கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகளில் இருந்து விடுவிப்பு



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் வழக்குகளில் இருந்து விடுவிப்பு


மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு


மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்று தமிழ்நாடு அரசு அரசாணை.


600 வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவிப்பு - தமிழ்நாடு அரசு


செய்தி வெளியீடு எண்: 1066


: 16.11.2026


செய்தி வெளியீடு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


அரசு முதன்மைச் செயலாளர்

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இனி அஞ்சல் துறை மூலம் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படும் - அரசாணை G.O. (Ms) No.176 , Dated: 16.11.2026 வெளியீடு

  பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இனி அஞ்சல் துறை மூலம் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படும் - அரசாணை G.O. (Ms) No.176 , Dated: 16.11.2026  வெளிய...