கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது



 லஞ்சம் வாங்கிய சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கைது


திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி கைது.


எழுத்தர் சசிகுமாரின் பழைய சம்பள பாக்கியை தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றபோது டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு

 


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு


தங்கத்தின் விலை 38% குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.


டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.


தங்கம் விலை சுமார் 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு


நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.


இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும். இதில் 38% என்பது ரூ.3250 ஆகும்.


இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.


இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.


என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?



உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது, இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.


ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 38% குறையும் என்று கூறியுள்ளார்.


அவர் தற்போதுள்ள தங்கத்தின் விலையில் 38 சதவீதம் வரை குறையலாம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 3,250 வரையில் தங்கத்தின் விலை குறையக்கூடும்


அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.


இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.


சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


உச்சத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.



தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.




Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்

ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தொடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.



Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?

ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை  ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.


ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.



1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.


2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .


3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.


ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


 100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Proceedings of the Director of Elementary Education to conduct assessment test for students on 04.04.2025 and 16.04.2025, Dated: 03-04-2025








பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் Result ஒப்புதல் - BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள்

 

 


2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் 



2024-2025 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office



>>> 2024-2025ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் (2024-2025 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office)...



>>> கல்வி ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் - மாதிரி 2 (Annual Result Formats)...


திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்



திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - தேர்வு தேதி மாற்றம்


திருவாரூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கோடை வெயில் தாக்கத்தால் 1 - 5 வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை மாற்றப்பட்ட நிலையில், 7ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் மட்டும் அம்மாவட்டத்தில் 8ம் தேதி நடக்கும் என அறிவிப்பு.



தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மகள் கைது



 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத் தேர்வில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதிய மகள் கைது


நாகப்பட்டினத்தில் தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். 


இதன்படி நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து விட்டு கையெப்பம் பெற்றார். அப்போது அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி, முககவசம் அணிந்து இருந்தார்.


இதில் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியிடம் முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 


அதில், அவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை என்பதும், இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்ததும், கடந்த 28ம் தேதி நடந்த தமிழ் பாடத் தேர்வை இதே போல் முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியதும் தெரிய வந்தது. 


இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்கு வந்த போலீசார், செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-04-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-04-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

குறள் எண்:1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்?

பொருள்:
எவராலும் விரும்பப்படாத கருமி தனக்கு பிறகு என்று எதை கருதுகின்றான்?


பழமொழி :
செய்யத் தக்கதை ,

செயத்தக்க வழியில் செய்வதே அழகு.

Whatever is worth doing, is worth doing well.


இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன். 

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.


பொன்மொழி :

உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது. -- மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன?

விடை : நாஞ்சில் நாடு.       

2. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் என்ன?

விடை: ஒடிசா


English words & meanings :

Stomach ache.     -    வயிற்று வலி

Surgery.    -    அறுவை சிகிச்சை


வேளாண்மையும் வாழ்வும் :

குற்றால அருவியில் குளிப்பதாய் நினைத்துக் கொண்டு ஷவரில் தண்ணீரை திறந்து விடாமல் குளிப்பதற்குக் குறைந்த அளவு தண்ணீரையே பயன்படுத்துங்கள்.


நீதிக்கதை

பறவையும் ஆமையும்

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது.

அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை

மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,

சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது.

அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம்

மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.அந்த பதிலைக் கேட்ட ஆமை சற்று சிந்தித்தது.

நீதி: தனியாக பெரிய பங்களாவில் வசிப்பதை விட, உறவு மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய வீட்டில் வசிப்பது சந்தோசம்.


இன்றைய செய்திகள்

03.04.2025

* விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் நேற்று முழு கடையடைப்பு.

* தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* திருநங்கைகளுக்காக நாடு முழுவதும் 18 இல்லங்கள்: மத்திய அரசு தகவல்.

* இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

* சென்னையில் நேற்று முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.


Today's Headlines

*During the 3rd phase of the excavation in Vembakottai at Virudhunagar district many valuable artifacts were found already. Now they found a small golden ball in 2.04 metre depth.

*There is bundh in Nilgiris district yesterday, urging authorities to cancel the e-pass practice.

*Heavy rains are likely to occur for four days in Tamil Nadu. Prediction by India Metrological department

*18 Homes across the country for transgender people: Central Government Information.

*US President Donald Trump is reportedly engaged in a serious consultation on 100% tax on India's agricultural products.

*Tickets for the match between Chennai Super Kings and Delhi Capitals started in the IPL cricket match.

*The first Sabha Club men basketball tournament will be held in Chennai from yesterday to 7th.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...