கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு TETOJAC நிர்வாகிகளுக்கு அழைப்பு



20 அம்சக் கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு TETOJAC நிர்வாகிகளுக்கு அழைப்பு


டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் தலைமையில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு கடிதம் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 

ந.க. எண்.023060/51/2026, நாள் : 27.11.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி தொடக்கக் கல்வி அலகில் பணிபுரியும் ஆசிரியர்களின் டிட்டோஜாக் பேரமைப்பு முன்வைக்கும் 20 அம்ச கோரிக்கைகள் குறித்த விவரங்கள் விவாதிக்க மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறுதல் கூட்டத்திற்கு டிட்டோஜாக் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பாணை அனுப்புதல் - தொடர்பாக.


பார்வை:


1. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக் மாநில அமைப்பிடமிருந்து பெறப்பட்ட 29.09.2026 நாளிடப்பட்ட மனு.


2. சென்னை-9. தலைமைச் செயலகம், பள்ளிக் கல்வித் துறை கடித எண்.7962/தொக3(2)/2026-1, நாள்.03.11.2026.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) 20 அம்ச கோரிக்கைகள் குறித்து விவாதிக்கும் வகையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 30.11.2026 அன்று மாலை 3.30 மணியளவில் சென்னை-9, தலைமைச் செயலகம், பள்ளிக் கல்வித் துறை 6 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது.


இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் உரிய கால நேரத்திற்கு முன்பாகவே கூட்ட அரங்கிற்கு வருகை தருமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்

27-11-26


பெறுநர்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) நிர்வாகிகள்.


நகல்


அரசு செயலாளர்.


பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09


தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்