கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TANGEDCO - Revised Tariff Rates with Effect from 10.09.2022)...
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள புதிய மின்சார கட்டண உயர்வு...
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
புதிய மின் கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Release of Revised Counselling Schedule for Elementary Education Department Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 14-02-2022...
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் LKG, UKG வகுப்பு மற்றும் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Counselling Schedule for LKG, UKG class Handling and Surplus Secondary Grade Teachers working in Elementary Education - Additional instructions and Revised Counselling Schedule - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/இ1/2021, 14-02-2022...
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொது மாறுதலில் கலந்துகொண்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 24-02-2022 அன்று பணியில் இருந்து விடுவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Due to the forthcoming Urban Local Body Elections, the dates of the Transfer Counselling have been changed and new dates have been announced. Headmasters are also requested to relieve the Promoted and Transferred Teachers on 24-02-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்.25154 / அ1 / இ2 / 2021, நாள். 28.01.2022...
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு - திருத்திய அட்டவணை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 16932/ஐ1/2021, நாள்: 24-12-2021 வெளியீடு(Block Educational Officer Transfer & Promotion Counselling - Revised Schedule - Proceedings of the Director of Elementary EducationReleased)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...