கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு - நாளிதழ் செய்தி

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு - நாளிதழ் செய்தி


Old pension scheme to be announced for government employees and teachers in September - Daily News


அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி - செப்டம்பர் மாதத்தில் வருது பழைய ஓய்வூதிய திட்டம் - வெளியான தகவல்!


தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக, பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம்தான் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது.


2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.


தமிழகத்தில் பழைய ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக ஆட்சி முடிந்து, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது.


அதற்குப் பிறகு கொரோனா நெருக்கடி, மோசமான நிதிநிலை உள்ளிட்டவை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் ஜனவரி மாதத்திலேயே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும். எனவே, இந்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.


கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது, திருமண நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்த நிலையில் , பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.


மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், செப்டம்பர் மாதத்திற்குள் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என அறிவித்தார். இது குறித்து ஆராய்வதற்கு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வு செய்ததோடு, அரசு ஊழியர்களிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்தது.


தற்போது நிதிநிலை குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு உறுதியாக இருக்கும் என்கின்றனர். தற்போது மட்டுமல்ல கடந்த காலங்களிலும் திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. தற்போதும் அரசு ஊழியர்கள் தேர்தலை குறி வைத்தே தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 400:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.


பழமொழி :
Wanted deeds only, not words.

செயல்களே தேவை ; சொற்களல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.


பொன்மொழி :

தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை தொடர்ந்து செய்து வருவதே  ஆகும். - விவேகானந்தர்


பொது அறிவு :

01.தென்னிந்திய நதிகளில் மிக நீளமான நதி எது?

            கோதாவரி (Godavari)

02.  தமிழில் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

      நா. பிச்சமூர்த்தி (N.Pichaimurthi)


English words :

crowd    -     கூட்டம்

hide        -      மறை


Grammar tips :

Situation of using question word

* Who -is used to ask about person

* Where -Is used to ask about place

* When -time

* Why -reason

* What -things

* How-method

* Which -choice

* How many -quantity

* How often -frequency



அறிவியல் களஞ்சியம் :

ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.


ஜூன் 09

சார்லஸ் டிக்கென்ஸ் அவர்களின் நினைவுநாள்

சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.



நீதிக்கதை

குரங்கு அறிஞர்

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.


இன்றைய செய்திகள்

09.06.2025

இன்றைய செய்திகள்

⭐கொரோனா பரவல் - கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்.
"அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்"

⭐ மணிப்பூர் மாநிலத்தில் போராட்டங்கள் காரணமாக இணைய சேவை நிறுத்தப்பட்டது.

⭐லாஸ் ஏஞ்சல்ஸில், ICE நாடுகடத்தல் சோதனைகளுக்கு எதிரான போராட்டங்கள் மோதல்களாக அதிகரித்துள்ளன.


🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 WTC இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் முயற்சிக்கிறார், இங்கிலாந்தில் வலுவான கவுண்டி சீசனுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் பணியாற்றி வருகிறார்.

🏀 ஹாக்கியில் நெதர்லாந்திடம் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.


Today's Headlines

✏️ Corona is spreading fast . Pregnant women are advised to wear masks. "If anyone has high fever, cough  and body ache they have to move to hospital immediately"

✏️In Manipur ,Internet services suspended  due to protests.

✏️ In Los Angeles, protests against ICE deportation raids have escalated into clashes.

SPORTS NEWS

🏀 After a strong county season in England, Australia all-rounder Beau Webster is working towards to secure a place in the World Test Championship final against South Africa.

🏀 India lost  to Netherlands in hockey  by 2-1


Covai women ICT_போதிமரம்


இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி



 இல்லாத 50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


வெளிவந்த ரூ. 230 கோடி மோசடி! 50,000 அரசு ஊழியர்களின் ஊதியம் எங்கே? 


மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று மாநில அரசு தகவல்


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.


மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று வரைதல் மற்றும் வழங்கல் (DDO - அரசு ஊழியர்களின் ஊதியத்தை வங்கிக் கணக்குகளில் நிர்வகிப்பவர்) அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


இந்தக் கடிதத்தின்படி, 50,000 ஊழியர்கள் என்றால், அம்மாநிலத்தின் அரசுப் பணிக்குழுவின் 9 சதவிகிதமாகும். அரசு ஆவணங்களில் அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவைகூட இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு 2024, டிசம்பர் மாதத்திலிருந்து ஊதியமாக (ரூ. 230 கோடி) வழங்கப்படவில்லை என்று கடிதம் கூறுகிறது.


இந்த ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளார்களா? அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது பொய்யான ஊழியர்களா? (Ghost Employees)


ஊதியம் பெறாத 50,000 ஊழியர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்களாகவும், 10,000 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் உள்ளனர்.


ஒருவேளை 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? அரசுப் பணிக்குழுவில் 9 சதவிகித ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? ரூ. 230 கோடி முறைகேடு நடப்பதை, அரசு தெரியாமல் அனுமதித்து வருகிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.


இந்த ரூ. 230 கோடி மோசடி விவகாரம் குறித்து, 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மே 23 ஆம் தேதியில், சுமார் 6,000 அதிகாரிகளுக்கு கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கடிதம் அனுப்பியது.


உண்மையான அரசு ஊழியர்களுக்கு 6 மாதகாலமாக ஊதியம் வழங்கப்படாததால்தான், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


அரசு ஊதியத்தில் போலி ஊழியர்களின் விவரங்களைச் சேர்த்து, பொது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மோசடிக்காரர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடுகின்றனர்.



50000 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதாக ரூ.230 கோடி மோசடி


மத்திய பிரதேசத்தில், அரசு கோப்புகளில், 50,000 ஊழியர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் விடுவிக்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசின் பல்வேறு துறைகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவர்களில், 50,000 ஊழியர்களின் பெயர்கள் அரசு கோப்புகளில் உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த ஊழியர்களுக்கு பிரத்யேக அடையாள எண், பணியாளர் குறியீடு இருந்தும் சம்பளம் வழங்கப்படாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனரா? அல்லது போலி ஊழியர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இந்த ஊழியர்கள் போலியாக இருந்தால், அவர்களின் சம்பளத்துக்காக ஒதுக்கப்பட்ட, 230 கோடி ரூபாய் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, மாநிலம் தழுவிய சரிபார்ப்பு நடைமுறையை கருவூல துறை துவங்கி உள்ளது. அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் பணிபுரியவில்லை என சான்றளிக்கும்படி, துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், '2024 டிசம்பர் நிலவரப்படி, 50,000 அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்களில், 40,000 பேர் வழக்கமான ஊழியர்கள், 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள்.


'ஒருவேளை இவர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்திருந்தால், அரசு கோப்புகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 50,000 ஊழியர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதன் வாயிலாக, 230 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னரே உண்மை தெரிய வரும்' என்றனர்.


அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மோசடி

மத்திய பிரதேசத்தில் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை மாநில காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 9 சதவிகிதம் ஆகும். இதுதொடர்பாக துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊதிய மோசடியாக இது கருதப்படுகிறது.


நடந்தது என்ன?

ஊதியம் கிடைக்கப்பெறாத ஊழியர்களுக்கு அவர்களுக்கான அடையாள எண்கள் இருந்தும், ஊதியம் வரவு வைக்கப்படாததால் இதில் ஏதேனும் பெரும் முறைகேடு நடந்து இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கின்றனரா? அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனரா? அல்லது அவர்கள் போலி ஊழியர்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.  திடுக்கிடும் ஒழுங்கின்மை சம்பவத்தை விசாரிக்க வலியுறுத்தி, கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையர் (CTA) அனைத்து வரைதல் மற்றும் விநியோக அதிகாரிகளுக்கு (DDOs) கடந்த மே மாதம் 23ம் தேதி அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, 6,000க்கும் மேற்பட்ட டிடிஓக்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், மேலும் 15 நாட்களில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விளக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.


