“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேடு தகவல்கள் குறித்த காணொளி
Video on the “Akal Vilakku” project explanatory manual information
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேடு தகவல்கள் குறித்த காணொளி
Video on the “Akal Vilakku” project explanatory manual information
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
‘அகல்விளக்கு’ திட்டம் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
‘‘9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் வரும் சிக்கல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இணையதளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அகல்விளக்கு’ திட்டம் செயல்படுத்தப்படும்’’ என 2024-25 பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தோம்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகல்விளக்கு திட்டத்தை இன்று தொடங்கிவைத்தோம். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் @regupathymla அவர்களும் @SMeyyanathan அவர்களும் வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டு மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
“பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’ அது போன்றதே ஆண்களால், பெண்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதும்!” என்ற தந்தை பெரியாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, மாணவிகள் நம்பிக்கையோடும் கல்வியைத் துணை கொண்டும் விடுதலைப் பெற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விழிப்போடு செயல்பட வேண்டும்.
மாணவிகளுக்கான 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் இன்று தொடக்கம்
மாணவிகளுக்கான 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை நாளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, அவருக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.
எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.
மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக செல்போன், இணையதள பயன்பாட்டாலும் மாணவ- மாணவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, அரசு தொடங்கவுள்ள இத்திட்டம் மாணவிகளுக்கு மனம், உடல் மற்றும் சமூக ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கி உள்ளது என்றனர்.
TN SPARK Term 1 Assessment Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a sc...