கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10-01-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: மருந்து

குறள் எண்:948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்: நோய் இன்னதென்றும், அதன் காரணத்தையும் போக்கும் வழியையும் அறிந்து பிழையரப் போக்க வேண்டும்.


பழமொழி :
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.

A man is affected by his environment.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.    

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ, அதுவே உண்மையான கல்வி --சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

1. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள் ____________

விடை: இலையுதிர் காடுகள்

2. ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்________

விடை : செம்மண்


English words & meanings :

Shooting.     -       சுடுதல்

Volleyball.       -     கைப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் :

ஜனவரி 10

கரோலசு இலின்னேயசு அவர்களின் நினைவுநாள்

கரோலசு இலின்னேயசு (Carl Linnaeus or Carolus Linnæus) (மே 23, 1707 - சனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.


நீதிக்கதை

காகமும் அன்னப்பறவையும்

ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.

காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை பார்த்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் நிறத்தை பார்க்கும் போது காக்கைக்கு பொறாமையாக இருந்தது. ஒருநாள் அந்த அன்னப்பறவையின் நிறத்தை பார்த்துக்கொண்டு காகம், “எனக்கும் இதுபோல் நிறம் வேண்டும்” என்று ஆசைப்பட்டது.

“இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது” என்று காகம் யோசித்தது. “ஒருவேளை அந்தப் பறவை எப்போதும் தண்ணீரில் இருப்பதாலும், பல முறை குளிப்பதாலும் தான் வெள்ளையாக இருக்கிறதோ“என்று நினைத்தது.

காகமும், “இனிமேல் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை குளிக்க வேண்டும்” என்று  தீர்மானித்தது. அப்படி செய்தால் தானும் அழகாகவும், வெள்ளையாகவும் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையில் அழகாக மாறும் தன்னுடைய பயிற்சியை காகம் ஆரம்பித்தது.

காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் காத்திருந்தன. பலமுறை குளித்த பிறகும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது.

கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது.  அப்போதுதான் காகம் தன்னுடைய தவறை புரிந்துகொண்டது. தன் முயற்சியை கைவிட்டு, “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நினைத்தது. மனதில் அந்த மாற்றம் வந்தபின் காகம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் பறவையாக மாறியது.

நீதி : நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும்.


இன்றைய செய்திகள்

10.01.2025

* பல்கலைக்கழக மானியக்  குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை  வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* ஜனவரி 12-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

* பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளி பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.

* அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - 30,000 மக்கள் வெளியேற்றம்; பல வீடுகள், கட்டிடங்கள் எரிந்து நாசமாகின.

* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர்: அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு தகுதி.

* ஹாக்கி இந்தியா லீக் போட்டி: தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 3-வது வெற்றி.


Today's Headlines

* A separate resolution was passed in the Tamil Nadu Legislative Assembly urging the central government to immediately withdraw the two draft protocols of the University Grants Commission and the draft protocols related to the appointment of the Vice-Chancellor.

* Heavy rains likely in the delta districts on January 12: Chennai Meteorological Department announcement.

* Bengaluru has pushed down Chennai to  second place and became the most suitable city for women to work in.

* Forest fire in Los Angeles, USA - 30,000 people evacuated; many houses and buildings destroyed.

* Adelaide International Tennis Series: American player Madison Keys qualifies for the semi-finals.

* Hockey India League: Tamil Nadu Dragons team won for the 3rd time.


Covai women ICT_போதிமரம்


Powers given to Government Aided School Correspondents to pay Teachers

 


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு


The order gives full powers to school Correspondents to pay teachers in government aided schools


ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு உதவி பெறும் பள்ளி தாளாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது


அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி தாளாளர்கள்/ செயலாளர்கள்/ நிர்வாகிகள்


*ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற  முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


*அதற்காக தாங்கள் உடனடியாக DSC விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்


*முதல் கட்டமாக தாளாளரே DDO ஆக 1-3-2025 முதல் செயல்படுவார்



Commissioner of Treasuries and Accounts Proceedings Letter 

  >>> Click Here to Download...



Guideline for DSC  

>>> Click Here to Download...

SLAS Model Examination Dates – DSE & DEE Joint Proceedings, Dated : 09-01-2025



 மாணவர் கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரித் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 09-01-2025


Model Examination Dates for Student Learning Assessment Survey (SLAS) – Joint Proceedings of Director of School Education and Director of Elementary Education, Dated : 09-01-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




SLAS EXAM 04.02.2025 முதல் 06.02.2025 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது. 

