கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2026 | School Morning Prayer Activities


திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:55.செங்கோன்மை

குறள் எண்:546

குறள்:

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்:

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.


பழமொழி :

Make hay while the sun shines.

காலத்தைக் கூர்மையாகப் பயன்படுத்து.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. பேப்பர், உணவு அடைக்கப்பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை தெருவிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ வீசாமல் குப்பை தொட்டியில் மட்டுமே போடுவேன்.

2. நெகிழி பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.


பொன்மொழி :

வாழ்க்கையில் உயர்வு என்பது நாம் அடையும் வெற்றியில் மட்டுமல்ல; பிறர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் நல்ல மாற்றத்திலும் இருக்கிறது.


Thought for the Day :

True greatness lies not only in the success we achieve, but also in the positive difference we make in the lives of others


பொது அறிவு :

1. இந்தியாவின் தற்போது முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் எது?

சிக்கிம்.

2. இந்தியாவில் உள்ள முதியோர்களின் பாதுகாப்பு அவசர உதவி மற்றும் பராமரிப்பு சேவைகளை எளிதில் பெறுவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது?

ஜீவன். 


English words :

1. Arrogant - கர்வமுள்ள - Haughty

2. Benevolent - நற்குணமுள்ள - Kind


புவியியலும் சுற்றுசூழலும் :

கடற்கரை: நாம் இப்போது தமிழ்நாட்டின் கடற்கரைக்கரைகள் குறித்து காணப் போகிறோம்
தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் சுமார் 1,076 கி.மீ.
இது இந்தியாவின் முக்கியமான நீண்ட கடற்கரைகளில் ஒன்றாகும்.
சென்னை மெரினா கடற்கரை உலகின் நீண்ட நகர்ப்புற கடற்கரைகளில் ஒன்றாகப் புகழ்பெற்றது.

NMMS :

MAT

திசை தொடர்பான கணக்கு

ஒரு சிறுவன் வடக்கு நோக்கி நிற்கிறான். அவன் கடிகார திசையில் (Clockwise) 90° திரும்பி 5 கி.மீ நடக்கிறான். பிறகு எதிர்-கடிகார திசையில் 90° திரும்புகிறான். இப்போது அவன் எந்த திசையை நோக்கி இருப்பான்?

A. கிழக்கு

B. வடக்கு

C. தெற்கு

D. மேற்கு

விடை: (B) வடக்கு


நவம்பர் 24
அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்

சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.

இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார்.

    1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
    2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.
    மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.
    2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.

நீதிக்கதை

மூடநம்பிக்கையை வென்ற அறிவு

ஒரு அழகான கிராமத்தில் இனியன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாகச் சில தவறான நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வந்தன.

ஒருநாள் காலை இனியன் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு கருப்புப் பூனை அவனது வழியைக் கடந்தது.

உடனே அருகில் இருந்த ஒருவர், “ஐயோ! கருப்புப் பூனை குறுக்கே சென்றுவிட்டதே! இன்று உனக்கு ஏதாவது கெட்டது நடக்கும். சிறிது நேரம் காத்திருந்து செல்!” என்றார்.

இனியனும் பயந்துபோய் அங்கேயே நின்றான்.

அப்போது அவனது தாத்தா அங்கு வந்தார்.

“இனியா! ஒரு பூனை உன் பாதையைக் கடப்பதால் உனக்கு எப்படித் தீங்கு ஏற்படும்? பூனை என்பது ஓர் உயிரினம். அதற்கும் நம்மைப் போலவே நடமாட உரிமை இருக்கிறது. நடப்பதற்கும் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று விளக்கினார்.

மற்றொரு நாள், கிராமத்தில் ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. சிலர், “இது ஏதோ கண்ணேறு அல்லது தீய சக்தியின் பாதிப்பு” என்று கூறினர்.

ஆனால் இனியனின் தாத்தா அந்தக் குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். மருத்துவர் பரிசோதித்து மருந்து கொடுத்தார். சில நாட்களில் குழந்தையும் குணமடைந்தது.

இதைக் கண்ட கிராம மக்கள் தங்களுடைய தவறான நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

அப்போது இனியன் கூறினான்:

“நாம் கேள்விப்படும் அனைத்தையும் உண்மை என்று நம்பக்கூடாது. எதையும் அறிவியல் சிந்தனையுடனும் பகுத்தறிவுடனும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்!”

அன்றிலிருந்து அந்தக் கிராம மக்கள் மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு, அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கினர்.

நீதி:

மூடநம்பிக்கை மனிதனைப் பயத்தில் வாழச் செய்யும். பகுத்தறிவும் அறிவியல் சிந்தனையும் அவனை உண்மையின் பாதையில் அழைத்துச் செல்லும்.

சிந்திப்போம்! கேள்வி கேட்போம்! உண்மையை அறிவோம்! 


இன்றைய செய்திகள்
24.11.2026

🗒️வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம்: 2 நாள் சிறப்பு முகாம்களில் 2.23 லட்சம் பேர் விண்ணப்பம் - தேர்தல் ஆணையம் .

🗒️பறவை காய்ச்சல் அச்சுறுத்தல்; தமிழக- கேரள எல்லையில்  கண்காணிப்பு தீவிரம்.

🗒️ தேசிய வனவிலங்கு வாரிய நிலைக்குழு கூட்டம்: தமிழக களப்பணியாளர் குமரேசன், சிறுமலை குழுவிற்கு விருது வழங்கியுள்ளனர்.

🗒️ஆசியாவின் திறன் வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்திலும், பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்திலும் உள்ளனர்.


🏀விளையாட்டுச் செய்திகள்

🏃🏻‍♀️பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரைஇறுதிக்கு நுழைந்த இந்தியா.

🏃🏻‍♀️பிரீமியர் லீக் - கோல் மழை பொழிந்த லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி.


Today's Headlines

🗒️ Voter List: 2.23 lakh people applied to add or correct their names in the voter list during the two-day special camps, said the Election Commission.

🗒️ Bird Flu Threat: Surveillance has been increased along the Tamil Nadu–Kerala border due to the bird flu threat.

🗒️ Wildlife Award: At the National Board for Wildlife Standing Committee meeting, Tamil Nadu field worker Kumaresan and the Sirumalai team received an award.

🗒️ Powerful Leaders in Asia: Chinese President Xi Jinping is ranked first, and Indian Prime Minister Narendra Modi is ranked second in the list of Asia's most powerful leaders.

🏀 Sports News

🏃🏻‍♀️ Women's Asian Champions Trophy Hockey: India has entered the semi-finals.

🏃🏻‍♀️ Premier League: Liverpool scored many goals, while Manchester United suffered a heavy defeat.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010

  புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010 ஒரு தொழிலா...