கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.02.2021 (வியாழன்)...

 


🌹நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்.

நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்.

சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்.

மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்.

இதுதான் பலரது வாழ்க்கை.!

🌹🌹அடுத்தவரின் பிடிவாதத்தை திமிர் என்றும்

தன்னுடைய பிடிவாதத்தை மன உறுதி என்றும்

அழகாக பிரிக்கிறான் மனிதன்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - (தமிழ் வழி)

🎀🎀இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 159 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணைகள் வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பராமரிக்க வேண்டிய இருப்பு கோப்புகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🎀🎀கணினி ஆசிரியர் தேர்வு முறைகேடு புகார்!: அனைத்து தேர்வு மையத்திலும் விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

🎀🎀கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்: சீமான் எச்சரிக்கை

🎀🎀G.O 12 - EL Surrender ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

🎀🎀"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு.

🎀🎀பகுதிநேர ஆசிரியர்களின்  வாழ்வாதார போராட்டம் நேற்று 7வது நாளாக  நடைபெற்று வந்த நிலையில் நான்கு தலைமைகளின் ஆலோசனையின் படியும், கொடுத்த நம்பிக்கையின் படியும் தற்காலிகமாக ஒத்திவைக்கபடுகிறது.

விரிவான விளக்கம் பின்னர் தெரிவிக்கபடும்.

காத்திருப்பு போராட்க் குழு.

🎀🎀அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு புதுப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார். அதிமுகவுக்கு சசிகலா தேவையில்லை என ஏற்கனவே ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

🎀🎀எஸ்.சி, எஸ்.டி தனித்தொகுதிகள் போல் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி தொகுதி ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பாக நிறுவன தலைவர் செந்தில்ராஜா மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக மாற்றுத் திறனாளிகளை நிறுத்த ஒரே சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🎀🎀பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்பிய சசிகலாவை வழிமறித்து, அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாக்கல்.

மனு தாக்கல் செய்தவர் டி.ஆர்.பிரபாகரன் வழக்கறிஞர்

🎀🎀சசிகலா காலாவதியான மாத்திரை, காலாவதியான மாத்திரை நோயை குணப்படுத்தாது,பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்று சிவகங்கையில் நடந்த விழாவில் கூறிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், சசிகலாவை  மக்கள் ஏற்கவில்லை என்றார்.

🎀🎀சசிகலாவின் சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை, குடியிருப்புகளை அரசுடமையாக்கி அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா அதிரடி உத்தரவு.

திருவாரூர் மாவட்டத்தில் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் பறிமுதல்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துகள் பறிமுதல்

திருவாரூர் ஆட்சியர்

🎀🎀மதுரையில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, சசிகலா வருகை தொடர்பான கேள்விகளுக்கு, 

இது அரசு நிகழ்ச்சி, அரசு சம்மந்தப்பட்ட கேள்விகளை மட்டும் கேளுங்கள்’ என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு

🎀🎀அரசுக்கு கிரண்பேடி தரும் பிரச்சினைகள் குறித்து குடியரசு தலைவரிடம் தெரிவித்தேன்

கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளை குடியரசு தலைவரிடம் வழங்கினேன் 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

🎀🎀இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர் கண்ணீரை மத்திய அரசு எப்போது துடைக்கப்போகிறது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பணியாற்றினால், பாரதிய ஜனதா என்ற ஒரு கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசி உள்ளார்.

🎀🎀வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி கொடுக்கும் புகார்கள் மீது தமிழக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலை முறையாக சரிசெய்யப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

🎀🎀10 ஆண்டுகளாக உறுப்பினராக இல்லாத டி.டி.வி.தினகரன் அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார் 

டி.டி.வி தினகரனை நம்பி போனால் நடுரோட்டில்தான் நிற்கவேண்டும் 

18 எம்.எல்.ஏக்கள் அவரை நம்பி சென்று இன்று நடுரோட்டில் நிற்கின்றனர் 

முதல்வர் பழனிசாமி.

🎀🎀தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி உமாமகேஸ்வரி கலந்து கொண்டார்.

🎀🎀NLC நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்வு.

தமிழரல்லாதோர் 1550 பேரும் தேர்வாகியுள்ளனர்..

எனவே, அத்தேர்வை ரத்துசெய்து தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் தேர்வுமுறையை நடத்த வேண்டும்.

திருமாவளவன் MP

🎀🎀இவ்வளவு கொடூரமான மத்திய அரசை இதற்கு முன் பார்த்ததே இல்லை.

மம்தா பானர்ஜி

🎀🎀என்னைவிட என் சாதி தான் அவர்களுக்கு அதிகம் நினைவுக்கு வருகிறது ஆம், நான் ஒரு கள் இறக்கும் தொழிலாளியின் மகன் தான். குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்று முன்பு இருந்தது இப்போதும் சிலர் அப்படியே நினைக்கிறார்கள்.

பினராயி விஜயன்

🎀🎀NEP2020, NEET, வங்கி, UPSC, ரயில்வே, தபால் தேர்வுகளில் சமூகநீதிக்கு சாவுமணி அடித்த மத்திய பாஜக அரசு, மத்திய துறைகளின் இணைச் செயலாளர்களாக தமக்கு வேண்டிய ஆட்களை நேரடியாக நியமிக்கவிருக்கிறது.

