கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி - EoI வரவேற்பு



தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - EoI) வரவேற்கப்படுகிறது.


செய்தி வெளியீடு எண்: 647


நாள்: 11.09.2026


தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - Eol) வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 


மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு உதவிகள், கலந்தாய்வு ஆதரவு மற்றும் கல்லூரி சேர்க்கைக்குப் பிந்தைய ஒருங்கிணைப்புப் பணிகளும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக வழங்கப்படவுள்ளன.


இந்த விருப்பக் கோரிக்கையானது (Eol), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.


இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: பரத் (7200738258) /யுரேகா (7373944312) / கார்த்திகேயன் (7338801434).


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...