கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

A film changed Kerala school classrooms



கேரள பள்ளிக்கூட வகுப்பறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம்


The film that changed Kerala school classrooms


 கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது - மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்


படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.


கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது.


இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கேரளாவில் கிராமப்புரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி தேர்தலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் இடையேயான நட்புறவு, மகிழ்ச்சிகள், அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் ஆகியவை அழகாக படமாக்கப்பட்டு உள்ளன.


வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்சுகளில் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். முதல் வரிசை, 2-ம் வரிசை, 3-ம் வரிசை என தொடர்ந்து பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். முதல் வரிசையை போல கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர வைக்கப்பட்டு இருப்பார்கள்.


இத்தகைய வரிசை முறை என்பது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. அந்த வேறுபாடுகளை மாற்றும் நோக்கத்துடன் இந்த படத்தில் பள்ளி வகுப்பறையில் அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட்டு காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்தும் கருத்து இந்த படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்த படம் வெளியான பிறகு மாணவர்களின் பெஞ்ச் இருக்கை அமைப்பு தொடர்பான காட்சிகளுக்கும், அது வலியுறுத்தும் கருத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் உள்ள காட்சிகளின்படி இதுவரை கேரளாவில் உள்ள 6 பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனி கடைசி பெஞ்ச் இல்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



இதுகுறித்து படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத் கூறியதாவது:-


கேரளாவில் உள்ள பல பள்ளிகளால் எனது படத்தில் உள்ள வகுப்பறை பெஞ்ச் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 6 பள்ளிகள் ஏற்கனவே இதை அறிமுகப்படுத்தி உள்ளன. இன்ஸ்டாகிராம் வழியாக நாங்கள் அதை பற்றி அறிந்தோம். நான் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தொடக்கப்பள்ளியில் படித்தபோது அப்படித்தான் அமர்ந்திருந்தேன். இந்த காட்சியை படத்தில் வைத்தபோது பள்ளிகளில் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. இந்த படத்தை வெளியிட பல வகையிலும் சிரமங்களை சந்தித்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட தாமதத்துக்கு பிறகு படத்தை வெளியிட்டு உள்ளோம். படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் தியேட்டர்களில் கொஞ்ச நாட்களே ஓடியது. பின்னர் 7 மாதங்கள் கழித்து ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு உள்ளது.


கொல்லம் மாவட்டத்தில் வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய பெஞ்ச் மாற்றத்தை அமல்படுத்தியது. இந்த பள்ளியை கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் நிர்வகிக்கிறார். அவர் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.


இந்த படம் வெளியாவதற்கு 7 மாதங்களுக்கு முன்பே அவருக்கு படத்தை போட்டு காட்டினோம். அவருக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அவரது பள்ளியில் பெஞ்ச் முறையில் மாற்றம் செய்திருப்பது அவரது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு தெரியவந்தது. படம் வெளியானபோது அதை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அதுதான். ஓ.டி.டி.யில் வெளியான பிறகே நாங்கள் அதை பிரபலப்படுத்தினோம்.


அதைத்தொடர்ந்து மேலும் 5 பள்ளிகள் இந்த மாற்றங்களை செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


பள்ளியில் இத்தகைய இருக்கை முறை மாற்றம் என்பது புதியது அல்ல. கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசு 6 மாநிலங்களில் ஆரம்ப கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் இருக்கை முறை மாற்றத்தை அமல்படுத்த அறிவுறுத்தியது. ஆனால் அப்போது பள்ளி நிர்வாகத்தினர் யாரும் அதை அமல்படுத்த முன்வரவில்லை. இப்போது திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, கேரளாவில் உள்ள பள்ளிகளில் இத்தகைய மாற்றம் அமலுக்கு வர தொடங்கியுள்ளது.



Kalanjiyam App மூலம் Pensioners வீட்டில் இருந்தபடியே Life Certificate அளிக்கும் வழிமுறை


களஞ்சியம் செயலி மூலம் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்கும் வழிமுறை


Procedure for Pensioners to provide Life Certificate from home through Kalanjiyam Mobile App


 ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று அளிக்க தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள பாராட்டுக்குரிய வசதி களஞ்சியம் என்ற  Mobile App  மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நான் இன்று எனது வாழ்நாள் சான்று அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலம் ஆணையரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

       நாம் செய்ய வேண்டியது play store  சென்று களஞ்சியம் என்ற mobile app ஐ பதிவிறக்க வேண்டும்.

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


 தங்கள் PPO  போன்ற விபரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க PIN ஐ save செய்து உள்ளே சென்று Mustering என்ற option ஐ தெரிவு செய்து அதில் வரும் பச்சை நிற வட்டத்தில் தங்கள் முகத்தை கண்ணாடி இன்றி காண்பித்து இரண்டு அல்லது மூன்று முறை கண்களை சிமிட்டினால் உங்கள் வாழ்நாள் சான்று ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாக SMS உடனே வந்துவிடும். இந்த முயற்சியை பகலில் மட்டும் செய்ய வேண்டும்.

