கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census) - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்



சாதிவாரி கணக்கெடுப்பு (Caste Census) - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்


தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி சர்வே எடுக்க ஆணையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


புதிய அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சனை, வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 8 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி, சமூகநீதி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைத்தல் போன்ற சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.


கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது, ‘‘அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, சாதிவாரி கணக்கெடுப்புக்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்கப்படும். அதன்மூலம் சாதிவாரி, சமூகப் பொருளாதார நிலை குறித்து அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.


முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் *பள்ளி க...