கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2022 முதல் ஆண்டுவாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கோரி 5 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்


01.01.2022 முதல் ஆண்டுவாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கோரி ஐந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் 01.01.2022 முதல் ஆண்டுவாரியான பதவி உயர்வுப் பட்டியல்களைத் தயாரித்து, தகுதியான ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு








வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தக் கோரி, தற்போது ஐந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு வழக்குகள் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றன.


09.06.2026 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி நீதியரசர் பி.டி. ஆஷா (Hon'ble Mrs. Justice P.T. Asha) அவர்கள் பிறப்பித்த உத்தரவுகளின்படி,..


1. இடைநிலை ஆசிரியர் நிலையிலிருந்து தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு,


2. இடைநிலை ஆசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


3. பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு,


4. பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு


ஆகிய பதவி உயர்வுகளுக்கு 01.01.2022 முதல் உரிய ஆண்டுவாரியான பேனல்கள் தயாரித்து, சட்ட விதிகளின்படி பதவி உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்த உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.


இவ்வழக்குகளில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


01.01.2022 முதல் ஆண்டுவாரியான பேனல்கள் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்படாததால், தற்போது இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வரும் விசாரணைகளில் நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கை எடுக்கிறது என்பது ஆசிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வரும் திங்கள் கிழமை (16-11-2026) அன்று நீதியரசர் P T ASHA அவர்கள் முன்னிலையில் 41வது வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2022 முதல் ஆண்டுவாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கோரி 5 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்

01.01.2022 முதல் ஆண்டுவாரியான பேனல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக் கோரி ஐந்து நீதிமன்ற அவமதிப்பு...