கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (LKG and UKG classes Closed in Government Schools - School Education Department Announcement that the kindergarten classes conducted in the Anganwadis will be regularized and improved)...

 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை...


அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என அறிவிப்பு.





நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


1 முதல் 5 வகுப்பு வரை போதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 4500 பேர் காலிப்பணியிடம் உள்ளது என்றும், 


தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அங்கன்வாடிகளில் குழந்தைகள் வழக்கம் போல் சென்று படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினத்தந்தி




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...