போலி ஊழியர்கள்:

ஊதியம் வழங்கப்படாத 50 ஆயிரம் பேரில் 40 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள் என்றும், மற்ற 10 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் கடந்த 6 மாத ஊதியம் 230 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை அவர்களது கணக்கில் செலுத்தப்படாவிட்டால் பணம் எங்கே போனது? என்ற கேள்வி வலுத்துள்ளது. போலி ஊழியர்களின் விவரங்கள், சம்பளதாரர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டு மோசடி அரங்கேறியுள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


குவியும் கேள்விகள்:

அது உண்மையானால் அரசாங்கத்தை ஏமாற்றுவது யார்? சம்பளத்தொகையை நிலுவையில் வைத்து பின்பு காசோலை இன்றியே அந்த பணத்தை எடுக்க முடியுமா? அரசாங்கம் அறியாமலேயே 230 கோடி ரூபாய் மோசடிக்கு இடம் அளித்துள்ளதா? 50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதா? ஆம் எனில், 9 சதவீத ஊழியர்கள் இல்லாமல் துறைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன? என யாராளமான கேள்விகள் எழுகின்றன. 


சரிபார்ப்பு பணிகள் தீவிரம்:

வழக்கமான தரவு தணிக்கையின் போது மாநில கருவூலம் இந்த முரண்பாட்டைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், ஒரு பெரிய நிதி ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு ஊழியர்களின் தரவுகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.  அதன் மூலம் போலி ஊழியர்கள் அரசின் அமைப்பில் அமைதியாக பதுங்கியிருக்கிறார்களா என்பதும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.


8வது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் எவ்வளவு இருக்கும்?


8வது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் எவ்வளவு இருக்கும்? - தோராய கணக்கீடு


8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 


8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகள் 8வது ஊதியக் குழு புதுப்பிப்புகள்:


 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


8வது ஊதியக் குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட 8வது ஊதியக் குழுவை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. 

ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய கவனம் "ஃபிட்மென்ட் காரணி" ஆகும், இது ஊதிய அளவுகளை சரிசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு பெருக்கி ஆகும். 

7வது ஊதியக் குழு 2.57 காரணியைப் பயன்படுத்தியிருந்தாலும், 8வது ஊதியக் குழு 2.86 ஆக அதிகரிக்க முன்மொழியலாம், 

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆகவும், ஓய்வூதியங்களை ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆகவும் உயர்த்த வாய்ப்புள்ளது. 

நியமிக்கப்பட்ட கமிஷன் உறுப்பினர்களால் இறுதி பரிந்துரைகள் செய்யப்படும். 

8வது சம்பள ஆணையத்தின் சம்பளம் மற்றும் படிகள் மீதான தாக்கத்தைப் புரிந்துகொள்வது (மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது) 

8வது சம்பள ஆணையம் அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே: 

திருத்தப்பட்ட படிகள் மற்றும் அடிப்படை ஊதிய சரிசெய்தல்கள்

 (மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது) 


அடிப்படை சம்பள சரிசெய்தல்களுடன், வீட்டு வாடகை படிகள் (HRA) மற்றும் பயண படிகள் (TA) போன்ற பிற படிகளும் இருப்பிடம் மற்றும் வேலை தொடர்பான பயணத்தின் அடிப்படையில் திருத்தப்படும். இதன் பொருள் ஒரே சம்பள மட்டத்தில் உள்ள இரண்டு ஊழியர்கள் மாறுபட்ட படிகள் காரணமாக வெவ்வேறு மொத்த வருவாயைப் பெறலாம்.


NPS மற்றும் CGHS பங்களிப்புகள் (மதிப்பீடு செய்யப்பட்ட) தேசிய ஓய்வூதிய முறை (NPS) பங்களிப்புகளில் ஏற்படும் தாக்கம்:

 அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10% பங்களிக்கின்றனர், அதே நேரத்தில் அரசாங்கம் 14% பங்களிக்கிறது. இந்த பங்களிப்புகள் சம்பள திருத்தங்களைத் தொடர்ந்து அதிகரிக்கும். 


