கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாராட்டு விழாவைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு



 ஆசிரியர்களைக் குற்றவாளியாக்குவது நியாயம் அல்ல - பாராட்டு விழாவைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முடிவு - நாளிதழ் செய்தி


பொதுத்தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள பாராட்டு விழாவை புறக்கணிக்க, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.



விபரம் சேகரிப்பு


இதற்காக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


அதேவேளை, தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது விசாரணையும் நடத்தப்பட உள்ளது.


மேலும், அந்த பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் சென்று, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.


இதனால், இந்தாண்டு முழு தேர்ச்சி அடைந்த பள்ளிகள், அடுத்தாண்டு இதே நிலையை தொடருமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், இந்தாண்டு பாராட்டு விழாவில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும், அடுத்தாண்டு விசாரணை வளையத்துக்குள் வரும் வாய்ப்பு உள்ளது.



உளவியல் சார்ந்தது


அதனால், நிரந்தரமில்லாத இந்த பாராட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.



இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:


அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி என்பது, முழுக்க முழுக்க ஆசிரியர்களை சார்ந்தது அல்ல. அது, பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகச்சூழல் மற்றும் உளவியல் சார்ந்தது. அவற்றை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மாணவர்களின் கற்றல் திறன், ஈடுபாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தேர்ச்சி விகிதம் அமையும் என்ற நிலையில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்திப்பதும், அது நிகழாதபோது, ஆசிரியர்களை குற்றவாளிகளாக்குவதும் ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.





தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


 தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


அன்பான பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கம் ,


       இக்கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.


    உங்களில் மூத்த ஆசிரியராகவும், மூத்த அலுவலராகவும், பணியாற்றிய நான் உங்களோடு எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


உயர்த்துவோம் உயர்வோம்

இது நமது தாரக மந்திரம் 


ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி

இது நமது முன்னோர்கள் வாக்கு 


நாம் உறுதி ஏற்று பள்ளிக்குச் செல்வோம் .


1. பள்ளியைப் பேணிப் பாதுகாப்போம் ,

2. பள்ளியை அழகாகவும் வைப்போம் ,

3 . பள்ளி வகுப்பறையைத் தூய்மையாக்குவோம்

4 . பள்ளி சுகாதாரத்தை உறுதி செய்வோம் 

5. மாணவர்களை நேசிப்போம் 

6. காலை இறை வணக்கக் கூட்டத்தை சிறப்பிப்போம் 

7. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை ஆர்வப்படுத்துவோம் ,

8. பள்ளி விழாக்களை பெருமைப் படுத்துவோம் 

9. விளையாட்டின் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவோம் ,

10. அனைத்துப் பள்ளி வயதுப் பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்போம் ,

11. பெற்றோருடன் இணைந்து செயல்படுவோம் ,

12. SMCயுடன் இணைந்து பணியாற்றுவோம், 

13. அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்வோம்,

14. அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்போம்

15. நமது அரசுப்பள்ளி பெருமைகளைப் பேசுவோம் ,

16. குழந்தைகளின்  இல்லம் நோக்கி,

குழந்தைகளின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம் பெறுவோம்.

      "உங்கள் வாழ்வும் வளமும் நலமும் சிறக்க வாழ்த்துகின்றேன்" .

அன்புடன் 

ச.கண்ணப்பன்


Questionnaire for choosing the best school



 சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்


Questionnaire / Rating List for choosing the best Schools 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Best School Shields for the year 2024-2025 - DEE Proceedings

 

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Awarding of Best School Shields for the year 2024-2025 to Government/ Government Aided Primary/Middle Schools - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு



களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு


How to update E-SR Part 1 in Kalanjiyam Website 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


 வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தவறாக ஊதிய நிர்ணயம் செய்த உயர் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை & கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்த விவரம் - அரசின் துணைச் செயலாளர் கடிதம், நாள் : 29-05-2025


Disciplinary action against higher officials who wrongly fixed the salary of those promoted as Block Education Officers from Middle School HeadMasters & details of deduction of excess salary fixation - Letter from the Deputy Secretary to the Government, Date: 29-05-2025



நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்தல் சார்ந்து அரசின் தெளிவுரைக் கடிதம் - Pay Fixation to BEOs - Clarification Letter from School Education Secretary 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

 தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று 31-05-2025 ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு


8,144 people retired from Tamil Nadu government jobs in a single day today, 31-05-2025


இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு


தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை

 💁‍♂️THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை 💁‍♂️THIRAN - BASELINE ASSESSMENT Question Paper DOWNLOAD Procedu...