கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vellore female doctor gang rape case - 4 out of 5 convicts get 20 years imprisonment each



 வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - 5 குற்றவாளிகளில் நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை


Vellore female doctor gang rape case - 4 out of 5 convicts get 20 years imprisonment each


கடந்த 2022ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.


ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி, குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 


₹40,000 பணம், 2 சவரன் நகையும் பறித்துள்ளனர்.



வேலூரில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஆட்டோவில் ஆண் நண்பருடன் இரவுக் காட்சி திரைப்படம் சென்ற பெண் மருத்துவர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர்த்து மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து வழக்கு விசாரணை எண் 22/2022ஆக பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் அதிகபட்ச தண்டனைக்கான முகாந்திரம் இருந்ததால் கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொடுக்கப்பட்டுள்ளது.


20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு..

அதன்படி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மகிளா நீதிமன்றம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.


மேலும் இன்று நான்கு பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இளஞ்சிறார் ஒருவருக்கு நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக இன்றைய தினம் குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது அவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்ற ஒளிப்பதிவாளர்களை குற்றவாளிகள் தாக்கினர். அது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


20 years in jail for marrying 15-year-old girl



15 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை 


20 years in jail for marrying 15-year-old girl


கடந்த 2022ம் ஆண்டு திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், தன் உடன் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த மோகன் விக்னேஷ் (30) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகிய சட்டப்பிரிவுகளில் மோகன் விக்னேஷை கைது செய்த போலீசார், சிறுமியையும் மீட்டனர்


பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 20 ஆண்டுகள், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


சிறை தண்டனைகளை தனித் தனியாக அல்லாமல் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளதால், 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்

 

SLAS 2025 - Training for Field Investigators

 


மாநில அளவிலான அடைவு ஆய்வுத் தேர்வு 2025 - கள ஆய்வாளர்களுக்கான FIs வழிகாட்டுதல் பயிற்சி


SLAS 2025 - Training PPT for Field Investigators


தமிழ்நாட்டில் 414 ஒன்றியங்களில் உள்ள 45,924 பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு நடத்துவது குறித்து முழு வழிகாட்டுதல்


SLAS - 2025 State Level Achievement Survey Training for Field Investigators (FIs) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NHIS - Reimbursement of medical claims pertaining to the treatment - To be placed in DLEC on or before 14.02.2025

 


NHIS - 01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்கள் / ஓய்வூதியர்கள், தங்களது செலவினத் தொகையை மீளப்பெற 14.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு


New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

From

Thiru.S.Nagarajan,IAS.,

Commissioner of Treasuries and Accounts

(FAC),

3rd Floor, Perasiriyar K.Anbazhagan Maaligai

No.571, Anna Salai,

Nandanam, Chennai-35


To

All District Collectors


Rc.No. 526 /NHIS-2/2024 Dated: 23-01-2025


Sir,

Sub: New Health Insurance Scheme for Employees and Pensioners Reimbursement of medical claims pertaining to the treatment period 01.07.2023 to 30.06.2024 through District Level Empowered committee - To be placed in DLEC on or before 14.02.2025

Regarding.

Ref: 1.

G.O.Ms.(No).160, Finance(Salaries) Department, Dated:29.06.2021 

G.O.Ms.No.204, Finance (Health Insurance) Department, dated 30.06.2022

United India Insurance Company Limited, Chennai letter No.010600/Health / 2106 / 2024 dated 21.6.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 27.6.2024 addressed to the Government

The Government Letter No.29735/Finance (HI-2)/2023-2 dated 14.7.2024

Commissioner of Treasuries and Accounts, Chennai 35 letter Rc.No.526/NHIS-2/2024 dated 19.7.2024


I invite the kind attention to the references cited In the reference 6th cited, communication has been sent to all the District Collectors/ Treasury officers/ Pension Pay Officers / All Organisations /Director of Medical and Rural Health Services and Director of Medical Education (for providing TNMAR) to place the medical reimbursement claims pertaining to the treatment period from 01.07.2023 to 30.06.2024 in Dictrict Level Empowered Committee on or before 14.02.2025.

As mentioned in the reference 6 th cited, the cut-off date for forwarding the reimbursement claims to United India Insurance Company by the PPO/TOs/Head Office / Head of Organizations was 20.09.2024 and time has lapsed. In this connection, it is requested to place all the reimbursement claim documents for admissions from 01.07.2023 to 30.06.2024 in District Level Empowered Committee on or before 14.02.2025.

Hence, all the District Collectors are requested to give top priority this subject matter and issue necessary instructions to the Joint Director of Health Services / Treasury Officers to place all pending cases before the District Level Empowered Committee on or before 14.02.2025 and send the committee recommendations (for each case) to United India Insurance Company Limited / Commissioner of Treasuries and Accounts or concerned Head of Departments for settling reimbursement of medical claims to the individuals / petitioners without any delay.

This may be treated as most urgent.

S NAGARAJAN IAS

Commissioner of Treasuries and Accounts (FAC)

Copy

submitted to

The Principal Secretary to Government Finance (Health Insurance) Department Secretariat, Chennai 600 009

Copy to:

The Director of Medical and Rural Health Services, Chennai-06... With a

equest to issue suitable instructions to all Dleaith Servicacl to fave

necessary action.

The Director of Medical Education, Chennai-10... With a request to address

the Dean, Medical Colleges to provide TNMAR rate for cases recommended by

DLEC immediately.

The Pay and Accounts Officers- To communicate the cut off date to the DDOs

and inform the fact to CTA.

All RJDs- To take follow up action.

Pension Pay Officer, Chennai / All Treasury Officers... TO communicate the cut

off date to the DDOs/ Pensioners and to take necessary action to place the

pending cases in DLEC before 14.02.2025.

//Forwarded by order//



>>> கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


30-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:
நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.


பழமொழி :
தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு.

Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும் - தந்தை பெரியார்


பொது அறிவு :

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.


English words & meanings :

Hill      -     மலை

Island         -     தீவு


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.


ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள்

மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை

தலைமை அமைச்சர்

ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.

தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.

மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.

மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை.

இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.

நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.


இன்றைய செய்திகள்

30.01.2025

* தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

* சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.

* சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.

* ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.


Today's Headlines

* The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibusses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.

*Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.

* The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.

* ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.

* ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.

* ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place


Covai women ICT_போதிமரம்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of SGTs on 04.02.2025 - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று நடைபெறுகிறது - தொடக்கக் கல்வி இயக்குநரின் DEE செயல்முறைகள்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of Secondary Grade Teachers on 04.02.2025 -  Directorate of Elementary Education - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SLAS Exam - Tasks of Headmaster and Teachers

 

 


SLAS தேர்வு - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


SLAS Exam - Tasks of Headmaster and Teachers


அனைவருக்கும் வணக்கம்


SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:

4.2.2025 - Tuesday -3 rd std

5.2.2025 - Wednesday -5th std

6.2.2025 - Thursday - 8th  std 


தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்


🎯 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல். 


🎯 ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR  தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல். 


🎯 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல். 


🎯 தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium  வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும். 


🎯 தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல். 


🎯 தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும். 


🎯 குறிப்பு  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி.🙏💐


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...