Free medical treatment of up to Rs. 2 lakh for road accident victims; cash rewards of up to Rs. 1,00,000 for those who come to their rescue.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை, காப்பாற்றுபவர்களுக்கு ரூ.1,00,000 வரை ஊக்கப் பரிசுகள்
சாலை விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றி, பொன்னான நேரத்திற்குள் (Golden Hour) மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் அல்லது ஆம்புலன்ஸை வரவழைத்து உதவும் நபர்களுக்கு ₹5,000 ரொக்கப் பரிசும் நற்சான்றிதழும் வழங்கும் நற்கருணை உடையோர் திட்டம் (Good Samaritan Scheme) ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், இத்திட்டம் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தோடு இணைக்கப்பட்டு, விபத்தில் சிக்கியோரை விரைவாக மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய விவரங்கள் மற்றும் சலுகைகள்:
• சட்டப் பாதுகாப்பு:
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களை காவல்துறையோ அல்லது நீதிமன்றமோ சாட்சி சொல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. எந்தவித சட்டச் சிக்கல்களும் இன்றி அவர்கள் தாராளமாக உதவலாம்.
• ரொக்கப் பரிசு வரம்பு:
ஒரு தனிநபர் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 5 முறை வரை இந்த ₹5,000 பரிசைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
• தேசிய அளவிலான அங்கீகாரம்:
மிகச் சிறந்த முறையில் உயிரைக் காப்பாற்றியவர்களில் இருந்து ஆண்டுக்கு 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் ₹1,00,000 வரை சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.
• விபத்து சிகிச்சை உதவி:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்ட PM-RAHAT மற்றும் தமிழ்நாடு அரசின் நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் மூலம் விபத்துக்குள்ளான நபருக்கு முறையே ₹1.5 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை அவசரக்கால கட்டணமில்லா (Cashless) சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
அவசர காலத்தில் 108 என்ற ஆம்புலன்ஸ் எண்ணையோ அல்லது 112 என்ற தேசிய அவசர உதவி எண்ணையோ அழைத்து தாராளமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.