கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர் அச்சம்

 


கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது சக ஊழியர்களால் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் மற்றும் வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நெல்லை அண்ணாநகரைச் சேர்ந்த ஜோதிவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல செய்த மனு: நான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தேன். இந்நிலையில் என்னை குவாச்சிப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாற மனுவில் கூறப்பட்டிருந்தது.


மனுவை நீதிபதி பி.புகழேந்தி அவர்கள் விசாரித்தார். மனுதாரர் தரப்பில், ‘இடமாறுதல் உத்தரவு தண்டனை வழங்கும் நோக்கம் கொண்டது. அதிகார வரம்பு இல்லாத முதன்மைக் கல்வி அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் உத்தரவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் தான் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.


அரசு தரப்பில், ‘மனுதாரருக்கும் முதன்மை கல்வி அலுவலருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. மனுதாரர் தொடர்ந்து அதே பணியிடத்தில் நீடித்தால் கல்வி அலுவலரின் நிர்வாக பணிகளுக்கு இடையூறு ஏற்படும்’ எனக் கூறப்பட்டது.


பின்னர் நீதிபதி, மனுதாரரின் இடமாற்ற உத்தரவு அதிகார வரம்பு இல்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருப்பதால் இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் பணியில் சேரலாம், அக்டோபர் 26 வரை அவர் முதன்மைக் கல்வி அலுவலரின் தனி உதவியாளராக எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது.


தன் மீது மனுதாரரின் புகாரின் பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கல்வி அலுவலர் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. இதனால் வழக்கில் மனிதவள மேம்பாட்டு செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.


அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அல்லது பிற பணியாளர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம், 1989-ன் கீழ் எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்டோபர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு - அரசாணை வெளியீடு

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியீடு G.O.Ms. No : 83 ,  Dated : 19-10-2026 ரூபாய் மூன்று ல...