OBC, SC, ST பிரிவினரைப் பாதிக்கும் சமூக அநீதியை பாஜக அரசு கைவிட வேண்டும்.

முக ஸ்டாலின்

🎀🎀இந்தியா முழுவதும் இதுவரை 65 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

செய்தி - தொடர்பாளர்கள்

🎀🎀7 பேர் விடுதலையில் நாடகமாடுவது மத்திய அரசாங்கம். அவர்களுக்கு துணையாக இருப்பது மாநில அரசாங்கம் 

- ராஜிவ் காந்தி, திமுக

🎀🎀முகமது நபி மீது அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு.

சென்னையை சேர்ந்த முகமது கெளஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

🎀🎀நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவுடன் சந்திப்பு.

🎀🎀6, 7, 8ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு - மூன்று பருவங்களுக்கும் குறைக்கப்பட்ட பாட திட்டங்களை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

🎀🎀சில கட்சிகள் மதத்தை வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கின்றன.ஆனால் அதிமுக அப்படியல்ல.

- முதல்வர் பழனிசாமி

🎀🎀தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்  அப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டாம் என்று கோரிக்கை- பிஜேபி ராகவன்.

🎀🎀ஒரே நாளில் சட்டசபை பொதுத்தேர்தல் நடத்தவேண்டும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அனுமதிக்ககூடாது - தேசிய, மாநில அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையரிடம்  வலியுறுத்தல்.

🎀🎀ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது. 

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது 

- முதல்வர் பழனிசாமி

🎀🎀மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல் பரப்புபவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்; அந்தந்த நாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு சேவை செய்ய முயற்சிப்பதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம்.

முடக்கப்பட்ட மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் டிவிட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்தியது டிவிட்டர் நிறுவனம்.

🎀🎀நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்று தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேச்சு - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல்.

🎀🎀அமமுக விலிருந்து விலகி யாரேனும் அதிமுகவில் இணைய விரும்பினால் கட்சித் தலைமை பரிசீலிக்கும் 

- முதல்வர் பழனிச்சாமி

🎀🎀ஸ்டாலின் அடுத்த முதல்வராக தமிழகத்தில் பொறுப்பு ஏற்பார். ஊழலில் திளைக்கும் அதிமுகவிற்கு தமிழக மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் - மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

🎀தெற்கு பசுபிக் கடலில் உள்ள லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.6 ஆக பதிவு.

இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோர பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

🎀🎀புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 78-வது நாளாக போராட்டம்.

🎀🎀ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

🎀🎀டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் மோடி கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்; மக்களவையில் பேசிய திருமாவளவன் குற்றச்சாட்டு.

🎀🎀பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

🎀🎀முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வரும் 20ஆம் தேதி டெல்லி பயணம் என தகவல். புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை இருவரும் திறந்து வைக்கத் திட்டம்

🎀🎀கொரோனா சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

🎀🎀பொருளாதாரத் தடைகளையும் மீறி வட கொரியா தனது அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் நவீனப்படுத்தி வருவதாக ஐ.நா. நிபுணா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

🎀🎀ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீட்டெடுப்பதில் ரஷ்யா மிகவும் ஆர்வமாக உள்ளது, ஆனால் அது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறது என கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

🎀🎀யார் காலில் விழுந்து பதவியை பெற்றாரோ அவருக்கே துரோகம் செய்தவர் முதல்வர், அவருக்கு மட்டுமன்றி தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகிறார்: கனிமொழி

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து கனிமொழிக்கு தெரியவில்லை என்றால் அவரது கண்ணில் கோளாறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். இதற்கு  கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்

எனக்கு கண்ணில் கோளாறு என்றால் அதனை சரி செய்து விடலாம். ஆனால் தமிழக முதல்வரால் தமிழ்நாட்டிற்கே கோளாறு என்று கனிமொழி கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி யார் காலில் விழுந்து பதவியை பெற்றாரோ அவருக்கே துரோகம் செய்தவர் என்றும் அவருக்கு மட்டுமன்றி தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகிறார் என்றும் கனிமொழி கூறினார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என கேள்வி எழுப்பிய ஓ பன்னீர்செல்வம், துணை முதல்வரான பிறகு அமைதியாகி விட்டார் என்றும் தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் விரைவில் வந்து கொண்டிருக்கிறது என்றும், அதிமுக ஆட்சியை நிராகரிப்போம் என்றும் கனிமொழி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார்

🎀🎀குட்கா வழக்கில் காட்டும் வேகத்தை தமிழக அரசு குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாமே என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டசபைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம்.

அதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள். முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர்நீதிமன்றம். மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் நேற்று ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம்.

இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

🎀🎀CPS குறித்த செய்தி: வல்லுநர் குழுவின் அறிக்கையினை பரிசீலித்து அரசாணைகள் வெளியிடப்படும்: அரசு சார்பு செயலாளர்: தேதி 03.02.2021

🎀🎀நீட் தேர்வில் ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் மதிப்பெண் அளிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...