அதற்கான மாதிரி வினாத்தாள்கள் 
13.01.2025, 
20.01.2025, 
27.01.2025 ஆகிய நாட்களில் வெளியிடப்பட உள்ளது. 

விடைக்குறிப்புகள் 30-01-2025 அன்று வெளியிடப்படும்.


வலைதள முகவரி : 




SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவுரைகள்

1. வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புறம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் . 

2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் . 

3. அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு - 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

👇👇👇👇👇

SLAS Exam Model Question Paper - Download Instructions - Click here



09-01-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண்:947

தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.

பொருள்: செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.


பழமொழி :
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

Authority shows the man


இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.    

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :

இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்


பொது அறிவு :

1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?

ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.

2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ?

சொர்க்கப் பறவை.


English words & meanings :

Martial arts.   -    தற்காப்புக் கலை

Running.         -      ஓடுதல்


வேளாண்மையும் வாழ்வும் :

நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது


ஜனவரி 09

NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்

வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

ஒரு ரூபாய்

முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை  ஒரு ஏழைக்கு கொடுக்க நினைத்தார்.

அவர் போகும் வழியில் அவரால் எந்த ஏழையையுமே பார்க்க முடியவில்லை . அதனால் அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. ஒருநாள் முனிவர், அவரது வீட்டை விட்டு வெளியே வரும் போது ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாகக்  கூறி அவரிடம் தான் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா அவ்வாறு கேட்ட பின் முனிவர் சிறிது நேரம் யோசித்து, ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாயை கொடுத்தார்.

உடனே ராஜாவுக்குக் கோபம் வந்தது. ராஜா முனிவரை பார்த்து “எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். முனிவர்  “நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன்.  இதை ஒரு ஏழைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.


அதற்கு ராஜா “நான்  பணக்காரன் என்னிடம் நிறைய பணமும், நிலங்களும் இருக்கிறது . ஆனால் நீங்கள் என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?” என்று கேட்டார்.

அப்போது முனிவர்  “உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய்.

உன்னை விட ஒரு ஏழையை என்னால் பார்க்க முடியாது. அதனால்   தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்”  என்றார்.

ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்.


இன்றைய செய்திகள்

09.01.2025

* பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!

* ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

* டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.

* இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.


Today's Headlines

* Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow!

* Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.

* Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.

* ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.

* ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw'.


Covai women ICT_போதிமரம்


USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes



அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி


USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes - Videos 


*பதற வைக்கும் காட்சிகள்





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



*கலிபோர்னியா காட்டுத்தீ: சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள்


*லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கமலா ஹாரிஸின் வீடும் காட்டுத்தீ பரவும் மண்டலத்திற்குள் வந்துள்ளது; அங்குள்ள பொதுக்கள் உடனடியாக வெளியேறவும் உத்தரவு


*கட்டுக்கடங்காத காட்டுத்தீ வேகமாக பரவி கலிபோர்னியாவை சூறையாடி வருகிறது;


*மலிபு நகரில் எடுக்கப்பட்ட காட்சிகள் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயின் தீவிரத்தைக் காட்டுகிறது


அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அதை அணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பற்றிய தீ, வனப்பகுதிகளில் ஏராளமான மரங்களையும் புல்வெளிகளையும் கருகச்செய்துள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன. இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதியில் உள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் பலர் அவசரஅவசரமாக வீட்டைவீட்டு வெளியேறினர். இதுவரை, 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



காட்டுத் தீயால் ஒரேநேரத்தில் வாகனங்கள் குவிந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனம் கிடைக்காத பலர் உடைமைகளை எடுத்துக்கொண்டு நடந்தே வெளியேறி வருகின்றனர். தீ ஏற்பட்ட பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது கலிஃபோர்னியாவிலும் தீ வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், வேகமான காற்றால்தான் தீ பரவி வருகிறது என்றும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.


Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court

 


பெண்ணின் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே - கேரள உயர்நீதிமன்றம்


Commenting on a woman's body is also a sexual offense - Kerala High Court


பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.


2013 முதல் தன்னை தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17 ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதையடுத்து அவர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


"ஒரு பெண்ணின் உடலமைப்பு 'நன்றாக இருக்கிறது' என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். 


எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே" என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவையும் ரத்து செய்தார்.


IFHRMS - Pongal Bonus Bill Preparation Guidelines 2025 - Solution for Confusions


IFHRMS - 2025ஆம் ஆண்டு Pongal Bonus Bill தயாரிக்கும் வழிமுறைகள் - குழப்பங்களுக்கான தீர்வு


Pongal Bonus Bill Preparation Guidelines 2025 - Solution for Confusions



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...