கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு

 


அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு


📌திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது 

இப்பள்ளியின் தண்ணீர் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


📌காலாண்டு விடுமுறை காரணமாக, 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த அரசு தொடக்கப்பள்ளி, திங்கட்கிழமை திறக்கப்பட்டது


📌ஆசிரியர்கள் மற்றும் காலை உணவு பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்தபோது, தண்ணீர் தொட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


📌தண்ணீர் தொட்டிக்குள் மலம் கழிக்கப்பட்டிருந்ததை கண்டு ஆசிரியர்கள், காலை உணவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்


📌இதையடுத்து உடனடியாக அந்த தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது


📌சமூக விரோதிகளின் அட்டூழிய சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும்


📌ஆனால், பள்ளி தண்ணீர் தொட்டிக்குள் மனிதக்கழிவு கலந்திருந்தது பற்றி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது


📌 காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் தலைமை ஆசிரியர் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது


📌இந்த தகவல் 2 நாட்களுக்கு பிறகு தெரியவந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் முற்றுகையிட்டனர்


📌பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சம்பவம் பற்றி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்


📌பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில், பழநி கீரனூர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை எனத் தகவல்


📌அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மலம் கழித்த சமூக விரோதிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு

  அரசு தொடக்கப்பள்ளி தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு 📌திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது ...