கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 25, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.  ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உறவினர்களின் வழியில் பொறுமையுடன் செயல்படவும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும். 


பரணி : விழிப்புணர்வு வேண்டும்.  


கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும். 

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 25, 2022



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மறைமுக திறமைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.


ரோகிணி : மாற்றம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 25, 2022



குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவின் மூலம் மாற்றம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 


புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 25, 2022



குடும்பத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் புதிய அறிமுகமும், ஆதாயமும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள். 


பூசம் : ஆதாயம் ஏற்படும்.


ஆயில்யம் : அலைச்சல்கள் மேம்படும். 

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 25, 2022



உத்தியோகம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : மந்தமான நாள்.


பூரம் : கண்ணோட்டம் உண்டாகும்.


உத்திரம் : விவாதங்கள் நீங்கும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 25, 2022



மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும். 


அஸ்தம் : துரிதம் ஏற்படும்.


சித்திரை : ஆதாயகரமான நாள். 

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 25, 2022



அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




சித்திரை : இழுபறிகள் மறையும்.


சுவாதி : நம்பிக்கை உண்டாகும்.


விசாகம் : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 25, 2022



உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பத்திரம் சார்ந்த துறைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




விசாகம் : எதிர்ப்புகள் நீங்கும்.


அனுஷம் : முன்னேற்றமான நாள்.


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 25, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.


பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும். 


உத்திராடம் : கவனம் வேண்டும். 

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 25, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சமூக பணிகளில் மதிப்பு மேம்படும்.  பேச்சுக்களில் இனிமை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : கலகலப்பான நாள்.


திருவோணம் : மதிப்பு மேம்படும்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 25, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். சவாலான பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அவிட்டம் : அனுபவம் உண்டாகும். 


சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பூரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 25, 2022



குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலகியல் வாழ்க்கை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில உதவி கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




பூரட்டாதி : புதுவிதமான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...