மத்திய அரசு சுகாதாரத் திட்டம் (CGHS):

 CGHS இன் கீழ் கட்டணங்கள் திருத்தப்பட்ட சம்பள நிலைகளின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். திட்டமிடப்பட்ட சம்பள திருத்தங்கள் (மதிப்பீடு செய்யப்பட்ட) 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்தி, பல்வேறு தரங்களுக்கான திட்டமிடப்பட்ட சம்பளங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் இங்கே: 


கிரேடு 2000* (நிலை 3): அடிப்படை ஊதியம் ரூ.57,456 ஆக திருத்தப்பட்டது, HRA மற்றும் TA மொத்த சம்பளத்தை ரூ.74,845 ஆகக் கொண்டுவருகிறது. கழித்த பிறகு நிகர சம்பளம்: ரூ.68,849. 


கிரேடு 4200* (நிலை 6): அடிப்படை ஊதியம் ரூ.93,708 ஆக திருத்தப்பட்டது, மொத்த சம்பளம் ரூ.1,19,798 ஐ எட்டியது. கழித்தலுக்குப் பிறகு நிகர சம்பளம்: தோராயமாக ரூ.1,09,977. 


கிரேடு 5400* (நிலை 9): திருத்தப்பட்ட அடிப்படை சம்பளம் ரூ.1,40,220, மொத்த மொத்த வருமானம் ரூ.1,81,073. நிகர வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம்: சுமார் ரூ.1,66,401. 


கிரேடு 6600* (நிலை 11): திருத்தப்பட்ட சம்பளம் ரூ.1,84,452, மொத்த வருமானம் ரூ.2,35,920 ஐ எட்டியது. கழித்தலுக்குப் பிறகு நிகர சம்பளம்: ரூ.2,16,825. 

(குறிப்பிடப்பட்ட அனைத்து திருத்தப்பட்ட சம்பள புள்ளிவிவரங்களும் மதிப்பிடப்பட்டவை; இறுதி அரசாங்க முடிவுகளின் அடிப்படையில் உண்மையான தொகைகள் மாறுபடலாம்.)



முன்னதாக ஊதியக்குழு குறித்து ஜனவரியில் வெளியான தகவல் தொகுப்பு


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Central Government has announced that the 8th Pay Commission will come into effect from January 1, 2026.


8th Pay Commission: Estimated Revised Salaries And Allowances For Government Employees8th Pay Commission Updates:


 The 8th Pay Commission aims to revise salaries and pensions for central government employees and pensioners.


8th Pay Commission:


 The Indian government has approved the 8th Pay Commission, set to revise salaries and pensions for over 1 crore central government employees and pensioners. Implementation is expected from January 1, 2026. A key focus is the "fitment factor", a multiplier used to adjust pay scales. 


While the 7th Pay Commission used a factor of 2.57,


 the 8th may propose an increase to 2.86, 


potentially raising the minimum basic salary from Rs 18,000 to Rs 51,480 and pensions from Rs 9,000 to Rs 25,740. Final recommendations will be made by the appointed commission members.


Understanding the 8th Pay Commission's Impact on Salaries and Allowances (Estimated)


The 8th Pay Commission is set to bring significant changes to the salary structure of government employees. Here's what you need to know:


*Revised Allowances and Basic Pay Adjustments* (Estimated)

Along with basic salary adjustments, other allowances like House Rent Allowance (HRA) and Travel Allowance (TA) will also be revised based on location and job-related travel.


This means two employees on the same pay level may receive different gross earnings due to varying allowances.


*Impact on NPS and CGHS Contributions (Estimated) National Pension System (NPS) Contributions:*


 Government employees contribute 10% of their basic pay and dearness allowance (DA) to NPS, while the government contributes 14%. These contributions will increase following salary revisions.


Central Government Health Scheme (CGHS): Charges under CGHS will be updated based on revised salary levels.


