuing them identity cards.

* A powerful earthquake struck Tibet, situated at the Himalayan foothills. The Death toll rose. The quake was recorded as 7.1 on the Richter scale.

* Malaysia Open Badminton: Trisha Jolly - Gayatri duo advance to 2nd round.


Covai women ICT_போதிமரம்


NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025

 

2024-2025  முதுநிலை - எம்டி/எம்எஸ் பட்டப்படிப்பு/டிப்ளமோ/டிஎன்பி படிப்புகளுக்கான குறைக்கப்பட்ட சதவீத கட்-ஆஃப்களுக்கான புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு


NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025



Erode East Assembly constituency by-election on February 5 - Election Commission of India

 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு


The Election Commission of India announces a bypoll for Erode East Assembly constituency on February 5




 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...