ஆதிதிராவிடர் நலத்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வில் மூன்று வாய்ப்புகள் – ஒரே நேரத்தில் கலந்தாய்வு
ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள் 2 ல் தேர்ச்சி பெற்ற மூத்த பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறையில் நேற்று பதவி உயர்வுக் கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கலந்தாய்வில், மூத்தோர் முன்னுரிமை அடிப்படையில் ஒரே நேரத்தில் மூன்று பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
1. முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை விரும்புபவர்கள் அதனைத் தேர்வு செய்யலாம்.
2. முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் விருப்பமில்லாதவர்கள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியைத் தேர்வு செய்யலாம்.
3. அதிலும் விருப்பமில்லாதவர்கள் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியைத் தேர்வு செய்யலாம்.
இந்த மூன்று வாய்ப்புகளும் ஆதிதிராவிடர் நலத்துறையின் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறையானது தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.
நேற்று கலந்தாய்வில் பங்கேற்று பதவி உயர்வுக்கான ஆணைகளைப் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் இன்று (14.11.2026) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி உயர்வுப் பணியிடங்களில் உடனடியாகப் பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள் இன்று தங்களுக்குக் கிடைத்த பதவி உயர்வுப் பணியிடங்களில் பொறுப்பேற்று வருகின்றனர்.
//தகவலுக்காக//

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.