கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலா 30 வீரர்களை கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

 

அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, கோவைக்கு தலா 30 வீரர்களை கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025



Kalloori Kanavu Guide - May 2025 - College Dream Guide



கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  வழிகாட்டி கையேடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் (Retirement HMs), பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான படிவங்கள்

 


பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டியவை & தேவையான பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள்


Items to be handed over by retired Head Masters to Teachers taking charge & required forms 



>>> பொறுப்பு ஒப்படைப்பு & பொறுப்பு ஏற்கும் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> மடிக்கணினி ஒப்படைப்பு விவரம் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



நண்பர்களே வணக்கம் 🙏


31/5/2025 *பணி ஓய்வு* 

தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு *வாழ்த்துகள்* ...


 *பணிக்காலத்தின்* "கடைசி வாரத்தில்" உள்ளீர்கள் 😊


அடுத்த " *சனிக்கிழமை* " ஓய்வு 👍 

தங்களின் மாணவர் நலன் சார்ந்த தொடர் செயல்பாடுகளுக்கு தலை வணங்குகிறோம் 💐💐💐



பொறுப்பு ஒப்படைக்கும்

 தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் முதுகலை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...


Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...


சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது...

1) Special fees A/c

2) PTA A/c

3) HM /NSD / Misc / School A/c

4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...

5) SNA A/c / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்) 

தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை 


ஒவ்வொரு கணக்கிற்கும்


நான்கு விஷயங்கள்


1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)

2) cash book

3) Minutes Note ( தீர்மான நோட்)

4) voucher file/ ஒட்டு file


இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும் 


+ 5) stock register தனியே இருக்கலாம்....


நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் வங்கி கணக்கில் உள்ள தொகை..

Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...


 *Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...


உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...


பகிர்ந்து கொள்ள வேண்டியது....


1) email/ Gmail ID password

2) EMIS ID password

3) CEO DEO phone number

4) SMC/ PTA president Phone no


மற்றபடி...


1) Cycle account (balance male female community wise)

2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்

3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....

4) office bureau keys...


சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...


ஜூன் மாதத்தில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று புதிய தலைமை ஆசிரியர் வந்து விடுவார்கள்....

மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கட்டாயம் இருக்கும்...


எனவே முதுகலை ஆசிரியர்கள் நம்பி charge எடுக்கலாம் 😊


பணி ஓய்வு பெறுபவர் 

"சூழ்நிலைக்கு ஏற்ப" நல்லவராகவோ


அல்லது

 "விமர்சனத்திற்கு உரியவராகவோ" 

இருந்து இருக்கலாம்...


எப்படி இருப்பினும்...

அவர் நமக்காக/ மாணவ செல்வங்களுக்காக/ அரசிற்காக பணி புரிந்து உள்ளார் 💐💐💐...


அவரின் " *ஓய்வு கால கண்ணியம்" காக்க வேண்டியது* நமது கடமை ✋🏻...


உரிய பணப் பலன்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு கிடைக்கச் செய்வது நமது " *தார்மீக* *கடமை* "... 



தகவலுக்காக

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம் 

மதுரை மாவட்டம் 👍



Whether the following the registers have been handed over ( Yes/ No)


