கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7,100 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...


 சிவகங்கையில்  அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச் சுமை ஏற்படும்.


மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.


இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு வழங்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர்...

 


இன்றைய (01-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

பூர்வீக சொத்துக்களால் இலாபகரமான சூழல் அமையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : இலாபகரமான நாள்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : ஈடுபாடு அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

எதிர்பார்த்த தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.


திருவாதிரை : புத்துணர்ச்சி உண்டாகும்.


புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

வாக்குவன்மையின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். கொடுத்த கடன் வசூலாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடைமைகளில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : காரிய அனுகூலம் ஏற்படும்.


பூரம் : விருப்பங்கள் நிறைவேறும்.


உத்திரம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

மனதில் இருந்துவந்த சோர்வுகள் அகலும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சோர்வுகள் அகலும்.


அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படும்.


சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நெருக்கடிகள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் இலாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.


விசாகம் : இலாபம் மேம்படும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். நிர்வாகத்திறன் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சி உண்டாகும். தானிய சம்பத்துக்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகத்தால் சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : திருப்திகரமான நாள்.


அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.


கேட்டை : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். பணியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் உயரும். புதிய இலக்கை அடைவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.


திருவோணம் : சேமிப்புகள் உயரும்.


அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. அறிமுகமில்லாதவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி தொடர்பான அலைச்சல்கள் மற்றும் பதற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : நிதானம் வேண்டும்.


சதயம் : அனுசரித்து செல்லவும்.


பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 01, 2021


தை 19 - திங்கள்

எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த திருமண முயற்சிகள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் வயது தளர்வாணை பெற்று தேர்வு எழுதலாம் - CEO Proceedings...

 


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21ஆம்  கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத மாணாக்கர்க்கு வயது தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்...

>>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பணிக்கு புதிய மொபைல் ஆப்...

 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக சட்டசபைக்கு, மே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

 பயிற்சி வகுப்பு

கொரோனா காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில், அதிகபட்சம், 1,000 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள், போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் வழக்கு வராத வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. விரைவில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில், நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

பழுது விவரம்

முதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக, தனி, ‘மொபைல் ஆப்’ உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மொபைல் ஆப் வழியே, எந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது, எங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களை, மொபைல் ஆப் வழியே, உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் என, அனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.

G.O.No.309, Dated: 31-01-2021 - அரசு ஆலோசகராக சண்முகம் இ.ஆ.ப. நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு...

 


G.O.No.307, Dated: 31-01-2021 - தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப. நியமனம்...

 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...