கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க G.O. No. 240 , Dated : 23.10.2026 வெளியீடு

 


ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க அரசாணை எண்.240 , நாள் : 23.10.2026 வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந 4-2) துறை


அரசாணை (ப) எண்.240 , நாள் : 23.10.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஐப்பசி 6


படிக்கப்பட்டவை


1. அரசாணை (நிலை) எண்.41, நிதித் (மை.ம.ஆ.பி) துறை, நாள் 13.02.2026.


2. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.14090/சஉதி-1(2)/2025, நாள் 09.06.2026 & 09.07.2026.


ஆணை:-


மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் ஓய்விற்கு பின் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக உடனடி நிவாரணமாக ரூ.20,000/- வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.


2. இதனைத் தொடர்ந்து, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க ஏதுவாக இந்திய நாட்டின் இறப்பு விகிதம் 6.5% என்ற அடிப்படையில் ஆண்டு ஒன்றிற்கு 4,456 பயனாளிகள் என்ற கணக்கீட்டில் நபர் ஒருவருக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.8.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


3. சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது அவர்களது ஈமச்சடங்கிற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20,000/- வழங்குவதற்காக, இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 1500 ஆக கணக்கில் கொண்டு ரூ.3,00,00,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.


4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.


"2235 – சமூக பாதுகாப்பும் நலனும் 60 ஏனைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் 200 ஏனைய திட்டப் பணிகள் மாநில செலவினங்கள் DU சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்களுக்கு இறுதி சடங்கிற்கு நிதியுதவி அளித்தல் 310 பங்குத் தொகைகள் 01 குறிப்பிட்ட நிதிக்கு தொகை கொடுத்தல்"


(IFHRMS DPC 2235 60 200 DU 310 01)


5. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஒரு "புதுப்பணி" (New Service) குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித்(வ.செ.பொ.-1)துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்ட மன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963 இல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித்(வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார். மேலும் இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2026-2027 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித்(வ.செ.பொ-1/ச.ந) துறைக்கு அனுப்பி வைக்குமாறு சமூக நல இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


6. இவ்வாணை நிதித் துறையின் அ.சா.எண். 14352368/ ச.ந4-2/2026, நாள் 22.10.2026-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண். 2026100718


(ஆளுநரின் ஆணைப்படி)


ம.பல்லவி பல்தேவ்

அரசு செயலாளர்


பெறுநர்.


சமூக நல இயக்குநர், சென்னை-5.


சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர், சென்னை-35.


முதன்மை மாநிலக் கணக்காயர், சென்னை-18.


முதன்மை மாநிலக் கணக்காயர், (தணிக்கை-I/II), சென்னை-18.


சம்மந்தப்பட்ட மாவட்டக் கருவூல அலுவலர்கள்


(சமூக நல இயக்குநர் வழியாக).


இருப்பிட தணிக்கை அலுவலர், சென்னை-9.



 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஒய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக.20,000 வழங்க அரசு ஒப்புதல்.


அரசாணையின் முக்கிய அம்சங்கள்


தகுதி: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்.


நிதியுதவி: இறந்த பணியாளரின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்கு செலவிற்காக  ரூ.20,000.


நிதி ஒதுக்கீடு: 1,500 பயனாளிகள் எனக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.3,00,00,000 (ரூ.3 கோடி) ஒதுக்கீடு செய்ய அனுமதி.


 IFHRMS DPC 2235 60 200 DU 310 01 என்ற கணக்குத் தலைப்பில் செலவினம் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் 23-10-2026 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 240, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் இயற்கை எய்தினால் அவர்களது இறுதிச் சடங்கிற்கான செலவினத் தொகையை (Funeral Expenses Fund) வழங்குவதற்கான ஆணை ஆகும்.


இந்த அரசாணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

• முக்கிய நோக்கம்: ஓய்வு பெற்ற சத்துணவு இறக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பங்களின்  சுமையைக் கணிசமாகக் குறைப்பதற்காக இந்த நிதி உதவித் திட்டம் தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

• பின்னணி: முன்னதாக 13.02.2026 அன்று நிதித்துறை வெளியிட்ட அரசாணை எண் 41 மற்றும் சமூக நல இயக்குநரின் பரிந்துரைக் கடிதங்களின் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசுச் செயலாளர் (திருமதி. மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப.) அவர்களின் ஆணைப்படி இந்த அரசாணை (ப) எண் 240 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க G.O. No. 240 , Dated : 23.10.2026 வெளியீடு

  ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்கள் இறக்கும் பட்சத்தில் ஈமச்சடங்கிற்காக ரூ.20,000/- வழங்க அரசாணை எண்.240 , நாள் : 23.10.2026 வெளியீடு  >...