1.Register of Assets  - 

2.Amenity and Special Fees Cash book with passbook – 

3.Minutes books for special fees – 

4.Daily Fee Collection Register – 

5.Term Fee Register – 

6.Demand,Collection and Balance Statement- 

7.Arrear Demand Register – 

8.Penal Fee Register – 

9.Money Value forms Stock Register with Stock – 

10.TNTC 70 Register ( Salary and Non Salary ) - 

11.Undisbursed Pay Register  - 

12. C F 51 Cash Book – 

13.Permanent Advance Register _ 

14.Subsidiary Cash Book _ No

15.PTA Cash Book,Pass Book and Minutes Book – 

16.Draft / Cheque Register  - 

17.Stamp Account with Balance – 

18.Challan Register - 

19.English Medium Fees Collection Register – 

20.Scale Register – 

21.Register of Service Books – 

22.Scholarship Pass Book and Acquittance Register – 

23.Sanchayika Cash Book and Pass Book _ 

24.Flag Day Collection Register – 

25.Other Falgs Collection Register –

26.Tools and Plants Register –No

27.Broken Article Register and Auction Register  - 

28.Register of Free Books –

29.Register of Free Note Books – 

30.Register of Free Uniforms – 

31.Register of Free Cycles – 

32.Register of Free Bus Passes – 

33.Building Development Committee Minutes Books,Pass Book and Cash Book – 

34.Inspection Reports of CEO and DEO – 

35.Admission Register – 

36.Consolidated Attendance Register – 

37.Consolidated  Mark  Register – 

38.TC Book – 

39.Register of Unclaimed  SSLC  Certificates  -

40. Register of Unclaimed  HSE  Certificates  -

41.Register of Trophies and Cups – 

42.Log Book – 

43.Supervision Register – 

44.Staff Council Minutes Book - 




Relieved   Officer                                                                                                               Relieving   Officer


Google Forms With QR Code முறையில் மதிப்பீடுகள் உருவாக்கும் வழிமுறைகள்



 Google Forms With QR Code முறையில் மதிப்பீடுகள் உருவாக்கும் வழிமுறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்

 

 பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கின்றன – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்


தமிழ்நாட்டில் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைகின்றனர்.



2025-26 கல்வியாண்டிற்கான தமிழக பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இந்தத் தேதியில் செயல்படத் தொடங்க உள்ளன.


பள்ளி திறப்பதற்கு முன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இவை மாணவர்களின் பள்ளி வாழ்க்கையை சீராகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில் அமைந்துள்ளன.



*1. பாடப்புத்தகங்கள் விநியோகம்*


பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.


அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.


தலைமையாசிரியர்கள், புத்தகங்களை வரிசையாக வகுப்புகளின்படி தயார் செய்து வைக்க வேண்டும்.



*2. பள்ளி வளாக சுத்தம் மற்றும் பராமரிப்பு*


பள்ளி வளாகம் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.


கழிவுநீர் சேகரிப்பு, கழிப்பறை வசதி, குடிநீர் உபகரணங்கள் ஆகியவை சீரமைக்கப்பட வேண்டும்.


மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.



*3. பாடத்திட்டம், நாட்காட்டி மற்றும் கால அட்டவணை*


புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்ட திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.


வாராந்திர கால அட்டவணை மற்றும் ஆண்டு நாட்காட்டி தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.



*4. மாணவர் நலத்திட்டங்கள்*


இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சரியாக பதிவு செய்யப்பட்டு, ஒழுங்காக வழங்கப்பட வேண்டும்.


மாணவர்களின் விலாச விவரங்கள், ஆதார் இணைப்பு உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும்.



*5. வாகன பாதுகாப்பு பரிசோதனை*


பள்ளி வாகனங்கள் அனைத்தும் RTO சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


அனுமதி சான்றுகள், வாகனப் பராமரிப்பு, டிரைவர் தகவல்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும்.



*6. தொடர்பு முறைமைகள் மற்றும் பெற்றோர் தொடர்பு*


மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்புகள், கால அட்டவணை, விழாக்கள் பற்றிய தகவல்களை SMS / வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் குறித்து திட்டமிடப்பட வேண்டும்.



*7. வெப்ப அலை / மழை முன்னெச்சரிக்கை*


இந்நேரத்தில் வெப்ப அலை / மழை காரணமாக முன்னெச்சரிக்கைகள் அவசியம்.


தேவையான இடங்களில் கூடுதல் குடிநீர் வசதிகள் மற்றும் நிழலிடங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 


மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


 மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் Supreme Court Judgment - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.


இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது. 


இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல," என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.


எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமாக மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவ...