கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு SMC - 2 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி - CEO கடிதம்

 


பள்ளி மேலாண்மைக் குழு - 2 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி - CEO கடிதம் & பங்கேற்பாளர்கள் பட்டியல்


SMC Zonal Level Training ToT - CEO Proceedings and Participants List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனுப்புநர்


திரு. மு. கபீர், முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை மாவட்டம்


பெறுநர்


முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்


ந.க.எண்.076/பமேகு/ஒபக/2026 நாள். 13.11.2026


பொருள் : சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு மண்டல அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான (ToT) 25.11.2026 மற்றும் 26.11.2026 ஆகிய 2 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து. பார்வை மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06 அவர்களின் செயல்முறைக் ந.க.எண். 1338/அ11/பமேகு/ஒபக/2026, நாள்.06.11.2026 கடித


பார்வையில் காணும் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் 2026 செப்டம்பர் மாதம் தொடங்கி நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு 2026-2028 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மறுகட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பிரதிநிதிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் குழந்தைகளின் கல்வி மற்றும் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்தும் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் மாநிலம் முழுவதும் சீரான தரத்துடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் முதற்கட்டமாக மாநில முதன்மைக் கருத்தாளர்களை கொண்டு, மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான இரண்டு நாள் உண்டு, உறைவிட பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


1.மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான இரண்டு நாள் உண்டு


உறைவிடப் பயிற்சி


மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs) மற்றும் வட்டார மேற்பார்வையாளர்கள் (Block Supervisors) ஆகியோரை உள்ளடக்கி, மாவட்டத்திற்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில், மாநில முதன்மைக் கருத்தாளர்களைக் கொண்டு இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.


இப்ப பயிற்சியானது சென்னை மாவட்டம், Asha Nivas Social Service Centre, No.9, Rutland Gate 5th Street, Srirampuram, Thousand Lights West, Thousand Lights, Chennai-600006-இல் 25.11.2026 முதல் 26.11.2026 வரை நடைபெற உள்ளது. மண்டல வாரியாகப் பயிற்சியில் பங்கேற்கத் தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


இப்பயிற்சியைத் தொடர்ந்து மண்டல அளவில் பயிற்சி பெற்ற மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள், தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் (BRTEs) ஒருநாள் பயிற்சி வழங்குவர். அதன்பின்னர், பயிற்சி பெற்ற BRTEs மூலம் அந்தந்தப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அரை நாள் பயிற்சி வழங்கப்படும்.


2. பங்கேற்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்


1. பயிற்சியில் பங்கேற்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக் கருத்தாளர்கள், இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களுக்குரிய பயிற்சி நாளில், உரிய நேரத்தில் பயிற்சி மையத்திற்கு வருகை தர வேண்டும்.


2. பங்கேற்பாளர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற விருந்தினர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.


3. பயிற்சியின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேறிட, பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிற்சியின் அனைத்து அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்று, தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


4. பயணச் செலவினங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, பங்கேற்பாளர்கள் தங்களது பயணச் செலவுக்கான உரிய ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.


மேற்காண் பயிற்சியில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டுள்ள இணைப்பில் கண்டுள்ள பங்கேற்பாளர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக விடுவிப்புச் செய்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு


மாவட்ட வாரியான பங்கேற்பாளர்களின் பெயர் பட்டியல்


முதன்மைக் கல்வி அலுவலர் ~ ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை மாவட்டம்


நகல்

சார்ந்த வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), சென்னை மாவட்டம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இனி அஞ்சல் துறை மூலம் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படும் - அரசாணை G.O. (Ms) No.176 , Dated: 16.11.2026 வெளியீடு

  பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இனி அஞ்சல் துறை மூலம் பாதுகாப்பாக வீட்டிற்கே அனுப்பப்படும் - அரசாணை G.O. (Ms) No.176 , Dated: 16.11.2026  வெளிய...