கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல் Election Classக்கு எடுத்து செல்ல வேண்டியவை...

 


ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே  விண்ணப்பம் கொடுக்கலாம்.


தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... 

Voter ID யை  எடுத்து செல்க...

உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.

அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்


 >>> VOTER HELPLINE -MOBILE APP - Click Here...


முதல் Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை: 

1.Voter ID xerox

2.Election order xerox

3.Part No and Serial No

எடுத்து செல்க...


HOW TO KNOW VOTER ID CARD PART NUMBER SERIAL NUMBER IN 1 MINUTE - Click Here...


தேர்தல் பணி ஆணையில் Part No, Serial No, Votor ID No உட்பட அனைத்து அனைத்து தகவல்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளது ஆகவே ஆசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை.


 நாம் செய்ய வேண்டியது 3 மட்டுமே. 

1. படிவத்தில் கையொப்பம் இடவேண்டும். 


2. தபால் வாக்கு வீட்டு முகவரி அல்லது பள்ளி முகவரி எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை ☑️ செய்யவேண்டும்.


3. Voter ID, Election Duty Order Xerox எடுத்து செல்லலாம் (Part No, Serial No, Votor ID No சரிபார்த்துக் கொள்ள)...

அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு...

 தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13 A வில் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் A மற்றும் Bபிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசிதழில் தமிழக அரசு உத்தரவு...



இன்றைய (12-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : லாபம் அதிகரிக்கும்.


கிருத்திகை : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் எண்ணிய செயல்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் எதிர்பாராத விரயங்கள் நேரிடும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொதுப்பணி தொடர்பான செயல்பாடுகளில் பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : புரிதல் மேம்படும்.


ரோகிணி : விரயங்கள் நேரிடும்.


மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மூலம் பணிகளில் அலைச்சலும், பதற்றமும் நேரிடும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : முதலீடுகள் மேம்படும்.


திருவாதிரை : மதிப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணி செய்யும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்பார்ப்புகளின் மூலம் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : பொறுமை வேண்டும்.


பூசம் : செலவுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : குழப்பமான நாள்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூரம் : இழுபறிகள் குறையும்.


உத்திரம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

மாமன்வழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வங்கி கடன் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சிறு மாற்றங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பது நல்லது. தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


அஸ்தம் : ஆலோசனைகள் வேண்டும்.


சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பொதுக்காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களை நம்பி காத்திருக்காமல் தாங்களே பணிகளை செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.


சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


விசாகம் : கவனம் வேண்டும். 

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பிரியமானவர்களுக்காக விட்டுக்கொடுத்து மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாகனங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : சுபிட்சமான நாள்.


கேட்டை : லாபம் மேம்படும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

மனதை உறுத்திக் கொண்டிருந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : தீர்வு கிடைக்கும்.


பூராடம் : அனுகூலமான நாள்.


உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

சூழ்நிலைக்கேற்ப பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வாகனங்களை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


திருவோணம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தாயிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய செயல்பாடுகளில் ஈடுபடும்போது விழிப்புணர்வு வேண்டும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : லாபம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 12, 2021


மாசி 28 - வெள்ளி

திட்டமிட்ட காரியங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் மீதான விமர்சனங்கள் ஏற்பட்டு மறையும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் குறையும்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


வாக்களிப்பு மையங்களுக்கு வழங்கப்பட இருக்கின்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்...

 


கொரோனா தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம் , சமூக இடைவெளி அவசியம் - ஏன்?

 


கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

 கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை -

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,

பொது நல மருத்துவர், 

சிவகங்கை.



ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசியின் இந்திய வடிவமே  கோவிஷீல்டு  என்பதை அனைவரும் அறிவோம்.


ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட்டாக இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை 

 பிரேசில்,

அமெரிக்கா,

பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தி வருகின்றன.


ஆய்வின் இடைக்கால முடிவுகளை அவ்வப்போது நவீன மருத்துவ உலகின் பெயர்பெற்ற "லான்சட்" மருத்துவ இதழில்  அப்டேட் செய்கிறார்கள். 


