கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பயனடையப் போகும் 19 கோடி PF பயனாளர்கள் - இரு தவணையாக வழங்க இருந்த வட்டியை ஒரே தவணையில் வரவு வைக்கும் EPFO...

8.50 சதவிகித வட்டி விகிதத்தை இ.பி.எஃப்.ஓ மொத்தமாக சுமார் 19 கோடி பி.எஃப் கணக்குகளில் வரவு வைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில்தான் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்திலிருந்து 8.50 குறைத்தது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த 8.50 சதவிகித வட்டி விகிதத்தையும் 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளாக வழங்குவதாகவும் இ.பி.எஃப்.ஓ அறிவித்திருந்தது.

பொதுவாக, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களால் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல்வேறு இடங்களில் அரசு முதலீடு செய்யும். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை பயனாளர்களுக்கு வழங்கும்.

அந்த வகையில் நீண்டகால அடிப்படையில் மேற்கொண்ட இந்த முதலீடுகள், கொரோனா பரவல் காரணமாக பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்தபோது, எதிர்பார்த்த வருமானத்தை வழங்காததால் இரு தவணைகளில் வட்டி விகிதம் வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த முடிவை இ.பி.எஃப்.ஓ அமைப்பு மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் தற்போதைய சந்தை நிலவரங்கள் எதிர்பார்த்த வருமானத்தை விட அதிகமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பைச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் 8.50 சதவிகித வட்டி விகிதத்தை இ.பி.எஃப்.ஓ மொத்தமாக சுமார் 19 கோடி பி.எஃப் கணக்குகளில் வரவு வைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எஃப் நிதியில் 15 சதவிகிதம் வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் இந்த ஃபண்டுகள் மைனஸ் 8.3 சதவிகிதம் வருமானத்தைக் கொடுத்தன. இது கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் 14.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால், ஈக்விட்டி ஃபண்டுகளும் நல்ல லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன. 09.12.2020-ம் தேதி இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் 46,000 புள்ளிகளையும் நிஃப்டி 13,500 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தில் வர்த்தகமாகின.

பள்ளிகள் திறப்பு - மாணவர் சேர்க்கை - தேவையின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்கள் (நாளிதழ் செய்தி)...

 கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.

இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை முடிவு - நாளிதழ் செய்தி...

 கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக, தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிகள் உள்ளதால், சுகாதார துறையின் அனுமதி பெற்ற பின், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என, முடிவு செய்து உள்ளனர். இதற்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம். 

NOTICE FOR CHILDREN OF COVID WARRIOR - MHFW - ALLOTTED MBBS SEATS - கொரோனா பாதுகாப்பு பணியில் உயிரிழந்தோர் வாரிசுகள் MBBS படிக்க விண்ணப்பிக்கலாம்...

 >>> CLICK HERE TO DOWNLOAD NOTICE FOR CHILDREN OF COVID WARRIOR - MBBS SEAT ALLOCATION REGARDING...


பள்ளிகள் திறப்பு, ஆன்லைன் நீட் தேர்வு பற்றிய வினாக்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில்...

 பள்ளிகள் திறப்பு, ஜேஇஇ தேர்வு, ஆன்லைனில் நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, 2019- 20ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால் 2020- 21ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் இன்று கலந்துரையாடினார்.


அதில் அவர் கூறியதாவது:

''ஆண்டுதோறும் இரண்டு முறை பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும். இந்த முறை 3 அல்லது 4 முறைகள் நடத்துவது குறித்துத் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஜேஇஇ பாடத்திட்டத்தைப் பல்வேறு வாரியங்கள் குறைத்திருக்கின்றன. சில மாநில வாரியங்கள் பாடத்திட்டக் குறைப்பு அவசியமில்லை என்று முடிவெடுத்துள்ளன. மத்திய அரசும் இதுகுறித்தும் ஆலோசித்து வருகிறது. 

இதுவரை நீட் தேர்வுகள் ஆஃப்லைன் முறையிலேயே நடந்து முடிந்திருக்கின்றன. மாணவர்கள் கோரிக்கையைப் பொறுத்து ஆன்லைனில் 2021 நீட் தேர்வை நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.

பொதுத் தேர்வுகளுக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்படும்.

இதுவரை 17 மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. கோவிட்-19 சூழல் மேம்பட்டவுடன் விரைவில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பலாம்''.

இவ்வாறு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.12.2020 (வெள்ளி)...

🌹பிரச்சனைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான்

பொறுமை அனைத்திற்கும் பதில் தரும்

அதற்கு காலதாமதம் ஆகும் ஆனால்

ஒருபோதும் தோற்றுப்போகாது.!

🌹🌹எல்லோர் மனதிலும் காயங்கள் உண்டு

அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம்

சிலர் கண்ணீரால்

சிலர் புன்னகையால்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒IAS,IPS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🍒🍒தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை என் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் அருகே வெள்ளக்கொண்ட அகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

🍒🍒அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்.

நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம் 

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

🍒🍒பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு - 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு

🍒🍒5 Days Mapping Skill Training - ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல் - SPD Proceeding வெளியீடு.

🍒🍒"தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைப்பு

🍒🍒நீட் தேர்வு ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளதா? விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🍒🍒டிசம்பர் 14 முதல் பி.எட் முதலாமாண்டு பல்கலைக்கழகத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. பல்கலைக்கழகம் அறிவிப்பு

🍒🍒பொறியியல் மாணவர்களுக்கு டிச.17 முதல் ஆன்லைன் செய்முறைத் தேர்வு: விதிமுறைகள் வெளியீடு

🍒🍒விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கும் பணி தீவிரம்

🍒🍒தமிழ்நாடு வேளாண். பல்கலையில் முதுநிலை, பிஎச்.டி. மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க டிச. 31-ம் தேதி கடைசி நாள்

🍒🍒37 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது ஒரு சவரன் தங்கம

🍒🍒மார்ச் 15 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள்?- போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என அரசு எச்சரிக்கை

🍒🍒 "7.5% இடஒதுக்கீட்டின் கீழ் கூடுதல் இடங்களுக்கு இன்று முதல் 14ம் தேதி வரை மீண்டும் மருத்துவ கலந்தாய்வு" - மருத்துவ கல்வி இயக்ககம்

🍒🍒7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக 161 MBBS இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு  திரும்பின என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

🍒🍒SPD - நில வரைபடத்திறன் பயிற்சி (Mapping Skill) 2020-21 ஆம் கல்வி யாண்டு - சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) பயிற்சி வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நாள் 10.12.2020

🍒🍒DSE - NMMS - பள்ளிக்கல்வி திட்ட ஆண்டு 2020-21 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means-cum-Merit Scholarship) தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர் 2020க்குள் முழுமையாக முடித்தல் - சார்பு -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🍒🍒தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு; பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

🍒🍒சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியை தொடர்வது குறித்து ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும்

 - பிரேமலதா விஜயகாந்த்

🍒🍒11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார்

இந்த ஆண்டு 2,38,456 மாணவர்கள், 3,06,710 மாணவியர்களுக்கு என 5,45,166 மாணவ மாணவியர்களுக்கு  வழங்கப்படுகிறது.

🍒🍒பாட்ஷா படத்தின் போது கட்சி ஆரம்பித்திருந்தால் ரஜினி எங்கயோ போயிருப்பார். ஆனால் இப்போது பக்குவப்பட்ட தலைவனாக வருகிறார் 

ரஜினி அரசியலுக்கு வந்தது அற்புதம், ஆனால் அதனால் அதிமுகவிற்கு எந்த தாக்கமும் கிடையாது 

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

🍒🍒ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி 

🍒🍒ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து

ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும்- நீதிபதி.

🍒🍒அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களை இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும் 

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🍒🍒மேற்குவங்கத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா பாதுகாப்பு வாகனம் மீது கற்கள் வீச்சு - உள்துறை அமைச்சர் அமித்ஷா 

உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்.

🍒🍒விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு நமக்கு  எதிரான அரசு.

- தமிழக அரசு மீது இயக்குனர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு.

🍒🍒அஞ்சல் சேமிப்பு கணக்கு - மினிமம் பேலன்ஸ் உயர்வு.

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில்

குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.500 ஆக

உயர்வு.

குறைந்தபட்ச தொகையை

பராமரிக்கவிட்டால் ரூ.100 அபராதம்

என்ற புதிய விதிகள் இன்று முதல் அமல்.

🍒🍒சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது முதற்கட்ட பரப்புரையை வரும் 13ஆம் தேதி தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

மதுரையில் இருந்து பரப்புரை தொடக்கம்

🍒🍒வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ரயில் மறியல் போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் - விவசாய சங்கங்கள்

தங்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க முன் வராததால், ரயில் மறியல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்.

🍒🍒வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

🍒🍒கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்; 5 நிமிடத்திலேயே தொற்றை கண்டறியும் சோதனை: இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு வெற்றி.

🍒🍒எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றம்.

🍒🍒தமிழக அரசின் வெள்ள பாதிப்பு

நடவடிக்கையில் நிறை குறைகள் உள்ளன;

தேமுதிக பொருளாளர் பிரேமலதா

விஜயகாந்த் பேட்டி.

🍒🍒கொரோனாவுக்கான இந்தியாவின் தடுப்பூசி மருந்து கோவாக்சின்; வரும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்.

🍒🍒கொரோனா தடுப்புக்காக ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து பீதியடையத் தேவையில்லை என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

🍒🍒Sputnik V கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் ரஷ்ய மக்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்த கூடாது என அந்நாட்டு அதிகாரிகள் அறிவுரை. இதற்கு ரஷ்ய மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

🍒🍒அமெரிக்காவில் 100 நாட்களில் 100 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜோ பைடன் முடிவு.

🍒🍒ஸ்பெயின் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

🍒🍒வேளாண் சட்டங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்து ஸ்டாலின் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார். குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை எனவும் தெரிவித்துள்ளார். 

🍒🍒தமிழக எம்.பி.க்கள் மற்றும் மக்களுக்கு ஆங்கிலத்தில்தான் இனி அலுவல் கடிதங்களை அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

துணை மருத்துவ பணியாளர்கள் குறித்து எம்.பி. வெங்கடேசனுக்கு இந்தியில் கடிதம் எழுதப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.                                        🍒🍒தமிழ்நாடு அடிப்படைப் பணி - அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

🍒🍒பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) உத்தரவு.

🍒🍒பள்ளி மாணவ மாணவியரின் ரத்தப் பிரிவு விபரம் சேகரிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🍒🍒கற்போம் எழுதுவோம் இயக்கம் மையத்தில் படிக்கும் கல்லாதோர்களை நேரில் பார்வையிட்டு பாராட்டி பரிசு வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் 

🍒🍒தமிழகத்தில், வரும் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக பேருந்து பயண அட்டை பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரிக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?

 ரேஷன் கார்டுகளில் உள்ள PHH / NPHH குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்?



தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.


💥 PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.


💥 PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


💥 NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.


💥 NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.


💥 NPHH-NC: ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...