கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு



06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.


மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் இருந்து தேர்வான 


🖤 அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியுடன் பாராட்டுச் சான்று - கேடயத்துடன் 

*அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது*


❤️ கற்றல் - கற்பித்தல் உள்ளிட்ட பன்முக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 76 பள்ளிகளுக்கு *பேராசியர் அன்பழகன் விருது* 


💙 கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4,552 தொடக்கப் பள்ளிகளுக்கு சிறப்பு விருது ஆகியவற்றை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கி, வாழ்த்தி மகிழ்ந்தோம். 


காவிரி கரைபுரண்டு ஓடும் திருச்சி மாநகரில் நம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கமித்த முப்பெரும் விழா இனிய அனுபவமாக அமைந்தது.



மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு


ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்கலாம் - கணக்கீட்டைப் பார்க்கவும்.
ஜூன் 2025 இல் AICPI-IW குறியீடு 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5 ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7வது சம்பளக் கமிஷன் சூத்திரத்தின்படி இந்த சராசரியை சரிசெய்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி (DA) தோராயமாக 58.85% ஆக இருக்கும்.

DA இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW தரவுகளின் அடிப்படையில் DA கணக்கிடப்படுகிறது. இது 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் அவை 3% அதிகரிப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரம் இறுதி DA உயர்வை தீர்மானிக்கும்.

DA (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100

இங்கு 261.42 என்பது குறியீட்டின் அடிப்படை மதிப்பு. இந்த சூத்திரம் CPI-IW இன் மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் கொண்டு DA ஐ தீர்மானிக்கிறது.

அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
புதிய அகவிலைப்படி ஜூலை 2025 முதல் அமலுக்கு வந்தாலும், அரசாங்கம் வழக்கமாக செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், பண்டிகைக் காலத்தை ஒட்டி அறிவிப்பது வழக்கம். இந்த முறையும், அதுவே நடக்க வாய்ப்புள்ளது, மேலும் இந்த அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வெளியிடப்படலாம்.

7வது சம்பள கமிஷன் இறுதி கட்டத்தில், 8வது கமிஷன் இன்னும் இழுபறியில் உள்ளது.
7வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைவதால், ஜூலை-டிசம்பர் 2025 இல் இந்த அகவிலைப்படி உயர்வு கடைசியாக திட்டமிடப்பட்ட அதிகரிப்பாக இருக்கும்.


8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அறிவிக்கப்பட்டாலும், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் வரவில்லை. ஏப்ரல் மாதத்திற்குள் ToR தயாராகிவிடும் என்றும் கமிஷன் பணியைத் தொடங்கும் என்றும் அரசாங்கத்திடமிருந்து அறிகுறிகள் இருந்தன, ஆனால் இதுவரை உறுதியான புதுப்பிப்பு எதுவும் இல்லை.

8வது சம்பள கமிஷன் 2 ஆண்டுகள் தாமதமாகலாம்.
முந்தைய சம்பள கமிஷன்களின் வரலாற்றைப் பார்த்தால், எந்தவொரு கமிஷனின் பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட 18 முதல் 24 மாதங்கள் ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், 8வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டுக்குள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி. இதன் பொருள் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தில் இன்னும் பல அகவிலைப்படி உயர்வைப் பெறுவார்கள்.

ஆறுதலான விஷயம்: நிலுவைத் தொகை பெறப்படும்.

தாமதம் ஏற்பட்டாலும், 8வது சம்பளக் குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அரசாங்கம் நிலுவைத் தொகையாக வழங்கும், அவை ஜனவரி 1, 2026 முதல் பொருந்தும் என்று கருதுகிறது. அதாவது, ஊழியர்களுக்குப் பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், நிலுவைத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும்.




ஆசிரியையை அவதூறாக பேசியதாக புகாருக்குள்ளான அலுவலர் இடமாற்றம் : புதிய APO பொறுப்பேற்பு

 

ஆசிரியையை அவதூறாக பேசியதாக புகாருக்குள்ளான அலுவலர் இடமாற்றம் : புதிய APO பொறுப்பேற்பு



ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - அதிர்ச்சி சம்பவம்



 ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட அரசு ஊழியர் தம்பதி - நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்


தற்கொலை தடுக்க அழையுங்கள்

மாநில அரசின் உதவி எண், 104,  டெலி மனசு எண், 14416 ஆகிய எண்களில் உதவி பெறலாம்.


உயிரை மாய்த்துக் கொண்ட சுப்பிரமணி திருச்சி RTO-வாகவும், அவரது மனைவி பிரமிளா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.


கடன் தொல்லை காரணமாக இம்முடிவை எடுத்ததாகவும், தங்களது மகள் வேறு சமுதாய இளைஞரை காதலித்ததால் விபரீத முடிவு எனவும் வேறுபட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருச்சியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, நாமக்கல் ஆண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.



இந்தத் தம்பதியின் மகன் மருத்துவப் படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், மகள் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்துள்ளார். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திருச்சியில் பணியாற்றி வந்த சுப்பிரமணி நாமக்கல் வந்துள்ளார்.


இந்த நிலையில், அதிகாலையில் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு தம்பதி இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கரூர் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அரசு ஊழியர்களான இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணையில் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியின் மகள், பெற்றோரின் எதிர்ப்பை மீறி அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



 இதன் காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்த சுப்பிரமணி - பிரமிளா தம்பதி விபரீத முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.



மகிழ் முற்றம் House System நோக்கங்கள் & படிவங்கள்

 


மகிழ் முற்றம் House System நோக்கங்கள் & படிவங்கள்


Goals of Magizh Mutram House System & Formats



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


05.07.2025 TETOJAC மாநில உயர்மட்டக் குழுக் கூட்ட முடிவுகள்

 

05.07.2025 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழுக் கூட்ட முடிவுகள்


05.07.2025 TETOJAC State High Level Committee Meeting Decisions


டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 05.07.2025 சனிக்கிழமை  மாலை காணொளி வழியே நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முடிவுகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Forms to be attached to get two-wheelers, four-wheelers and computers Loan - DSE Proceedings



கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் இணைக்க வேண்டிய படிவங்கள் - பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்


Forms to be attached by those wishing to purchase two-wheelers, four-wheelers and computers through Loan & Advances - Proceedings of the Financial Control Officer, School Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...