இந்த மூன்றாம் கட்ட ஆய்வின் லேட்டஸ்ட் அப்டேட் 6.3.2021 அன்று வெளியிடப்பட்டது. 


 அந்த ஆய்வு முடிவில் முதல் டோஸ் கோவிஷீல்டுக்கும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கும் இடையே 12 வாரங்கள் இடைவெளி விடும் பொழுது  தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 81.3% என்றும், 


அதே இடைவெளியை 6 வாரங்களுக்குள் சுருக்கினால் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 55.1%  என்ற அளவில் குறைகிறது என்றும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


இந்த ஆய்வு முடிவுதனை பறைசாற்றுமாறு பிரிட்டன் அரசாங்கமும் கனடா அரசாங்கமும் அவர்களது நாட்டில் இரு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை 90 நாட்கள் என்று நிர்ணயம் செய்துள்ளனர். 


இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கும் குழு, இது குறித்து பிப்ரவரி மாத மத்தியில் கலந்தாலோசனை செய்தது.


ஆலோசனையின் முடிவில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பழைய முறைப்படியே 28 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


அதிகபட்சம் கூடுதலாக இரண்டு வாரங்கள் , அதாவது 42நாட்களுக்குள்  தடுப்பூசி பெற வலியுறுத்துகிறது. 


தடுப்பூசியை கண்டறிந்து ஆய்வு நடத்தி  வரும் நிறுவனம் 12 வாரம் வரை இரண்டாவது டோஸ் ஊசியை தள்ளி வைத்தால் நோய் தடுக்கும் திறன் 81.3% என்று கூறியுள்ள போதிலும்,

இந்த இடைவெளியை ஆறு வாரங்களுக்குள் சுருக்கினால் நோய் தடுக்கும் திறன் 55.1%ஆக குறைகிறது என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் போதிலும், 


இந்தியாவின் கோவிட் தடுப்பூசி பரிந்துரைக் குழு தொடர்ந்து 28 நாட்கள் இடைவெளியை பரிந்துரை செய்து வருகின்றது. 


இதற்கான காரணமாக குழு கூறுவது யாதெனில் "இந்தியாவில் தடுப்பூசிக்கு எந்த பஞ்சமுமோ தட்டுப்பாடோ வராது. இங்கு தான் பெரும்பான்மை தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே 28 நாட்களுக்குள் தடுப்பூசி போடுவது சிறந்தது." 


மேலும் கூறுவதாவது 

"ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டால் குறைவான எதிர்ப்பு சக்தியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இரண்டாவது ஊசியை உடனே அதாவது நான்கு வாரத்துக்குள் செலுத்திக்கொள்வது தான் சரி" என்கிறது. ( அறிவியல் ஆய்வோ ஒரு டோஸ் போட்டு 22வது நாளில் இருந்து 90 வது நாள் வரை சிறந்த எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்று கூறுகிறது) 


இருப்பினும், 

உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்டு குறித்த இடைக்கால வழிமுறைகளை 10.2.2021 அன்று வழங்கியது. 


அதில் கோவிஷீல்டின்  இரு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 8 முதல் 12  வாரங்களுக்குத் தள்ளிப்போடுவது நல்ல வழிமுறை என்று கூறியுள்ளது. 


உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து வழிமுறைகளைக் கூறும் வல்லுனர் குழுவில் இந்திய வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற முன்கள மருத்துவ ஊழியர்களில் பெரும்பான்மையினர்  தங்களது இரண்டாவது டோஸ் ஊசியை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தள்ளிப்போட்டு வருகின்றனர் என்று செய்திகளும் கள நிலவரமும் கூறுகின்றது. 


பொதுமக்களாகிய  அனைவரும் இந்திய கோவிட் தடுப்பூசி நெறிமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இரண்டாவது டோஸ் 28 நாட்களில் போடுவது சிறந்தது என்று கருதினால் அப்போது போட்டுக்கொள்ளுங்கள். 