நன்றி.

ஆ.மீ‌.பார்த்தீபன்

இணை இயக்குநர் ஓய்வு தஞ்சாவூர்.


Income Tax Deduction - DEE Information

  

வருமான வரி பிடித்தம் - தொடக்கக் கல்வி இயக்கக தகவல்


Income Tax Deduction - DEE Information


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவும்.


1. தங்களது செல்பேசியில் Playstore சென்று Kalanjiyam App ஐ Update செய்யவும்.

2. பின்னர் களஞ்சியம் செயலியில் Income Tax Icon சென்று 2025-2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டிய முறையை தெரிவு செய்து Submit கொடுக்கவும்.

3. Income Tax Icon இல் Old Regime தெரிவு செய்தவர்கள் தங்களது சேமிப்பு, வீட்டுக்கடனுக்கான அசல் தொகை, வட்டித் தொகை, குழந்தைகளின் கல்விக் கட்டணம் போன்றவற்றிற்கான தொகைகளை குறிப்பிடவேண்டும். இல்லையேல் வருமான வரி அதிகமாக பிடித்தம் செய்யும்.

4. தங்களது வருமான வரிக்கான PAN எண் களஞ்சியம் இல் இல்லாமல் இருந்தால் உடனடியாக அதனை Update செய்யவும். இல்லையேல் வருமான வரி அதிகமாக பிடித்தம் செய்யும்.


குறிப்பு 1 - களஞ்சியமில் வருமான வரிக்கான PAN எண் குறிப்பிடாதவர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு 2 - அலுவலர்கள் தங்களது அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக இந்த விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


PGTRB Exam Notification 2025 - Total Vacancies : 1996

 


PGTRB Exam Notification 2025 Released - Total Vacancies : 1996


Total Vacancy - 1996


Online Application: 10.07.2025 முதல் 12.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்


Exam Date : 28.09.2025


Notification No. 02/2025 

 Date: 10.07.2025 


GOVERNMENT OF TAMILNADU 

TEACHERS RECRUITMENT BOARD 

3rd & 4th Floor, Puratchi Thalaivar Dr.M.G.R. Centenary 

Building, Perasiriyar Anbazhagan Kalvi Valagam, College Road, 

Nungambakkam, Chennai – 600 006. 

Website: https://www.trb.tn.gov.in


NOTIFICATION 


Post Graduate Assistant / Physical Director Grade - I / Computer Instructor Grade – I in School Education and other Departments in the Tamil Nadu Higher Secondary Educational Service – 2025

Applications are invited from the eligible candidates for appointment to the post of Post Graduate Assistant / Physical Director Grade – I / Computer Instructor, Grade – I in the Tamil Nadu Higher Secondary Educational Service for the year 2025 to be filled up by Direct Recruitment through on-line mode only up to 5.00 pm on 12.08.2025. 

Name of the Post & Scale of Pay  : 

Post Graduate Assistant / Physical Director Grade – I and Computer Instructor Grade-1 

(Rs.36900 – 116600) (Level – 18) 

in the minimum pay of Rs.36900


Service : 

Tamil Nadu Higher Secondary Educational Service


Post Code : 25 PGA


Total Vacancies : 1996



>>> Click Here to Download PG TRB Press News...



>>> Notification - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


District-wise SGT posts to be appointed



மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்:


District-wise Secondary Grade Teacher posts to be appointed


Ariyalur - 24

Chengalpattu - 37

Chennai - 22

Coimbatore - 63

Cuddalore - 86

Dharmapuri - 113

Dindigul - 91

Erode - 107

Kallakurichi - 82

Kancheepuram - 34

Kanniyakumari - 24

Karur - 61

Krishnagiri - 64

Madurai - 122

Mayiladuthurai - 16

Nagapattinam - 53

Namakkal - 50

Perambalur - 23

Pudukottai - 60

Ramanathapuram - 67

Ranipet - 37

Salem - 134

Sivagangai - 59

Tenkasi - 66

Thanjavur - 78

The Nilgiris - 11

Theni - 67

Tuticorin - 64

Tiruchirappalli - 87

Tirunelveli - 35

Tirupathur - 35

Tiruppur - 65

Tiruvallur - 66

Tiruvannamalai - 93

Tiruvarur - 56

Vellore - 33

Villupuram - 60

Virudhunagar - 97


Total = 2342


மாவட்ட மாறுதலுக்கான (Inter District) முதுகலை ஆசிரியர் (P.G. Teacher) காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு

 

 மாவட்ட மாறுதலுக்கான (Inter District) முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு

 



கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.


கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு.


கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...