கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் - ஆளுநர் தமிழிசை அறிவிப்பு...

 


புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததால் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கடந்த  புதுச்சேரி அரசின் உத்தரவுபடி  கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார்  மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்பு வரையிலான  மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு மதியம் 1  மணி வரை வந்து சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி  நடத்தப்பட்டன. அதன்பின்னர் அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என மாநில  துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  ஒப்புதல் அளித்து இதற்கான  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10  மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். மகே மற்றும் ஏனம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின்  வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள்.


பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 “முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1 ஏப்ரல் 2021 முதல்  தொடங்கும். இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 மற்றும் 12 வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது  குறிப்பிடத்தக்கது.

வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...

 Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day...


>>> வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...


வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும், பொறுப்புகளும்...

ELECTION 2021: TRAINING MANUAL AND CHECKLIST FOR ZO & PrO...

Duties and Responsibilities of the Presiding Officer...

 


வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் : 


* வாக்குப் பதிவு கருவிகளின் எண்ணிக்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது . உதாரணமாக 15 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 15 வேட்பாளர்கள் + ஒரு Nota ) , 31 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 31 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 47 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மூன்று வாக்குப் பதிவு இயந்திரமும் ( 47 வேட்பாளர்கள் - ஒரு Nota ) , 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் நான்கு வாக்குப் பதிவு இயந்திரமும் ( 63 வேட்பாளர்கள் - ஒரு Nota ) பயன்படுத்தப்படும்.


 * பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இயந்திரந்தின் வலது புறத்தின் மேல்புறத்தில் உள்ள Scrolling Switch ல் எண்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும்.


* வாக்காளர் பட்டியல் நகல் ( Marked Copy / Reference Copy ) களில் அனைத்து பக்கங்களும் தொடர் எண் 1 முதல் வரிசையாக எண்ணிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.


* குறிப்பாக வாக்குச் சாவடி வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் நகல்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக உள்ளனவா என்பதையும் அவை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு உரியதுதானா என்பதையும் துணைப்பட்டியல்களுடன் கூடியதுதானா என்பதனையும் சரிபார்க்க வேண்டும் . மேலும் வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டோர் குறித்த குறிப்புகள் ( PB , EDC , SV , AVSC AVPWD . AVCO ) தவிர வேறு குறிப்புகள் ஏதும் இல்லை என்பதனை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


* வாக்காளர் பட்டியலில் மையினால் கையொப்பமிட்ட சான்றிதழ் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் மேல் ( Marked Copy ) இணைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்.


• ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகளில் ( Tendered Ballot Papers ) உள்ள தொடர் எண்கள் சரி பார்க்கப்பட வேண்டும் . . போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தேர்தல் முகவர்களின் மாதிரி கையொப்ப நகல் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும் . இது வாக்குச் சாவடி முகவர்களின் நியமன கடிதத்தில் உள்ள வேட்பாளரின் கையொப்பத்தினை சரிபார்த்துக்கொள்ள உதவும். 


* வாக்குப் பதிவு முடியும் வரை , வாக்குப் பதிவின் போது குறிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் நகலினை வாக்குச் சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்ல வாக்குச் சாவடி 19 முகவர்களுக்கு அனுமதிக்கக் கூடாது . வாக்குச் சாவடிக்கு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலின் நகலினை , ( Relief ) மாற்று முகவரிடமோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலவலரிடமோ கொடுக்க வேண்டும்.


* பச்சைத்தாள் முத்திரையை ஒட்டுவதற்கு முன் , தான் முத்திரையின் வெண்மைப் பகுதியில் வரிசை எண்ணை அடுத்து , கீழே வாக்குச் சாவடி தலைமை அலுவலர் அவருடைய முழு கையெழுத்தை இட வேண்டும் . அதில் , கையொப்பமிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது வாக்குச் சாவடி முகவர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.


 * பச்சைத்தாள் முத்திரையின் ( Green Paper Seal ) வரிசை எண்ணை வாக்குச் சாவடி தலைமை அலுவலரும் குறித்துக்கொண்டு முகவர்களையும் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் .


* வாக்குச்சாவடியிலுள்ள மற்றும் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன் , கார்டுலெஸ் போன் , வயர்லெஸ் செட் ( வாக்குச் சாவடி தலைமை அலுவலர் தவிர ) பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .


>>> Click here to Download - TN Election 2021 -  Presiding Officers Training Booklet (PDF)...



2021 ஏப்ரல் 30க்குள், Primary HM / BT/Middle HM / BEO / High School HM / PG / Hr Sec HM அனைவருக்கும் General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் தொடக்கக்கல்வி இயக்குநருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


High Court has directed the Director of School Education and the Director of Elementary Education to conduct the Promotion Counselling after conducting General Transfer Counseling for all Primary HM / BT / Middle HM / BEO / High School HM / PG / Hr Sec HM by April 30, 2021 W.P.(MD)No.3354 of 2021 and Batch...

>>> Click here to Download Judgement Copy...


Elections - தமிழ்நாடு சட்டசபைக்கான பொதுத் தேர்தல், 2021 - Postal Ballot Papers (அஞ்சல் வாக்குச்சீட்டுகள்) நடைமுறைகள்...

 


>>> Elections - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2021 - Postal Ballot Papers (அஞ்சல் வாக்குச்சீட்டுகள்) நடைமுறைகள்...


தமிழ்நாடு சட்டசபைக்கான பொதுத் தேர்தல், 2021 - வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்...

 >>> தமிழ்நாடு சட்டசபைக்கான பொதுத் தேர்தல், 2021 - வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள் - செய்தி வெளியீடு எண்(P.R.No.): 186, நாள்: 11-03-2021...


நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா? - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு...

நிதித்துறை ஒப்புதல் அளிக்க, இம்மாத இறுதி வரை மட்டுமே அவகாசம் உள்ளதால், ஊக்க ஊதியம் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு, உயர் கல்வி கற்ற ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் உயர்கல்வி படித்தால், ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என, கடந்தாண்டு, மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், அரசாணை வெளியிடுவதற்கு முன், உயர்கல்வி படித்தவர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற தமிழக அரசு, ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ளோர், நிதித்துறை ஒப்புதல் பெற்று, பணிப்பலன் அனுபவிக்கலாம் என, கடந்தாண்டு, அக்., மாதம் அறிவித்தது. அதில், மார்ச் 31க்குள், நிதித்துறை ஒப்புதல் பெற வேண்டுமென அவகாசம் அளித்தது. உடனே, ஊக்கத்தொகை பெற தகுதியுள்ளோர் பட்டியல் திரட்டப்பட்டது. கோவை மாவட்டத்தில், 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதி பெற்றிருந்தனர். நடப்பாண்டு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. தற்போது வரை, நிதித்துறை ஒப்புதல் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறுகையில்,''நிதித்துறை ஒப்புதல் பெறுவதற்கான அவகாசம் இம்மாத இறுதியில் முடிகிறது. தேர்தல் ஆயத்த பணி நடக்கும் இச்சமயத்தில், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற, கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...