Projected Salary Revisions (Estimated)

Using a fitment factor of 2.28, projected salaries for various grades have been calculated. Here are some examples¹:


*Grade 2000* (Level 3): Basic pay revised to Rs 57,456, with HRA and TA bringing gross salary to Rs 74,845. Net salary after deductions: Rs 68,849.


*Grade 4200* (Level 6): Basic pay revised to Rs 93,708, with gross salary reaching Rs 1,19,798. Net salary after deductions: approximately Rs 1,09,977.


*Grade 5400* (Level 9): Revised basic salary of Rs 1,40,220, with total gross earnings of Rs 1,81,073. Net take-home pay: around Rs 1,66,401.


*Grade 6600* (Level 11): Revised salary of Rs 1,84,452, with gross income reaching Rs 2,35,920. Net salary after deductions: Rs 2,16,825.


(All the revised salary figures mentioned are estimated; actual amounts may vary based on final government decisions.)


பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திர பிரதேச அரசு முடிவு

 


மத்திய அரசைப் பின்பற்றி தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திர பிரதேச அரசு முடிவு 


Andhra Pradesh government decides to increase working hours of workers in private companies to 10 hours, following the Union government


“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை” – தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆந்திரா அரசு முடிவு


முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.


தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திராவில் தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியிருப்பதாவது, “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது. உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.



”ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55 இன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்தது, இப்போது அது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.


தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திரப் பிரதேச அரசு அனுமதிக்கவுள்ளது. இதன்மூலம் உணவு இடைவேளையுடன் சேர்த்து ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இடைவேளை இல்லாத தொடர்ச்சியான வேலை நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. 75 மணி நேரமாக இருந்த ஓவர் டைம் உச்ச வரம்பு 144 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. பெண்கள் இரவு நேரப் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவற்றை நடைமுறைப்படுத்த தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவான சுழலை உருவாக்குவதற்காக இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசு கூறுகிறது.


சந்திரபாபு நாயுடுandhra pradesh government approves 10 hour daily workday

இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே.பரதசாரதி, "தொழில் செய்வதை எளிதாக்குதல் (EoDB) கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பிரிவுகளைத் திருத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விதிகளைத் தளர்த்துவது அதிக முதலீடுகளை ஈர்க்க உதவும்" என தெரிவித்துள்ளார்.


ஆனால் இவை தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்று தொழிற்சங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ் இந்த நடவடிக்கையை கண்டித்து, அதை திரும்பப் பெறக் கோரியுள்ளார்.


அவர், "பெரிய தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்த விதிகளைத் திருத்த மத்திய அரசிடமிருந்து மாநிலம் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை எதிர்த்து ஜூலை 9ஆம் தேதி நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில், ஆந்திர அரசு இந்த துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாளடைவில், இது 12 மணி நேரமாக அதிகரித்து விடுமோ என தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.


தொழிலாளர்களின் உடல்நலனை பாதிக்கும்: மருத்துவர்

இதேபோல மருத்துவர் டி. செல்வகுமார் என்பவரும் ஆந்திர அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பது அவர்களது உடல்நலனை பாதிக்கும். மேலும், செயல் திறனும் பாதிப்படையும். நிர்ணயிக்கப்பட்ட 8 மணி நேரத்தைக் கடந்து வேலை செய்யுமாறு மனிதர்களை நிரபந்திப்பது அறிவுபூர்வமான திட்டம் அல்ல" என தெரிவித்தார்.


உதவிக் கல்வி அலுவலர் தற்காலிக தெரிவுப் பட்டியல் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை



 உதவிக் கல்வி அலுவலர் தற்காலிக தெரிவுப் பட்டியல் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை


Assistant Education Officer Provisional Selection List - Education Officer Circular



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

 


இனி நகைக்கான ரசீது தேவையில்லை - தங்க நகைக் கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி


தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும்; நகைக்கான ரசீது தேவையில்லை.


ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.


ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.


முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...