தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் இன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சை மானோஜிப்பா வீதியில் உள்ள டிகேஆர் (TKR) பள்ளி கட்டடம் பாழடைந்து இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாநகரின் முக்கியப் பகுதியான மானோஜிப்பா வீதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான டிகேஆர் (TKR) நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டடம் தற்போது முறையான பராமரிப்பின்றி, முற்றிலும் பாழடைந்த நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
டிகேஆர் (TKR) பள்ளி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் பாழடைந்து காணப்படுவதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்தில் எப்படி மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கிறீர்கள்? என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்வி பயின்று வரும் இந்த பள்ளி மாணவர்களை, உடனடியாக அருகில் உள்ள பாதுகாப்பான வேறொரு பள்ளிக்கு மாற்றலாமா என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் தர தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.