கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாழ்தல் இனிது

 


வாழ்தல் இனிது


பசியறிந்து சோறு போட 

ஒருவர் இருக்கும் வரை..


சாப்பிட்டாயா எனக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை..


தாமதமாகும் இரவுகளில் 

எங்கிருக்கிறாய் என விசாரிக்க

ஒருவர் இருக்கும் வரை..


நோய் வந்தால் இரவுகளில் 

கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


குரல் மாறுபாட்டில் மன 

நிலையைக் கணிக்க

ஒருவர் இருக்கும் வரை..


போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என 

வழியனுப்ப 

ஒருவர் இருக்கும் வரை..


 எத்தனை படி ஆனாலும் வீட்டில்  கதவைத் திறந்து விட

ஒருவர் இருக்கும் வரை..


தோற்றுப் போய் திரும்புகையில் 

தோள் சாய்த்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


போ என்றாலும் விட்டுப் போகாது

சண்டை போட்டுக் கொண்டேனும் 

உடனிருக்க 

ஒருவர் இருக்கும் வரை..


மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து 

கொள்ள  ஒருவர் இருக்கும் வரை..


நம் கனவுகளை தம் கனவுகளாகத் 

தோள்களில் தூக்கி சுமக்க 

ஒருவர் இருக்கும் வரை..


எதற்காகவும் எவரிடமும் 

நம்மை விட்டுக் கொடுக்காத

ஒருவர் இருக்கும் வரை..


கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 

நானிருக்கிறேனென உணர்த்த

ஒருவர் இருக்கும் வரை..


தவறுகளைத் தவறென 

சுட்டிக் காட்டித் திருத்தும் 

ஒருவர் இருக்கும் வரை..


துயர் அழுத்தும் கணங்களில் 

அருகிருந்து கண்ணீர்த் துடைக்க

ஒருவர் இருக்கும் வரை..


மனக் குறைகளைப் புலம்பித் 

தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை



 *வாழ்தல் இனிது.


 *இந்த வாழ்க்கையும் இனிது.

💖💖💖💖💖💖💖💖💖💖


இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


 இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 

ஜூலை 19ல் ஒரு நாள் உண்ணாவிரதம். 

ஆகஸ்ட் 2,9,23,30 தேதிகளில் 4 மண்டலங்களில் போராட்ட ஆயத்த கூட்டம்,  

செப்டம்பர் மாத இறுதியில் சிறை நிரப்பும்  போராட்டம் 

நடத்த திருச்சியில் நடந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.





திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.


“மதயானை நூலை எழுதி வெளியிட்டதற்காக பாராட்டு விழா, நல்லாசிரியர் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா” என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.


“உங்கள் குடும்பத்தின் ஒருவராக இங்கு வந்துள்ளேன். எப்போதும் உங்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்” என உரையாற்றி மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கினோம்.


எழுச்சிமிகு இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைவருக்கும் அன்பும். நன்றியும்.



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 74:

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.


பழமொழி :
" Learning is a journey,not a race."

கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச் சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது - ரூசோ


பொது அறிவு :

01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?       

               1987 ஆம் ஆண்டு

02. இந்தியாவில்  உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?               

               ராஜஸ்தான் (Rajasthan)


English words :

economy.    -    பொருளாதாரம்

genuine      -     நேர்மையான


அறிவியல் களஞ்சியம் :

"முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.

மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது."


ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.



நீதிக்கதை

மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.

ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன.

அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், “ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.

கல்தச்சர் சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது.“ ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்”.

வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் “எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் “அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது.” என்றார்.

“இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” என்றார் கல்தச்சர்.

அதற்கு “ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?” என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் “யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”.

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.


இன்றைய செய்திகள்

30.06.2025

⭐ பேருந்துகளில் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்பவர்கள் (மாணவர்கள்) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

⭐10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.

⭐இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டஜன் கணக்கான உயிர்களைக் கொன்றன. காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்  பொதுமக்களை இழந்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀விம்பிள்டன் டென்னிஸில் 25வது ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவக் ஜோகோவிச் இலக்கு.

🏀 கிரிகெட்-
செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் அணி 1-6 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கிளீவ்லேண்டை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


Today's Headlines

✏️The Madurai bench of the High Court has ordered the police to register case and take action against those (students) who travel by standing on the stairs of bus or hanging on the  buses.

✏️ Public exams for class 10 students to be held twice a year from now on. CBSE announcement.

✏️ Israeli airstrikes kill dozens. Recent Israeli airstrikes in Gaza have claimed the lives of civilians
.
SPORTS NEWS

🏀Novak Djokovic aims for 25th Slam title at Wimbledon.

🏀 Cricket- St. Louis Cardinals came from 1-6 down to beat Cleveland 9-6.

Covai women ICT_போதிமரம்


உயர்கல்வி - அடுத்த 7 நாள்கள் - மிக முக்கிய நிகழ்வுகள்

 


உயர்கல்வி - அடுத்த 7 நாள்கள் - மிக முக்கிய நிகழ்வுகள் 


30.06.2025 NCET - IIT காரக்பூர் Last Date

Anna University BE EEE Stipended Course Last Date


01.07.2025 NIFT Registration Last Date


02.07.2025 10 AM JOSAA 3rd Round Seat Allocation Result

NCET IIT புவனேஸ்வர் Last Date

TNEA - Rank List - Discrepancies - Grievance Redressal Last Date - Approach nearest TFC with your Aadhar Card.


04.07.2025 NIFT Counselling Choice Filling Last Date 

IIT Kharagpur - First Selection List Release

IMU - BBA Second Selection List Release

FDDI - BDes BBA First Round Selection List Release


05.07.2025 NIT Warangal Telangana NCET - BEd Last Date Fees Rs.2000 / Rs.1000


07.07.2025 NIFT First Round Seat Allocation Result

 Tamil Nadu paramedical 19 Degree Courses Last Date Fees. Rs.500 and Diploma Nursing Last Date Fees, Rs.300

TNEA - BE Online Counselling Choice Filling for 7.5 Quota Special Category Students (PWD Sports Quota & Ex Service men)


விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு



 பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு


சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து மொத்தமாக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.


இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தி திணிப்பு நடவடிக்கையிலிருந்து பின் வாங்கியது மகாராஷ்டிரா அரசு



போராட்ட அறிவிப்பு - இந்தி திணிப்பு நடவடிக்கையிலிருந்து பின் வாங்கியது மகாராஷ்டிரா அரசு 


 மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை திரும்பப் பெற்றது அம்மாநில பாஜக அரசு


மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கும் முடிவைக் கைவிட்டது மகாராஷ்டிரா அரசு. மகாராஷ்டிராவில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை திரும்பப் பெற்றுள்ளது அம்மாநில பாஜக அரசு.


இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டது.


மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் மூன்றாவது பொதுவான மொழியாக இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வேறு ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாக கற்க விரும்பினால் அதற்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இது இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று கூறி எதிர்க்கட்சிகளும் மராத்தி மொழி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசின் முடிவுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1 ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரும் எதிர்ப்பு தெரிவித்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இருவரும் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.


இது இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று கூறி எதிர்க்கட்சிகளும் மராத்தி மொழி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசின் முடிவுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1 ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரும் எதிர்ப்பு தெரிவித்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இருவரும் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துவதாக அறிவித்தனர்.


இதேபோல அடுத்தடுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிவசேனா அறிவித்தது. இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு.


மகாராஷ்டிராவில் இந்தியை 3வது மொழியாக கற்பிக்கும் தீர்மானத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது.


இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பேசிய மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், "மொழிகள் எந்தத் தரத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு என்ன தேர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முன்னாள் எம்.பி டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.


இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும். அதுவரை, ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு அரசுத் தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, மகாராஷ்டிராவில் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருந்த பேரணி வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது. பள்ளிகளில் இந்தி திணிப்பு முயற்சியை எதிர்த்து நடைபெற இருந்த போராட்டம், அரசின் பின்வாங்கலால் வாபஸ் பெறப்படுவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...