நிகழ்கால அறிவியலின்படி, 42 நாட்களுக்குள் இடைவெளியை சுருக்கினால் Efficacy 55.1% என்றும் 


இடைவெளியை 84 நாட்கள் வரை நீட்டினால், 81.3% efficacy என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


இத்தகையதோர் ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது எனத் தெரிவிப்பது மட்டுமே எனது பணி. 


எனக்கான இரண்டாவது தடுப்பூசியை இந்த ஆய்வு வருவதற்கு முன்னமே எடுத்து விட்டேன். ஆயினும் இரண்டாவது டோஸ் இனிமேல் எடுக்க இருக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு குறித்தும்,


இந்திய அரசின் தடுப்பூசி வழிமுறை குழுவின் வழிகாட்டுதல்களையும் கூறிய திருப்தியில்  இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். 


இரண்டாவது டோஸ் தள்ளிப்போடுவது குறித்த வழக்கில்,

கற்றறிந்த சான்றோர் இடம்பெற்றுள்ள இந்திய கோவிட் தடுப்பூசி வழிமுறைக் குழுவின் தீர்ப்பே இங்கு  இறுதியானது.


அவர்கள் 28 நாட்கள் என்று தொடர்ந்து கூறிவருவதால் (அறிவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் இக்குழுவினரின் இந்த தீர்ப்புக்கு நேரெதிராக இருந்தாலும்)

மக்கள் அனைவரும் அதை கடைபிடித்தாக வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.  


ஆயினும் பல மருத்துவ முன் கள ஊழியர்கள் நிகழ்கால அறிவியலை மதித்து தங்களுக்கான இரண்டாவது டோஸை தள்ளிப்போட்டுவருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.


சிந்தியுங்கள் 

சிந்திப்போரே சிறந்தவர்கள்


நன்றி...


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரங்கள் 

1. Phase III இடைக்கால முடிவு லான்சட் 

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00528-6/fulltext


2. https://apnews.com/article/uk-study-2nd-virus-vaccine-shot-delay-53c40e579c3209a77ffc6ca798aff1a7


3. https://beta.ctvnews.ca/local/london/2021/3/9/1_5340124.html


4. https://beta.ctvnews.ca/national/coronavirus/2021/3/3/1_5331577.html


5. https://www.tribuneindia.com/news/chandigarh/beneficiaries-delaying-second-dose-on-purpose-says-expert-216160

ஒரே அரசுப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று - 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு...


 மன்னார்குடியில்‌ உள்ள அரசு மகளிர்‌ மேல்‌நிலைப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவிகள்‌ 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்‌ நேற்று மேலும்‌ 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருவாரூர்‌ மாவட்டம்‌ மன்னார்‌குடி அரசு மகளிர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ பிளஸ்‌ 2 படித்து வரும்‌ மாணவிகள்‌ 5 பேருக்கு கடந்த 6-ம்‌ தேதி கரோனா தொற்று இருப்‌பது பரிசோதனையில்‌ உறுதி செய்யப்பட்டது. விடுதியில்‌ தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள்‌ அனைவரும்‌ சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்‌ பட்டுள்ளனர்‌. 


மருத்துவமனையில்‌ அனுமதி 

இதையடுத்து, பள்ளியில்‌ பயிலும்‌ சக மாணவிகள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ என 300 பேருக்கு கடந்த 8-ம்‌ தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்‌, மேலும்‌ 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்‌ளது நேற்று தெரியவந்தது. 


இதையடுத்து, 11 பேரும்‌ மன்னார்‌குடி அரசு மருத்துவமனையில் ‌அனுமதிக்கப் பட்டுள்ளனர்‌. இதனால்‌, அப்பள்ளியில்‌ கரோனா தொற்‌றால்‌ பாதிக்கப்பட்ட மாணவிகளின்‌ எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்‌ளது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள்‌ விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ ராமன்‌ உத்தரவிட்டுள்‌ளார்‌.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...